"தளிகா" "சந்தியா" சமையல்கள் "அசத்த போவது யாரு???

அன்பு தோழிகள் அனைவருக்கும் என் இனிய வணக்கங்கள்...

அதிரா தொடங்கிய சமைத்து அசத்தலாம் பகுதி- 1,2,3,4,5 வெற்றிகரமாக நிறைவு பெற்று இப்பொழுது பகுதி - 6 வெற்றியை நோக்கி சென்று கொண்டு உள்ளது....

ஒவ்வொரு முறையும் அசத்த போவது யாரு??என்ற தலைப்பில் நாம் செய்தவைகளை பட்டியலிட்டு அதிகம் சமைத்தவரை வெற்றியாளராக அறிவித்து கொண்டுஇருக்கிறேன்

இந்த முறை நாம் இருவரது குறிப்புகளை செய்து வந்தோம்,நாம் செய்த குறிப்புகளை இங்கே பட்டியல் இடுகிறேன்,அதில் ஏதேனும் தவறு இருந்தாலோ அல்லது விடுபட்டு இருந்தாலோ தோழிகள் சுட்டிகாட்டும்படி கேட்டு கொள்கிறேன்,எல்லாம் சரியாக இருப்பின் பிரச்சனை இல்லை,

வாருங்கள் தோழிகளே "தளிகா" "சந்தியா" சமையல்கள் அசத்த போவது யாரு?

முடிவுகள் வழக்கம் போல் புதன் கிழமை வெளியாகும்

கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள். அதிராவின் எழுத்துக்கள் ஒரே தமாஸ்.

நன்றிகள் பல.

தங்களின் வாழ்த்துக்களுக்கும் , பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி ஆசியா உமர்.

நன்றி செல்வி (ESMS௪). உங்க வாழ்த்துக்கும், அழகிய சிகப்பு ரோஜாவுக்கும்!

நன்றி வனிதா உங்க வாழ்த்துக்கும், அழகிய வெள்ளை ரோஜாவுக்கும்!

நன்றி தளிகா!. பொன்மாலை உங்க குறிப்புகள் போலவே பிரமாதம்!
நல்ல குதுகலமான இந்த மனநிலையிலேயே ஊருக்கு போய் எஞ்ஜாய் பண்ணிட்டு வாங்க... : )

மிக்க நன்றி ஜலீலாக்கா. உங்க மெடலும், கப்பும் ரொம்ப அழகு!. நீங்க முன்னமே கொடுத்த கப்பு பக்கத்திலேயே இதையும் வெச்சிடறேன். : )

மிக்க நன்றி ரேணு. எனக்காகவே புதன் காலை வரை வெயிட் செய்து முடிவு போடுவதாக சொன்னீர்கள். சோ நைஸ் ஃஆப் யூ!! : )
இந்த இழையில் உங்க பங்களிப்பு/கணக்கிடுதல் நிச்சயம் மிகப்பெரிய பாராட்டுக்குரியது.

அதிரா, ரொம்ப தேங்ஸ் உங்க அன்பான வாழ்த்துக்களுக்கு.
நீங்களும் ரேணுவும் செய்யும் இந்த பணி மென்மேலும் தொடர என் வாழ்த்துக்கள். உண்மையிலேயே நீங்க இருவரும் இணைந்த கைகள்!!

தேங்ஸ் இலா!
உங்க பதிவின் கடைசி வரி படித்து சிரித்து விட்டேன்.
// "வாயாலே பாயாசம் காய்ச்சரீங்க" // -நான் இதற்கு முன் கேள்விப்பட்டதில்லை - Good one!.
அப்புறம் வனிதா, இலாவோடு சேர்த்து எனக்கும் ஒரு பாக்ஸ் பக்கலாவா பார்சல்!
(இதைதான் "பக்கத்து இலைக்கு பாயாசம்" என்பார்களோ?!! :-) )

தங்களின் வாழ்த்துக்களுக்கும் , பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி வத்சலா.

கிருத்திகா, உங்க பலமான கைத்தட்டல் கேட்டது. மிக்க நன்றி!.
உங்களுக்கும், இமா, வானதி அவர்களுக்கும், மற்றும் சமைத்து அசத்திய அனைத்து அறுசுவை சகோதரிகளுக்கும் வாழ்த்துக்கள்!!

அன்புடன்
ஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

சமைத்து அசத்தி முதலிடம் பிடித்த அன்புத்தோழி "ஸ்ரீ "க்கு ஊட்டி மலர்தோட்டத்தையும்,
அடுத்த இடத்தினை கைப்பற்றிய அன்புத்தோழிகள், " இமா, வானதி,கிருத்திகா-விற்கு
ஏற்காடு மலர் தோட்டத்தினையும் பரிசாக அளிக்கிறேன்!!
மற்றும் சமைத்து அசத்தி, அசதியாக இருக்கும் அனைத்து தோழிகளுக்கும் அவரவர் வீட்டின் அடுத்த வீட்டின், மலர்தோட்டத்தையும் பரிசாக அளிக்கிறேன்!

அன்புடன் கீதாலஷ்மி!

