முளைக்கட்டிய பச்சைப்பருப்பு கூட்டு

தேதி: January 28, 2009

பரிமாறும் அளவு: 2 நபர்கள்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

முளைக்கட்டிய பச்சைபருப்பு - கால் கிலோ
பூண்டு - 4 பற்கள்
வெங்காயம் - கால் பகுதி
எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
மிளகுத்தூள் - ஒரு தேக்கரண்டி
இன்ஸ்டண்ட் வெஜிடபிள் பௌடர் - ஒரு சிட்டிகை
உப்பு - ஒரு சிட்டிகை


 

முளைவிட்ட பச்சைப்பயிரை சுத்தமாக அலசி எடுத்துக் கொள்ளவும்.
பூண்டை வட்ட துண்டுகளாக நறுக்கி, வெங்காயத்தையும் சற்று மெல்லியதாக நறுக்கி வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய்விட்டு நறுக்கிய வெங்காயம், பூண்டு இரண்டையும் அதில் வதக்கவும்.
பூண்டு, வெங்காயம் வெந்தவுடன் முளைவிட்ட பச்சைப்பயிரை அதில் கொட்டி நன்கு வதக்கி அத்துடன் மிளகுத்தூள், இன்ஸ்டண்ட் வெஜிடபிள் பௌடர், உப்பு அனைத்தையும் போட்டு, கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து மூடிவைத்து 2 நிமிடங்கள் மட்டும் வேகவைக்கவும்.
பிறகு தண்ணீர் அதில் மீதமிருந்தால் அடுப்பை வேகமாக வைத்து சுண்டவிட்டு இறக்கவும்.
மிக விரைவில் செய்யக்கூடிய, சுவையான, மிகவும் சத்து நிறைந்த முளைக்கட்டிய பச்சைப்பருப்பு கூட்டு ரெடி.


இது மலேஷியன் முறையில் செய்யப்படும் ஒரு உணவு. குழந்தைகளுக்கு இதை அப்படியே வெள்ளை சோற்றில் போட்டு பிசைந்து கொடுக்கலாம். முளைகட்டிய பச்சைப்பயிரை வேகவைக்கும்போது, முக்கால் வேக்காடு மட்டுமே கொடுக்க வேண்டும். அதனால்தான் "2 நிமிடங்கள் மட்டும்" என்று கொடுத்துள்ளேன். நன்கு வெந்துவிட்டால் அதன் சுவையும், சத்துக்களும் குறைந்துவிடும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

Barely la vera entha dishum seiyamudiyatha