Hi nan riasabi
nan last 7 yearsa oruthara lov panran last year thaan romab poradi engagment mudinjathu
coming july 12 marg fix panni irukaanga .
yanaku unga tips waynum
en lover bayangara kovamana aala ethuku eduthaalum sunda varum chinna visayathuku kooda sunda varum. aana athellam maximum oru naal sariaaidum.
ippo konja naala yanaku konjum bayama iruku enga mrg piragu intha maari sunda wanthu ippo than marg panitomay inimay iva enga poiduvanu alatchiyama vitruvaro en mayla lov koranjudumo nu bayama iruku.
plz en lover ra nan rmba lov panra rmba pudikum rmba rmba pidikum. entha karnathuku avara mis panna virumbala .
plz ethum advice pannunga
plzzzzzzzzzzz.
bye
வனிதா
சொல்றேன்னு எல்லாத்தையும் சொல்ல முடியுமா?ஆனாலும் என் வாயே நிக்காது,நான் பேசிக்கிட்டே இருப்பேன்,நீ பேசிகிட்டே இரு நான் என் வேலைய பார்க்கிறேன்னு இருப்பார்,நான் கூட்டு குடும்பத்தில் வளர்ந்தேன்,எப்பவுமே வீடு முழுவது ஆள் இருப்பாங்க,ஆனால் இங்க தனியா கிடக்க ரெம்ப போர்,எனக்கு வீடு முழுக்க ஆள் வேனும்,எப்பவுமே வேலை இருந்துகிட்டே இருக்கனும்,சிரிக்க கிண்டல் பண்ண ஆள் வேனும்,அவர் எனக்கு அப்படியே எதிர்,வீட்டோட ஒட்ட வைப்பது ரெம்ப கஷ்டம்,முன்னாடி இருந்த சண்டையெல்லாம் இப்ப இல்ல,பழகிடுச்சு இப்படி தான் இருக்கும் நாம அதுக்கு தகுந்த மாதிரி மாத்திக்கனும் என்று எவ்வளவோ மாறிட்டேன்,இது தான் வாழ்க்கை அனுபவமோ என்னவோ
என்றும் அன்புடன்
ரேணுகா
Sacrifice anything for Love,But don't sacrifice Love for anything...
(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா
தனிஷா
//இதில் ஆணாதிக்கம், பெண் ஆதிக்கம் என்றெல்லாம் இல்லை. ஒருத்தர் மேல் இன்னோருவர் அன்பும், புரிதலும் இருந்தால் யாராவது ஒருத்தர் கண்டிப்பாக விட்டு கொடுப்போம். //
ஆமா தனிஷா கோபமே அன்பின் இன்னொரு வகையான வெளிப்பாடு தான்,அன்பு உரிமை இருப்பதால் தான் கோபம் வருகிறது,அதனால் அப்பப்ப சண்டை போடலாம் தப்பில்லை,சண்டை போட்டால் தான் பிரியம் அதிகம் ஆகுமாம்,என்னவர் போரடிக்குது வா சண்டை போடலாம் என்று இப்படி தான் சொல்லுவார் - அது ஒரு கனாகாலம்,இப்ப நான் அப்படி கூப்பிட்டு கிட்டு இருக்கேன்
என்றும் அன்புடன்
ரேணுகா
Sacrifice anything for Love,But don't sacrifice Love for anything...
(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா
கோபம்
//பாபு அண்ணா கோபப்காரர் என்பதை என்னால் நம்பவே முடியல. பார்த்தால் அப்படி அமைதியான பேஸ்.//
ஹி..ஹி.. அது பசுத்தோலுங்க.. (பழமொழியை முழுசா சொன்னா, "பொடா"வை மறுபடியும் கொண்டு வந்து, புடிச்சு உள்ள வச்சுடுவாங்களோன்னு பயமாக்கீது..)
//ஸ்வீட் விரும்பாதவங்களுக்குதான் அதிகம் கோபம் வரும்னு கேள்விப்பட்டிருக்கேன்.//
இந்த கண்டுபிடிப்பு கொஞ்சம் புதுசா இருக்கு. ஆனா என் விசயத்துல ரொம்ப தப்பா இருக்கே.. ஸ்வீட் சாப்பிடுறதை குறைச்சுக்கோ குறைச்சுக்கோன்னு நம்ம வீட்டு அம்மா இங்க குரைச்சிக்கிட்டே இருக்காங்க.
