சீஸ் பன்

தேதி: January 28, 2009

பரிமாறும் அளவு: 35-40 பன் வரும்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

மைதாமா - 1 கிலோ
ஈஸ்ட் - 42 கிராம்
சீனி - 2 மேசைக்கரண்டி
முட்டை - 1
பால் - 1 1/2 கப்
எண்ணெய் - 1 கப்
சீஸ் - 500 கிராம்
உப்பு - தேவையான அளவு


 

ஒரு பாத்திரத்தில் மாவை போட்டு அதன் மேல் ஈஸ்டை போட்டு ஈஸ்டை உதிர்க்கவும்.
முட்டையை உடைத்து வெள்ளை கருவை மட்டும் போடவும்.
சீனியையும், உப்பையும் சேர்த்து கலக்க வேண்டும்.
பாலை மெல்லிய நகச் சூட்டில் சுட வைக்கவும்.
பின்பு அதை ஊற்றி குழைக்க வேண்டும்.
எண்ணெயை ஊற்றி குழைக்க வேண்டும்.
குழைக்கும் போது ஒட்டினது எல்லாம் எடுபட்டு வரும் வரை குழைத்து உருண்டையாக எடுக்கவும்.
பின்பு சுத்தமான துணியால் அந்த உருண்டையை உள்ள பாத்திரத்தை மூடி 3 அல்லது 4 மணி நேரம் வைக்கவும்.
சீஸை துருவி வைக்கவும். ஓவனை போட்டு சூடாக விடவும்.
பின்பு மாவை எடுத்து சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி கேக் ட்ரேயில் வைத்து உள்ளங்கையால் சாடையாக அமத்த வேண்டும்.
முட்டை மஞ்சள் கருவை நன்றாக அடிக்கவும்.
பிரஷினால் உருண்டையின் மேல் முட்டை மஞ்சள் கருவை பூச வேண்டும்.
அதன் மேல் சீஸ் தூளை தூவ வேண்டும்.
பின்பு ஓவனில் வைத்து 10-15 நிமிடம் பேக் செய்யவும்.
சீஸ் பிரெளன் நிறமாக வர வெளியில் எடுக்கலாம்.
நன்கு ஆறிய பின்பு பாலித்தீன் பையில் சுற்றி வைத்து சாப்பிடலாம்.


மேலும் சில குறிப்புகள்


Comments

வத்சலா,
உங்கள் சீஸ் பண் நன்றாக வந்தது. சுவையாகவும் இருந்தது.
அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

அக்கா உங்களுடைய குறிப்பில் இருந்த சீஸ்பண் மிக மிக சுவையாக இருந்தது அத்துடன் இப்படிப்பட்ட சுவையான குறிப்பை தந்ததிற்கு உங்களுக்கு என் நன்றியை தெரிவிக்கின்றேன்.

அன்புடன்
துஷ்யந்தி கலைவேந்தன்

"முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்"

இமா, துஷ்யந்தி உங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி.

நன்றி,
"அன்பான சொல் மருந்தாக இருப்பதோடு வாழ்த்தவும் செய்கிறது"