"தளிகா" "சந்தியா" சமையல்கள் "அசத்த போவது யாரு???

அன்பு தோழிகள் அனைவருக்கும் என் இனிய வணக்கங்கள்...

அதிரா தொடங்கிய சமைத்து அசத்தலாம் பகுதி- 1,2,3,4,5 வெற்றிகரமாக நிறைவு பெற்று இப்பொழுது பகுதி - 6 வெற்றியை நோக்கி சென்று கொண்டு உள்ளது....

ஒவ்வொரு முறையும் அசத்த போவது யாரு??என்ற தலைப்பில் நாம் செய்தவைகளை பட்டியலிட்டு அதிகம் சமைத்தவரை வெற்றியாளராக அறிவித்து கொண்டுஇருக்கிறேன்

இந்த முறை நாம் இருவரது குறிப்புகளை செய்து வந்தோம்,நாம் செய்த குறிப்புகளை இங்கே பட்டியல் இடுகிறேன்,அதில் ஏதேனும் தவறு இருந்தாலோ அல்லது விடுபட்டு இருந்தாலோ தோழிகள் சுட்டிகாட்டும்படி கேட்டு கொள்கிறேன்,எல்லாம் சரியாக இருப்பின் பிரச்சனை இல்லை,

வாருங்கள் தோழிகளே "தளிகா" "சந்தியா" சமையல்கள் அசத்த போவது யாரு?

முடிவுகள் வழக்கம் போல் புதன் கிழமை வெளியாகும்

இலா இந்த முறை டைட்டில் இல்லை என்று இத்த்னை சந்தோஷமா?அதிரா உங்களுக்கு ஏதோ டைட்டில் தர போவதாக சொல்லி இருக்காங்க..என்ன டைட்டிலா இருக்கும்

கிருத்திகா உங்க வாழ்த்துக்கு நன்றிகள்,நீங்க முதல் தடவையே பட்டம் வென்றதில் ரெம்ப மகிழ்ச்சி

செல்வி மிக்க நன்றி,நீங்களும் தொடர்ந்து எங்களுக்கு கை கொடுக்கனும்...

கீதா ஆச்சல் ரெம்ப நன்றி,நீங்க தொடர்ந்து எங்களோடு இனைந்திருக்க வேண்டும் என்பதே அன் ஆவல்

சாய் கீதா நீங்க தொடர்ந்து கலந்துக்குவேன் என்று சொன்னதில் மிக்க மகிழ்ச்சி,நீங்க ஜோக்கா சொன்னாலும் சீரியசா சொன்னாலும் நான் கரெட்டா கனக்கு எடுத்தாகனும்,

ஸ்ரீ ரெம்ப நன்றி,நான் உங்களுக்காகவே புதன் காலையில் வெயிட் பண்ணுவேன்,இரண்டாவது முறையா அசத்தல் ராணி ஆகிட்டீங்க,வாழ்த்துகள்

என்றும் அன்புடன்
ரேணுகா
Sacrifice anything for Love,But don't sacrifice Love for anything...

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

நான் தந்த ஸ்வீட் எப்படி இருந்துசுன்னு சொல்லவே இல்ல.... ரேணுகா... கா.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஆகா அசத்தி விட்டீங்கள்...
முதலாம் இடத்தைப் பிடித்து அசத்தல் ராணியாக தெரிவான "ஸ்ரீ" க்கு அன்பான வாழ்த்துக்களும் நன்றிகளும்.

2ம் இடத்தைப் பிடித்துள்ள "இமா"விற்கும், 3ம் இடத்தைப் பிடித்துள்ள "வானதி"க்கும், "கிருத்திகா"விற்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும் தெரிவித்துக்கொள்கிறேன். ஆச்சரியம் என்னவென்றால் எல்லோரும் ஒவ்வொரு குறிப்புக்கள் வித்தியாசத்திலேயே வெற்றிபெற்றிருக்கிறீங்கள்.

இதனை இவ்வளவு அழகாக பட்டியல் போட்டு, எம்மை அசத்திவிட்ட ரேணுகாவிற்கும் நன்றிகள்.

மாலைபோட்ட ஆஸியாவிற்கு நன்றி.

மஞ்சள் றோஜா தந்த ESMS செல்விக்கும் நன்றி.

அரபு நாட்டு இனிப்புக்கள் தந்த வனிதாக்கு நன்றி.. (இனிப்புத் தந்து மலிவாக முடிச்சிட்டீங்க:))

தலைகால் புரியாமல் ஓடித்திரிந்தாலும், எமது சந்தேகங்களை தீர்த்துவைத்து, எமக்கு ஒத்துழைத்த தளிகாவிற்கும் நன்றி. (ஊருக்கும் போகும்போது நேராக நடக்கோணும் சரியோ?:))

அட நம்ம ஜலீலாக்கா... பொன்னாடையா மிக்க நன்றி (ஓகே வாயை மூடிட்டேன்:))

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அதிரா நீங்க வந்தேலே ஒரு குஷி தான். இலங்கை தமிழ் சூப்பர்.

