பள்ளிபாளையம் சிக்கன்

தேதி: January 28, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (3 votes)

திருமதி. செந்தமிழ் செல்வி அவர்களின் கொடுத்திருந்த குறிப்பினைபார்த்து <b> வனிதா வில்வாரணிமுருகன் </b> அவர்கள் தயாரித்த இந்த பள்ளிபாளையம் சிக்கன் செய்முறை, இங்கே அறுசுவை நேயர்களுக்காக படங்களுடன் விளக்கிக்காட்டப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள
காவிரி பாயும் ஊர் பள்ளிபாளையம். ஈரோடு மாவட்டத்தின் சிறப்பு உணவு வகை இது.

 

சிக்கன் - அரை கிலோ
சின்ன வெங்காயம் - கால் கிலோ
காய்ந்த மிளகாய் - 12
மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை - 10
துருவிய தேங்காய் - 2 தேக்கரண்டி
எண்ணெய் - 4 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு


 

சிக்கனை எலும்பு இல்லாமல் கொட்டைபாக்கு அளவிற்கு சிறு சிறுத் துண்டுகளாக நறுக்கி கழுவி தண்ணீர் வடித்து வைக்கவும். சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். காய்ந்த மிளகாயை சிறுத் துண்டுகளாக கிள்ளி விதையை தட்டி எடுத்து விட்டு மிளகாயை மட்டும் தனியே எடுத்து வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கிள்ளி வைத்திருக்கும் மிளகாயை போடவும்.
மிளகாய் சிவந்ததும் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கிய பின், கழுவி வைத்த சிக்கனை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கிய பின்னர் மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து 5 நிமிடம் வதக்கி விடவும். 2 கையளவு தண்ணீர் தெளித்து மூடி வைத்து வேக விடவும்.
தண்ணீர் வற்றி சிக்கன் வெந்ததும் துருவிய தேங்காய் சேர்த்து கிளறி இறக்கவும். சுவையான பள்ளிபாளையம் சிக்கன் தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

அண்ணா... நொய் நொய்'னு போட வெச்சுடனா?! ;) பரவாயில்ல. எப்படியோ செல்வி குறிப்பு வந்தா சரி. ரொம்ப நன்றி அண்ணா.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் வனிதா உங்க சிக்கன் ரெசிபியை நாளை செய்து பாக்குரேன்

கதை கெட்டுச்சு போங்க... இது நம்ம செல்வி குறிப்பு. செய்துட்டு பின்னூட்டம் குடுங்க, செல்வி ரொம்ப சந்தோஷபடுவாங்க, கூடவே நானும். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா பார்க்கும்போதே சாப்பிடனும்போல் இருக்குப்பா.செய்வதர்க்கு ரெம்ப எளிமையாவும் இருக்கும்ன்னு நினைக்கிரேன்.இன்னும் நிறைய குறிப்புகள் கொடுக்க வாழ்த்துக்கள்.(அய்யோ ஆமா இப்பதான் பார்க்குரேன்பா)சாரி செல்வி

பார்க்கும் போதே சாப்பிடனும் போல இருக்கு. நாளை செய்து பார்க்கிறேன். மிக்க நன்றி

செல்விமா அடிக்கடி பள்ளிபாளையம் சிக்கன் செய்வேனு சொல்லுவாங்க. நானும் செய்யனும்னு நினைப்பேன். நீங்க செஞ்சதும் இப்போ ரொம்ப ஆசை வந்திட்டு. இந்த வாரம் சிக்கன் வாரமோ! ஒரே எல்லோரும் சிக்கனா செய்து அனுப்பி நாவில் எச்சில் ஊற வக்கிறீங்களே இது நியாயமா? நாவைக் கட்டி டயட் இருக்கலாம்னு நினைச்சாலும் யாரும் விடுவதில்லை

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

செல்விமா அடிக்கடி பள்ளிபாளையம் சிக்கன் செய்வேனு சொல்லுவாங்க. நானும் செய்யனும்னு நினைப்பேன். நீங்க செஞ்சதும் இப்போ ரொம்ப ஆசை வந்திட்டு. இந்த வாரம் சிக்கன் வாரமோ! ஒரே எல்லோரும் சிக்கனா செய்து அனுப்பி நாவில் எச்சில் ஊற வக்கிறீங்களே இது நியாயமா? நாவைக் கட்டி டயட் இருக்கலாம்னு நினைச்சாலும் யாரும் விடுவதில்லை

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

எப்படியோ செய்தீங்கன்னா சந்தோஷம். உங்களுக்கு இன்னும் நல்லா வரும், என்னுடையது மிளகாய் வற்றல் கொஞ்சம் நாளானது, இல்லன்ன கலர் இன்னும் சூப்பரா இருந்திருக்கும். ரசம் சாதம் கூட சாப்பிட சம சூப்பர். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

யாராவது வனிக்கு மிளகாய் வத்தல் அனுப்பி வையுங்கோப்பா... இவ்வளவு அருமையா சமைச்சி காமிக்கிறாங்க...
உண்மையிலே உங்க மிளகாய் வத்தல் கலர் ரொம்ப மோசம் வனி. நானும் செய்தேன் பல மாதங்கள் முன்னாடி.. அப்படியே சைனீஸ் புட் மாதிரி சூப்பரா இருந்தது. இப்ப எங்க வீட்டில வெஜிடேரியனுக்கு மாறிட்டோம்..

"If you want to feel rich, just count the things you have that money can't buy."

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

இலா... ஒன்னுமே புரியலே உலகத்துலே... என்னமோ நடக்குது, மர்மமா இருக்குது. :(

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மாறிய ரகசியம் என்னவோ?

கொலஸ்ட்ரால் பயம் தான் :(( ஏற்கனெவே கொன்னு குவிச்ச கோழி ஆடெல்லாம் கனவில வருது

"If you want to feel rich, just count the things you have that money can't buy."

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

சந்தோசம் இலா. எனக்கு ஒரு vegetarian செட் கிடைச்சாச்சு. வாழ்த்துக்கள்.

அன்பு வனிதா,
நலமா? முதலில் இவ்வளவு தாமதமாக பதிவு போடுவதற்காக மன்னிப்பு.

நல்ல அழகா செய்து, விளக்கி இருக்கிறீர்கள். எனது பாராட்டுகள்.
நீ சொன்னது சரியே, மிளகாய் கலர் குறைவு. அதனால் வேறு நிறமாக இருக்கு.
இன்னும் கூட மிளகாய் சேர்த்திருக்கலாம்.(பழையது என்பதால் காரம் உறைக்காது).
ஒன்றே ஒன்று, தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். சிக்கன் இன்னும் பொடியாக நறுக்க வேண்டும்.
கலரில் என்ன இருக்கு? சுவை நன்றாக இருந்தால் சரி. சொல்வது சரிதான். ரசம் சாதத்திற்கு நல்ல காம்பினேஷன். கண்ணிலும், மூக்கிலும் தண்ணீர் வரவர சாப்பிடுவார்கள்:-)
இப்படி என் குறிப்புகளை நீங்கள் எல்லாரும் செய்து காட்டிட்டா, எனக்கு வேலை மிச்சம்.
ரொம்ப ரொம்ப நன்றிப்பா.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

This is not the way of preparing Pallipalayam Chicken. Wrong Method of Preparation.