இந்த பகுதியை மிகவும் சிறப்பாக நடத்தி முடித்த அன்புத்தோழிகள் அதிரா,ரேணுகாவிற்கும் பட்டு வண்ண ரோஜா இதழ்களால்
ஆன மலர்கிரீடத்தினை அணிவிக்கிறேன்!!

ரேணுகா! நான் சமைத்தது நாலே நாலுதான் அதனை கண்ணால் பார்த்தாலே எவ்வளவுன்னு சொல்லிடலாம். கஷ்டப்பட்டு எண்ணி பார்க்க தேவையில்லை. அதனைத்தான் ஜோக்காக "என் சமையலை கஷ்டப்பட்டு எண்ணி சரியா கணக்கு சொன்னதற்கு நன்றி- நு சொல்லியிருந்தேன்ப்பா
மற்றபடி, உங்க கணக்கு பற்றியெல்லாம் நான் ஜோக்கடிக்கலை ரேணு,சாரிப்பா!

ஆனா ஊன்னா சாரிப்பா என்று வந்ட்துடுவீங்கள்ளே,நீங்க சொன்னதுக்கு தான் நானும் அப்படி உங்களை வம்புக்கு இழுத்து பார்த்தேன்,உடனே சீரியஸ் ஆகி சாரி பூரின்னு வந்துடுவீங்க,அதிரா இந்த பகுதி ஆரம்பிச்சப்ப நான் தவறா கனக்கு எடுத்தா எல்லாரும் ரேணுவை குட்டுங்கன்னு சொல்லுவாங்க,இப்ப அதிரா மறந்துட்டாங்க போல,இல்லை நான் கரெக்டா தான் கனக்கெடுப்பேன்னு சும்மா இருக்காங்களோ.சோ கீதா என்னை என்ன சொன்னாலும் நான் கண்டுக்க மாட்டேன்,உங்க சாரியையும் ஏத்துக்க மாட்டேன்,வேனுமென்றால் சாரிக்கு பதில் சாரீ வாங்கி தாங்கோ

என்றும் அன்புடன்
ரேணுகா
Sacrifice anything for Love,But don't sacrifice Love for anything...

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

ரேணு
விளையாட்டுக்கு கூட அடுத்தவர் மனம் நோகும்படி பேசிவிடக்கூடாது என்பதில் நான் ரொம்ப கவனமா இருப்பேன்.
அதனால்தான் அப்படி சாரி கேட்டேன். சாரீதானே? வாங்கி கொடுத்திட்டா போச்சு
சென்னை சில்க்ஸ், போத்தீஸ் கடையையே உங்களூக்கு அன்பளிப்பா தர்றேன் எடுத்துக்குங்க!
அன்புடன்
கீதாலஷ்மி

கீதா ஆனாலும் உங்களுக்கு ரெம்ப தாராள மனம் தான் எல்லாத்துக்கும் மலை மலைய்யா தோட்டத்தை பரிசா கொடுத்தீங்க,எனக்கு மிக பெரிய 2 துனி கடையை கொடுத்துட்டீங்க,நான் நாளைக்கே போய் சாரீ எடுத்துக்கரேன்,

நீங்க எனக்கு கொடுத்த பட்டு ரோஜா கீரிடம் ரெம்ப அழகா இருக்கு,தேங்க் யூ

என்றும் அன்புடன்
ரேணுகா
Sacrifice anything for Love,But don't sacrifice Love for anything...

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

இலா...

பாருங்க, நீங்க என்னை சொன்னீங்க.. உண்மையில் இவங்க தான் வாயிலயே சக்கரை பொங்கல் வைக்கிறாங்க. :) கடையே எழுதி வெச்சுடாங்க பாருங்க. பாவம் அந்த கடை முதலாளிங்க. ஹஹஹ்ஹா....

ரேணுகா.... அதிரா குட்ட சொன்னது நினைவு இருக்கு.... ஒரு முறை நம்ம துஷ்யந்திய நான் குட்ட சொன்னது நினைவிருக்கா?! ஹிஹிஹி... ;)

கீதா... நீங்க நினைக்கிறது சரியே... ஆனாலும் சில நேரங்கல்ல தப்பா நினைக்காதவங்கல்ட மன்னிப்பு கேட்டு அவங்க மனசை காயபடுத்திடுவோம். பாவம் நம்ம ரேணுகா... நல்லவங்க, அவங்கலுக்கு கோவம் எல்லாம் வராது, அழுகை மட்டும் தான் வரும். ஹஹஹஹா.... ரேணு.. சரி தானே?!

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பங்ஷன் எல்லாம் முடிஞ்ச பிறகு வந்து பார்க்கிறேனே. எல்லாரும் பொன்னாடை, மலர்தோட்டம் ஒரே அறுசுவை முழுவதும் பூந்தோட்டமா காட்சி அளிக்கிறது.

அசத்தல் ராணி ஸ்ரீ மற்றும் அசத்தல் இளவரசிகள் இமா,வானதி மற்றும் கிருத்திகா ஆகியோருக்கு என்னுடைய வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.
இப் பகுதியை நடத்திச் செல்லும் உடன் பிறப்பு அதிராவிற்கும்,பொறுமையாக கணக்கெடுக்கும் தோழி ரேணுகாவிற்கும் வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுகள்.

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

மேலும் சில பதிவுகள்