தலைகால் புரியாமல் ஓடித்திரிந்தாலும், எமது சந்தேகங்களை தீர்த்துவைத்து, எமக்கு ஒத்துழைத்த தளிகாவிற்கும் நன்றி. (ஊருக்கும் போகும்போது நேராக நடக்கோணும் சரியோ?:))

இத நினைத்து ஒரே சிரிப்பு

ஜலீலா

Jaleelakamal

இந்த அதிரா லொல்லு தாங்கலைப்பா... என்ன ஜலீலா, நான் சொல்றது சரி தானே... நம்ம அராப் ஸ்வீட்ஸ் அருமை தெரியாம பேசிபுட்டாங்க சின்ன புள்ள.;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அதுக்குள்ள கணக்கெடுத்து அசத்திட்டீங்களா.. இன்று காலையில சந்தியா ரவியின் ஃப்ரைட் ரைஸ் செய்தேன். அதை கணக்கில சேர்த்தாலும் ஒன்னும் ஆக போறதில்லை. சமைத்து அசத்திய முப்பத்தேழு பேருக்கும் எனது வாழ்த்துக்கள்.
பட்டாடை போட்டுகிட்டு பகட்டாக திரியும் அதிரா வாழ்த்துக்கள்.. அது தான் பட்டாடடையே கிடைசிடுச்சே.. அப்புரம் இந்த ஹால்மார்க் கார்ட் என்ன பண்ண போகுது .
மோதிரம் போட்டு மினுக்கும் ரேணு. கணக்கெல்லாம் சூப்பரா எடுக்கறீங்க.. என்ன பொறுமை . உங்களுக்கும் வாழ்த்துக்கள்.
தலைகால் புரியாம இருக்கும் தளிகாவுக்கு.. பரவாயில்லையே பாசாயிட்டே போல.. ஆத்தா நான் பாசாயிட்டேன்....
எங்கிருந்தாலும் வாழ்த்துக்கள் சந்தியா ரவிக்கு... எப்பவாவது வந்து பார்தீங்கன்னா எல்லாரையும் கொஞ்சம் கண்டுகினா நல்லா இருக்கும்...

வனிதா "வாயாலே பாயாசம் காய்ச்சரீங்க " அதிராக்கு ஸ்வீட் பிடிகாதாம் எனக்கு ஒரு பாக்ஸ் பாக்லவா அனுப்புங்க...

"If you want to feel rich, just count the things you have that money can't buy."

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

அசத்தல் ராணி ஸ்ரீ மற்றும் அசத்தல் இளவரசிகள் இமா,வானதி மற்றும் கிருத்திகா ஆகியோருக்கு என்னுடைய வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.
இப் பகுதியை நடத்திச் செல்லும் அதிராவிற்கும்,பொறுமையாக கணக்கெடுக்கும் ரேணுகாவிற்கும் விசேஷட வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்.
இமா இம் முறை நீங்கள் இளவரசி பட்டம் பெற்றது எனக்கு மிகவும் சந்தோசமாக உள்ளது. உங்கள் முயற்சி திருவினையாக்கி விட்டது.

நன்றி,
"அன்பான சொல் மருந்தாக இருப்பதோடு வாழ்த்தவும் செய்கிறது"

ஆசியா அக்கா உங்கள் வாழ்த்துக்கு நன்றி,நீங்கள் போட்ட பொன்மாலை அழகா இருக்கு,இப்ப கழட்டி சுவத்துல மாட்டினேன்

செல்வி நீங்கள் தந்த மஞ்சள் ரோஜா அழகாக இருக்கு,எனக்கு மஞ்சள் கலர் பிடிக்கும் என்று உங்களுக்கு எப்படி தெரியும்?

வனிதா ஸ்வீட் ரெம்ப நல்லா இருந்தது,நீங்க அனுப்பினது நல்லா இல்லாமல் இருக்குமா?நான் அப்பவே சொல்ல நினைத்தேன்,ஆனால் இன்று அறுசுவை நெட்வொர்க் எரர் என்றே வருகிறது,இப்பதான் அறுசுவையே வருது அதுவும் ஸ்லோவா இருக்கு...காலையில் முடிவு போடுவதே சிரமம் ஆயிடுச்சு,

தளிகா இப்படி தலை கால் புரியாத எப்படி ஊருக்கு போறது,நல்லா குதிச்சுட்டு மறக்காம பாஸ்போர்ட் டிக்கெட் எடுத்துகிட்டு ஏர்போர்ட் போங்க,டபுள் சந்தோஷத்தில் மறந்திடாதீங்க

ஜலிலா அக்கா எனக்கு மோதிரமா ரெம்ப நல்லா இருக்கு,இந்த முறை நிஜமாலும் கஷ்ட்டமா போச்சு,உங்க குறிப்பு கனக்கு எடுத்தப்ப எவ்வளவு குழப்பம் இருந்ததோ அதே போல் இந்த முறை,எனக்கு இந்த வாரமே பிஸியாகி விட்டது அந்த டென்ஷன் எல்லாம் சேர்ந்துவிட்டது

வாழ்த்துக்கு நன்றி இலா,உங்க கடைசி குறிப்பை கடைசி வரைக்கும் கானாம்.சாரிப்பா கோவிக்காதீங்க,

வத்சலா உங்க வாழ்த்துக்கும்,பாராட்டுக்கும் நன்றி

என்றும் அன்புடன்
ரேணுகா
Sacrifice anything for Love,But don't sacrifice Love for anything...

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

என் சந்தேகத்தை போக்கி அப்பப்ப எல்லாத்தையும் ஒன்று கூட்டி வெற்றியா இந்த பகுதியை எடுத்து செல்லும் அதிரா விற்க்கு எனது நன்றியும் பாராட்டும்

என்றும் அன்புடன்
ரேணுகா
Sacrifice anything for Love,But don't sacrifice Love for anything...

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

ஹாய் வாழ்த்திய அனைவருக்கும் நன்றி.. தோழிகளின் மலர்மாலைகளின் வெயிட் தாங்காமல் கீழ விழுந்துட்டேன்.
அருசுவை ராணி ஸ்ரீ மற்றும் இமா,வானதி க்கும் ஒரு சுற்று பலமான கைதட்டல்கள்..

அன்புடன்
கிருத்திகா

அன்புடன்
கிருத்திகா

மேலும் சில பதிவுகள்