ஓட்ஸ் வாழைப்பழ அப்பம்

தேதி: January 29, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

Average: 3 (1 vote)

 

வாழைப்பழம் - 4 (நடுத்தர அளவு)
மைதா - 1 கப்
ஓட்ஸ் - 3/4 கப்
சர்க்கரை - 1/2 கப்
நெய் - 1 தேக்கரண்டி
உப்பு - 1 பின்ச்
எண்ணெய் - பொரிப்பதற்கு


 

வாழைப்பழத்தை கையால் மசித்து எண்ணெய் தவிர மற்ற எல்லா பொருட்களையும் சேர்த்து பிசையவும்.
மிகவும் கெட்டியாக இருந்தால் லேசாக தண்ணீர் சேர்த்து பிசையவும்.
பிசைந்த மாவை சிறிது சிறிதாக கிள்ளி சூடான எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.


குழந்தைகளுக்கு கொடுக்கக் கூடிய சத்தான மாலை நேர சிற்றுண்டி. வாழைப்பழத்தின் இனிப்பை பொறுத்து சர்க்கரை அளவை கூட்டி குறைத்து சேர்க்கவும். பிசைந்த மாவு வடை(உளுந்து வடை)மாவு பதத்தில் கெட்டியாக இருக்க வேண்டும். தண்ணீர் அதிகமாகி விட்டால் அதிகம் எண்ணெய் குடிக்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

வாவ் கவி சூப்பர் குறிப்பு இதில் ஓட்ஸை பொடித்து போடனுமா

ஜலீலா

Jaleelakamal

ஜலீலாக்கா இப்பதான் உங்க பதிவை பார்த்தேன். ஓட்ஸை பொடிக்க வேண்டாம்.அப்படியே பயன்படுத்தலாம்.அப்போதுதான் இடையிடையே மொறுமொறுப்பாக கடி பட சுவையாக இருக்கும்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ok kavi

Jaleelakamal

கவி,
ஓட்ஸ் வாழைப்பழம் அப்பம் சுவையாக இருந்தது, இன்று மாலை செய்திருந்தேன்,நன்றி கவி

என் பொண்ணுக்கு நஆளை என்ன செய்யன்னு யோசனையோட வந்தேன் உங்க இந்த குறிப்பு கண்ணில் பட்டது சத்தான ரெஸ்பி செய்யும் முன்னே நன்ரிப்பா பார்த்தாலே தெரியுது நிச்சயம் இவளுக்கு பிடிக்கும்னு..இவள் ஓட்ஸ் வாழைபழம்லாம் சாப்ட மாட்டாள் இப்படியாவது கொடுத்துடறேன் :)

அன்புடன்,
mrs.noohu

அன்புடன்,
மர்ழியா நூஹு

ரொம்ப தேங்ஸ்ப்பா நான் ஒரு வாழை பழத்தில் இப்படி செய்து குட்டி உருண்டையாக பொரிச்சு கொடுத்தேன் 2 உருண்டை மட்டுமே ரிட்டன் வந்து இருக்கு தேங்ஸ்ப்பா இது போல ஹெல்த்தி ரெசிபி இருக்கா?

அன்புடன்,
mrs.noohu

அன்புடன்,
மர்ழியா நூஹு

ஹாய் மர்ழி ஓட்ஸ் வாழைப்பழ அப்பம் மரியம் க்கு பிடிச்சுருந்துதா? ரொம்ப சந்தோஷம் மர்ழி. குழந்தைகள் சாப்பிட்டால் அது பெரிய விஷயம்தான்.

வேறு ரெசிப்பியா? என்னோட ஆப்பில் சாண்ட்விச் செய்து கொடுத்து பாருங்களேன். சான்விச்சா சாப்பிட மாட்டான்னா ப்ரெட் ச்லைஸ்களை சிறிய சதுரங்களாக வெட்டி இடையில் ஆப்பிள் கலவையை வைத்து மைதாவில் தண்ணீர் முட்டை(தேவப்பட்டால்) கொஞ்சம் சர்க்கரை கலந்து கெட்டியாக கலக்கி அதில் முக்கி டீப் ஃப்ரை பணி கொடுத்து பாருங்க. pear கூட இதே போல் செய்து கொடுக்கலாம்.

எனக்கு தெரிந்த குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஐட்டம் ஸ்வீட் கார்ன் வித் சீஸ். இது கூட என் குறிப்பில் இருக்கு. ட்ரை பண்ணி பாருங்க. ஆனால் ஸ்கூலுக்கு கொடுத்து விட்டால் சிதறாமல் சாப்பிடுவங்களான்னு தெரியலை.
நக்கெட்ஸ் பிடிக்கும்னா ஃப்ரொசன் வாங்காமல் வீட்டிலேயே செய்து கொடுங்க. அருசுவையில் அதன் குறிப்பு இருக்கு. தேடி லின்க் சொல்றேன்.

க்றிஸ்பியா கொஞ்சம் காரமா சாப்பிடுவான்னா ராகிபக்கோடா செய்யலாம்.
இன்னும் ஞாபகம் வந்தால் சொல்ரேன்

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நன்றி vijisrams

அன்புடன்
கவிசிவா

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!