ANY ONE HELP ME PLZ

அடிக்கடி தலைவலி வருது தும்மல் ஜாஸ்தி இருக்கு

எதாச்சும் வலி சொல்லுங்க ப்ளீஸ்

ரியாசபி

ரிசபி,
முதலில் நீங்க நல்ல டாக்டரை பார்த்து உங்க பிரச்னையை சொல்லி அவர் அறிவுரைப்படி நடங்க.
தலைவலிக்கு பல காரணங்கள் இருக்கும். டென்ஷன், வேலைப்பளு,
சைனஸ், அஜீரணம், கண் பார்வை பிரச்னை, மலச்சிக்கல் என்று
எவ்வளவோ இருக்கு. என்ன காரணத்தினால் தலைவலி வருதுன்னு கண்டிபிடிச்சு அதற்கு தகுந்த ட்ரீட்மென்ட்தான் எடுக்கணும்.
கண் டாக்டரை பார்த்து கண்ணை டெஸ்ட் பண்ணுங்க,
சைனஸ் இருக்கான்னு டெஸ்ட் பண்ணிக்குங்க,
சாப்பிட்ற சாப்பாடு நல்லா ஜீரணம் ஆகுதான்னு பாருங்க,
டஸ்ட் அலர்ஜி இருக்கிறவங்களுக்கு அடிக்கடி தும்மல் வரும்.
வீட்டை க்ளீன் பண்ணும்போது துணி போட்டு மூக்கை மூடிக்குங்க.
எதைப்பற்றியும் கவலை இல்லாமல், டென்ஷன் ஆகாமல் மனசை ரிலாக்சாக வைத்துக்கொள்ளுங்கள்.

Thanks Sasi

Cynus Problem Iruku dctr consult panitan

Medicine Sapidran

aano konjum paravala

food control panna ethum chance iruka nu thayrinjukalamnu thaan pathivu pottan

ரிசபி,
உங்களுக்கு சைனஸ் என்பதினை இப்பதான் அறிந்தேன். அதனால்தான் தலைவலி, தும்மல்.
சுடுதண்ணீரை கொதிக்கவைத்து, கொஞ்சம் விக்ஸ் அல்லது காபிப்பொடி போட்டு ஆவி பிடிங்க.
சிக்கரி கலக்காத காபிப்பொடிதான் யூஸ் பண்ணனும். தலைக்கு குளித்தவுடன் உடனே தலையை துவட்டி காய வெச்சிடுங்க.
தலையில் நீர் கோர்த்திட்டு இருந்தாலும் தலைவலி வரும்.
அதிகமா ஸ்வீட் சாப்பிடாதீங்க, வாசனையுள்ள சென்ட், பூ வகைகள், சாக்லேட்ஸ், கூல்டிரிங்ஸ் இதெல்லாம் அவாய்ட் பண்ணிடுங்க.
தலைக்கு ஹென்னா போட்டால்கூட சைனஸ் இருப்பவர்களுக்கு ஒத்துக்கொள்ளாது.
அதிக சத்தம், இரைச்சல், புகைச்சலான் இடங்களினை அவாய்ட் பண்னுங்க!

kandippa neenga sonna mari muyarchi panran

thank you so much akka

நீங்கள் ஒரு நாளைக்கு இருபது ந்ிமிடம் மூச்சு பயிற்ச்சி [யோகா] செய்யாலாமே நல்ல பலன் கிடைக்கும்

ரிசபி!
தாஜ் சொன்னாமாதிரி யோகா-மூச்சுபயிற்சி, இதற்கு நல்ல ட்ரீட்மென்ட்,அத்துடன் தலைமுடிக்கு சாதாரண சுத்தமான தேங்காய் எண்ணெய் போதும். வாசனை கலந்த தேங்காய் எண்ணெய் தடவாமல் இருப்பது நல்லது!

sari akka

coc oil thaan use panran but karuvapulla mix panni use panran

மேலும் சில பதிவுகள்