உருளைக்கிழங்கு அவியல்

தேதி: January 30, 2009

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு.

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

உருளைக்கிழங்கு - கால் கிலோ,
தயிர் - 1 கப்,
பச்சை மிளகாய் - 5,
சீரகம் - 1 தேக்கரண்டி,
தேங்காய் - 1 மூடி,
தேங்காய் எண்ணெய் - 1 மேசைக்கரண்டி,
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி,
கறிவேப்பிலை - 10,
உப்பு - தேவையான அளவு.


 

உருளைக்கிழங்கை தோல் சீவி, சதுரத் துண்டுகளாக நறுக்கி, மஞ்சள் தூள் சேர்த்து வேக வைக்கவும்.
பச்சை மிளகாய், தேங்காய், சீரகம் சேர்த்து நைசாக அரைக்கவும்.
அரைத்த விழுதை தயிருடன் கலக்கவும்.
உருளைக்கிழங்கு வெந்ததும் தயிர் கலவை, உப்பு சேர்த்து, 5 நிமிடம் கழித்து இறக்கி தேங்காய் எண்ணெயில் கறிவேப்பிலை தாளித்து கலக்கவும்.


சாதம், சப்பாத்தி, பூரிக்கு நன்றாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

அன்பு செல்வி,

எப்பவும் உங்கள் குறிப்பை பார்த்து, இருக்கின்ற எல்லா சந்தேகத்தையும் உங்க கிட்ட கேட்டுட்டு தான் சமைப்பேன்!! இந்த வாட்டி எந்த சந்தேகமும் வரலை!!! நேரா நானே செய்துட்டேன்!!

ப்ரிட்ஜ் ல இருந்த எல்லா காய்கறியும் போட்டேன் (கேரட், பீன்ஸ், பட்டாணி, காளிப்ளவர், கார்ன், முருங்கை, இத்தோட உருளைக்கிழங்கும் சேர்த்துதான் !!!). ரொம்ப டேஸ்டி, ரொம்ப சிம்பிள். நல்ல கலர்புல்லா இருந்தது, கொஞ்சமா மோர்க்குழம்பு சாயலும் இருந்தது.

ரொம்ப நன்றி!!

இப்படிக்கு,
சந்தனா

அன்பு திருமதி. சேகர்,
அப்படீன்னா சமையல்ல தேறிட்டீங்கன்னு அர்த்தம். எல்லாக் காயும் சேர்த்து அவியல் செய்தா ரொம்ப டேஸ்டா இருக்கும். அடை, புளிசாதம் இதுக்கெல்லாம் நல்ல காம்பினேஷன். கேரளா மோர்க்குழம்பு இதனுடன் கொஞ்சம் பச்சரிசி சேர்த்து அரைப்போம். அதுதான் வித்தியாசம். பாராட்டுக்கு மிக்க நன்றி.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.