எப்ப நம்ம பரம்பரைச் சொத்து (அதாங்க.. சர்க்கரை வியாதி) நமக்கு கிடைக்கப்போவுதோன்னு ஒரு பய எதிர்பார்ப்புல நாட்களை நகர்த்தினாலும், எப்படியும் நாப்பதுக்கு மேலே எதுவும் சாப்பிட முடியாதுங்கிற நம்பிக்கையில இப்பவே அள்ளி கட்டிக்கிட்டு இருக்கேன். நான் விடுற மூச்சுக் காத்துக்கூட ஸ்வீட்டா இருக்குன்னு அவங்க சொல்றதுல நிஜம் இல்லாம இல்ல.. :-) இந்நாள் வரைக்கும் சுகர் லெவல் தாண்டல.. என்னைக்கு பாகிஸ்தான் ராணுவமா மாறி எல்லைத் தாண்டப்போவுதோன்னு பயமா இருக்கு..
கோபம்!
அடடா,
அண்ணா ,என் கணிப்பும், ஆராய்ச்சியின் முடிவும் சரிய்யான்னு தெரியாம குழம்பிப்போய் இருந்தேன்.
இப்ப பாபு அண்ணா மூலமா தவறுன்னு நிரூபணம் ஆகிடுச்சு.
இனிமே என் கணவருக்கு அழ,அழ ஸ்வீட்டை திணிக்கிற வேலை எனக்கு மிச்சம்!
ரொம்ப நன்றிங்ண்ணா!
பாபு அண்ணா
பாபு அண்ணா உங்களை ஒரு இடத்தில் கவனிக்காமல் பாபு என்று குறிப்பிட்டுள்ளேன். மன்னிக்கவும் திருத்த முடியவில்லை. பதிலளி ஆப்ஷம் மட்டுமே உள்ளது
ரேணு நீங்க சொல்றது கண்டிப்பா கரைக்ட். அன்புக்குரியவங்க கிட்டதான் நாம் கோபப்பட முடியும். சண்டை வந்து அதன் பின் வரும் நிகழ்ச்சிகள் மனதுக்கு மிகவும் பிடிக்கும்
கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!
Adhira & Admin anna
நம்ம பாபு அண்ணே வந்திருக்காக...
பதிவு ஒன்னு போட்டிருக்காக...
வாம்மா..... "அதிரா"...
அதிரடியாய் பதில் ஒன்னு தாம்மா...
அண்ணா... என்னை மாட்டிவிட்டீங்க... உங்களை மாட்டிவிடனும்'னு ஒரு ஆசை. :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
பாபு அண்ணா
அண்ணா சாந்த சொரூபிகளை நம்ப கூடாது போலிருக்கே. பங்ஷன் அன்று பேசியபோது சத்தம் கூட வெளியே வரவில்லை ரொம்ப மெதுவாக பேசினீங்க. என் ஹஸ் கூட பாபு ரொம்ப காம்டைப் என்று சொன்னார். அங்கேயும் மதுரை ஆட்சிதான் போல இருக்கு என்று என்னை வைத்து கிண்டல் பண்ணிக் கொண்டு இருந்தார். அதை வைத்துதான் பாபு அண்ணா ரொம்ப அமைதி என்றேன். இப்போதான் தெரியுது யார் ஆட்சி என்று. பொடா சட்டம் எல்லாம் நமக்கில்லை. சோ நீங்க தாரளமா புலினு சொல்லலாம்.
கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!
கோவக்கார சுண்டெலி
ஸ்வீட் சாப்பிட்டால் கோவம் வராது என்பது முற்றுமுழுக்க தவறு கிடையாது.மாறாக சுகர் அதாவது தேனீருக்கு போடுவோமே சுகர் அல்லது கற்கண்டு இது பதட்டத்தையும் கோவத்தையும் தணிக்கும் என்பதுதான் ஆராய்ச்சியில் சொல்லப்பட்ட முடிவு.நான் முன்பு படித்த ட்றைவிங்க் ஸ்கூலில் அவ்ர்கள் டேபிளில் சுகர் [சிறிய சிறிய கட்டிசுகர்} வைத்திருப்பார்கள் பரீட்சைக்கு செல்ல புறப்படுபவர்கள் வாயில் போட்டுக்கொள்ள. இதைத்தான் கீதா படித்த ஆட்டிக்கலில் கொஞ்சம் மிகைப்படுத்தி போட்டிருக்கிறார்கள்.
என் ஹஸ் க்கு கோவம் வரும்போது நான் அப்பாவிபோல் மூஞ்சியை வைத்துக்கொண்டு நியாயமான கோவம்தான் என்று மண்டையை ஆட்டி வைப்பேன்[நடிப்பு அல்லது விளையாட்டு என்று எடுத்துக்கொள்ளலாம்]
எதிர்தரப்பில் அடச்சீ இதோட போய் கோவத்தை வீணாக்குறோமே என்று நொந்து போய் மாறிவிட நேரம்பார்த்து அப்போ பேசியதை அதேமாதிரி கதச்சுக்காட்டுவேன் பிறகு சிரிப்போடு அதே விடயம் சுமூகமாக பேசப்படும்.இந்த டிப்ஸ் யாராவது விரும்பினால் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
சுரேஜினி