மட்டன் மிளகு வறுவல்

தேதி: January 28, 2009

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு.

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

மட்டன்(அதிக எலும்பு இல்லாமல்) - 1/2 கிலோ,
பெரிய வெங்காயம் - 2,
தக்காளி - 2,
பூண்டு - 10 பல்,
இஞ்சி - சிறிது,
முந்திரி - 10,
மிளகு - 2 தேக்கரண்டி,
சோம்பு - 1 தேக்கரண்டி,
மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி,
கறிவேப்பிலை - சிறிது,
கொத்தமல்லி தழை - சிறிது,
உப்பு - தேவையான அளவு,
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி,
நெய் - 1 மேசைக்கரண்டி.


 

மட்டனை சுத்தம் செய்து, கழுவி வைக்கவும்.
வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்.
வாணலியில் 1/2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, சோம்பு, முந்திரி, இஞ்சி, பூண்டு, தக்காளி, மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கவும்.
வதக்கியவற்றை நைசாக அரைக்கவும்.
அரைத்த மசாலா, உப்பு சேர்த்து மட்டனில் பிசிறி குக்கரில் தண்ணீர் அதிகம் சேர்க்காமல் ஆவியில் வேக வைப்பது போல் வேக வைத்து எடுக்கவும்.
வாணலியில் மீதி எண்ணெய், நெய்யை ஊற்றி சோம்பு, கறிவேப்பிலை தாளித்து நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
நன்கு வதங்கியதும் வேக வைத்த மட்டனை கொட்டி கிளறவும்.
மிளகை தூள் செய்து சேர்த்து கிளறி, கொத்தமல்லி தூவி இறக்கவும்.


சாப்பாட்டுக்கு தொட்டுக் கொள்ள காரசாரமான வறுவல் ரெடி. ரசம் சாதமும், வறுவலும் போதும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

எப்படி இருக்கிங்க செல்விமா. உங்களின் மட்டன்மிளகுவறுவல் செய்தேன் நன்றாக இருந்தது

வாழ்க வளமுடன்