ஹாய் தேவா மேடம்

ஹாய் தேவா மேடம்,
நான் நன்கு கலாறாகா இருந்தேன் இப்பொது வேலைக்கு போகிறேன் அதணால் கை, கழுத்து,முகம் கருப்பாக உள்ளது. அதை பொக வழி சொல்லுங்கள்

தோழி,எனக்கு தெரிந்த சிலவற்றை சொல்கிறேன் .முடிந்த அளவு வெயிலில் செல்வதை தவிர்க்கவும். அப்படி சென்றாலும் குடை அல்லது சன் ஸ்க்ரீன் லோசன் உபயோகிக்கவும். காலையில் குளிக்கும் போது கடலை மாவை உடல் முழுவதும் தேய்த்து சிறிது நேரம் வூர வைத்து குளிக்கலாம் .சாந்திக் என்ற ஒரு பவுடர் எல்லா பியுட்டி புராடக்ட்ஸ் விற்கும் கடைகளிலும் கிடைக்கும்.இது ஒரு ஆயுர்வேதிக் பவுடர் தான்,பயப்பட வேண்டாம்.இதை வுபயோகிதால் நல்ல கலர் கிடைக்கும்.பரு மற்றும் கரும்புள்ளிகளும் மறைந்து விடும்.இது என் அனுபவத்தில் கண்டது.முயற்சி செய்து பார்க்கவும்.

jeyasutha
"As is our confidence, so is our capacity"

lathakumar

ஹாய் சுதா அக்கா,
பதில் தந்ததுக்கு நன்றி.அந்த பவுடர் எப்படி யுஷ் பன்னனும் வாரம் ஒரு முறையா சொல்லுங்கள்

lathakumar

ஹாய் லதா ,
தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும். முதலில் முகத்தில் உள்ள கருப்பு மறையும் வரை,வாரம் இருமுறை உபயோகிக்கவும்.பிறகு வாரம் ஒருமுறை தொடர்ந்து உபயோகிக்கவும்.

jeyasutha
"As is our confidence, so is our capacity"

lathakumar
ஹாய் அக்கா,
பதில் தந்ததுக்கு நன்றி எப்படி யூஸ் பன்னனும் தண்ணிரா & பண்ணிர்லயா

lathakumar

நீங்கள் அந்த பவுடர் வாங்கினால் அதனுடன் இருக்கும்,வுபயோகிக்கும் முறை பேப்பரிலேயே போட்டிருப்பார்கள். இந்த பவுடரை உங்கள் சரும வகையை பொறுத்து வுபயோகிக்க வேண்டும்.உங்கள் சருமம் எண்ணை பசை சருமம் என்றால் இந்த பவுடருடன்,தயிர் கலந்து வுபயோகிக்கலாம்.வுலர்ந்த சருமம் என்றால் பால் கலந்து வுபயோகிக்கலாம்.முகம் மற்றும் கழுத்து பகுதியிலும் வுபயோகிக்கவும்.நன்றி

jeyasutha
"As is our confidence, so is our capacity"

lathakumar
தேங்ஸ் அக்கா,
மதுரையில் கிடைக்குமா?

lathakumar

இந்த பவுடர்,எல்லா அழகு பொருள் விற்பனை நிலையங்களிலும் கிடைக்கும்.வுபயோகித்து விட்டு சொல்லவும்.

jeyasutha
"As is our confidence, so is our capacity"

ஹாய் லதா, உங்கள் முகம் சூரிய வெளிச்சம் பட்டு கறுத்திருந்தால், அதற்கு தயிர் கலந்த பேக் போடுவது அவசியம். அது முகத்தின் கருமையை நீக்கும். விரளி மஞ்சள் உபயோகிக்காமல், கஸ்தூரி மஞ்சள், சந்தனம், கடலைமாவு, எலுமிச்சை சாறு, தயிர் கலந்த பேக் உபயோகியுங்கள். தினமும் ஒரு முறை உருளைக்கிழங்கின் சாற்றை முகத்தில் தடவி காயவைத்து கழுவுங்கள். அது இயற்கையான ப்ளீச் போன்று செயல்பட்டு முகத்தின் கருமையை நீக்கும். முகத்தில் திட்டு திட்டாக கருமை இருந்தால் அதற்கு ஆண்ட்டி பிக்மெண்டேஷன் க்ரீம்கள் உபயோகிக்க வேண்டும். வெயிலில் செல்லும்போது SPF 30+ உள்ள க்ரீம்களை முகத்திற்கு தடவுங்கள். வெளிநாடுகளில் இத்தனை SPF அதிகமுள்ள க்ரீம்கள் எளிதாக கிடைக்கும். நம் இந்தியாவில் என்றால் சாதாரண பேர்னெஸ் க்ரீம் உபயோகித்து முகத்தில் வெயில் படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இரவு உறங்கும் முன் முகத்தை கழுவ மறக்காதீர்கள். வெள்ளரிக்காய் சாற்றையும் வெயிலில் சென்று விட்டு வந்த பிறகு முகத்திற்கு போடலாம். சுருக்கம் விழாமல் புத்துணர்ச்சியுடன் சருமம் இருக்கும்.

சுதா அவர்கள் சொன்னதுபோல் சாந்திக் உபயோகிக்கலாம். அதனை பேஷியல் செய்த பிறகு போடும் பேஸ் பேக்காகவும் உபயோகிக்கலாம். இயற்கையான தீர்வு என்றால் வீட்டிலேயே செய்து கொள்ளக்கூடிய (மேலே நான் கூறியிருக்கும்) பேக்கினை உபயோகிக்கலாம். அதிக வேலைப் பளுவால் உடனடியாக பதில் போட முடியவில்லை. மன்னிக்கவும்.

நான் சமீபத்தில் aromaz whitening facial kit வாங்கினேன் . அது நல்ல பலன் தருமா மற்றும் எத்தனை நாட்களுக்கு ஒரு முறை உபயோகிக்கலாம் என்று கூறவும்

நான் வெயிலில் சென்றால் முகம் கருத்து விடுகிறது.நான் சன் ஸ்க்ரின் லோஷன் உபயோகித்து பார்த்துவிட்டேன்.பயன்யில்லை.Plz help me.

from,veena.

மேலும் சில பதிவுகள்