TO GET PREGNENT

Hi தோழிகளே நான் அறுசுவைக்கு புதியவள். நான் திருமணம் செய்து 2 வருடங்கள் கடந்து விட்டன. 7 மாதத்திற்கு முதல் 7 weeks இல் திடீரென கரு கலைந்து விட்டது. இப்பொழுது try பண்னுகிறோம் 4 மாதங்களாக. Doctor இன் advice படி folic acid tablet உம் எடுக்கத் தொடங்கி உள்ளேன். எனக்கு என்ன கவலை என்றால் கடந்த two years இலும் நாம் கருத்தடை எதுவும் பாவித்ததில்லை. ஆனாலும் Doctor சொல்லுகிறார் முதல் coceive & misscarriage ஆகியது ஒரு good sign for you என. காண்பவர்கள் எல்லோரும் உங்களிற்கு பிறகு கல்யாணம் செய்தவர்கள் எல்லோரும் குழந்தைகளுடன் இருக்கிரார்கள் என கேட்டபடி உள்ளார்கள். சில நேரங்களில் அழுகை தான் வரும். எனது கணவரும் ஒவ்வொரு மாதமும் எதிர்பார்த்து ஏமாந்து போவார். ஆனாலும் எனக்கு சொல்லுவார் இப்ப என்ன அவசரம் கடவுள் வரும் போது தருவார் தானே என. இருந்தாலும் அவருக்கு குழந்தைகள் என்றால் கொள்ளை ஆசை. please அனுபவம் உள்ள தோழிகள் எனக்கு advise தாருங்கள். சில நேரங்களில் ஆட்களுடன் கதைக்கவே விருப்பம் இருக்காது, தனிய இருந்து அழ வேண்டும் போல் இருக்கும்.

இதற்காக வருந்தாதீர்கள். இந்த மாதிரி சில பெண்களுக்கு ஏற்படுவதுண்டு. என் அண்ணிக்கு கூட இந்த மாதிரிதான் ஆனது. இதோ இப்போ ஒரு பெண் பிறந்திருக்கு. போலிக் ஆசிட் டாப்லட்டை நிறுத்தாதீங்க. தொடர்ந்து எடுத்துக் கொள்ளுங்கள். கணவருடன் எப்போதும் சந்தோஷமாக இருங்கள். கணவர் அன்பாக இருக்கும் போது எந்த கஷ்டமும் பெரிதாக தெரியாது. விரைவில் தாயாவீங்க. மனதை மகிழ்ச்சியுடன் வைத்துக் கொள்ளுங்கள். முதல் முறை கன்சீவ் ஆனதால் விரைவில் கருத்தரித்து விடும்.

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

Thanks Thanisha, நானும் அதைதான் எதிர் பார்த்துக்கொண்டிருக்கிறேன். மற்றவர்களின் குழந்தைகளை பார்க்கும் போதெல்லாம் மனதில் ஏக்கமாக இருக்கும். கடந்த 4 மாதங்களாக எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாற்றம் தான். கடைசி periods 3 days late பண்ணித்தான் வந்தது. நான் மிகவும் சந்தோசப்பட்டு கோவில் போய் வருவோம் என நினைத்து தலைக்கு குளித்து கணவரும் நானுமாக வெளிக்கிட வந்து விட்டது. எனக்கு maximum 1 day தான் late பண்னி வரும். கடைசி முறை தான் 3 நாள் late பண்ணியது. எனக்கு வழக்கமாக period வருவதற்கு 1 அல்லது 2 நாள் இருக்கும்போது தலைக்கு குளித்தால் உடனே வந்து விடும். இருந்தும் கடைசி முறை ஒரு காலமும் 3 நாட்கள் வரை எனக்கு பிந்தி வராததால் நான் முற்று முழுதாக conceive ஆகி விட்டேன் என நம்பித்தான் தலை குளித்தேன். தலைக்கு குளிப்பதிலும் ஏதும் உள்ளதா? எனக்கென்றால் ஒன்றும் விளங்கவில்லை.

தீப்தி ஏன்பா கவலைப்படுறீங்க. இதெல்லாம் நிறைய பேருக்கு இருக்கிற பிரச்சனை தான். கவலையை விட்டுத்தள்ளுங்க. நல்லா சந்தோஷமா இருங்க. periods வரதுக்கு ஒரு 5 days முன்னாடி இருந்தே கொஞ்சம் வேலை பார்க்கிறதை கம்மி பண்ணுங்க. படி ஏறி இறங்க வேண்டாம். இனிப்பு, காரம் அதிகம் சாப்பிடாதீங்க. தலைக்கு குளிக்கிறதால் பிரச்சனை இல்லை. ஆனால் என்னை எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டாம் என்று சொன்னார்கள்.

இது எல்லாம் Dr. எனக்கு சொன்னது தான். விரைவில் குழந்தை பிறக்க வாழ்த்துக்கள்.

ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.

ஹாய் தீப்தி. நம்பிக்கயோடு இருங்கள் எதிற்பார்புகலும் ஏமட்றங்கலும் நிறைந்ததுதான் வாழ்க்கை ஆனால் அதுவே நிரந்தரம் அல்ல. என் சொந்தகார பொன்னுக்கு நீங்கல் சொன்னது போல் தான் இருந்தது இப்போ எல்லாம் சரியாகி ஒரே பிரசவதில் மூன்ரு குழந்தைகள் பிரந்தனர். குழந்தைக்கு முயற்சிக்கும் போது கவலை இல்லாமல் என்னங்கல் ஒரே சீராக இருக்க வேணும் அதுதான் முக்கியம். ஏமாட்றம் என்ற வார்தைக்கே இடம் தராதீகள் காலம் வரும்போது கன்டிப்பாக அந்த செல்வதை கடவுல் உஙலுக்கு கொடுப்பார்.

Thanks Umaraj and Mahasiva உங்களுடைய ஆறுதல் வார்த்தைகளை கேட்கும் போது மனதிற்கு இதமாக உள்ளது. எனக்கு இதுவரைக்கும் Doctor ஒரே ஒரு blood test மட்டும் தான் செய்தவர். அதன் படி எனக்கு தைரொயிட் பிரச்சனை, மற்றும் எதுவித பிரச்சனையும் இல்லை என சொன்னார். சும்மா ஒரு blood test செய்தால் ok யா? சில பேர் சொல்லுகிறார்கள் general ultra sound செய்து பார்க்க வேண்டும் என. ஆனால் எமது Dr அது பற்றி எதுவும் சொல்லவில்லை. நான் இதுவரைக்கும் Dr இடம் நாங்கள் கடந்த 2 வருடமாக கருத்தடை எதுவும் பாவிக்கவில்லை என்பதனை சொல்லவில்லை. நான் Dr இடம் சொல்ல வேண்டுமா இது பற்றி?

ஹாய் தீப்தி!
கண்டிப்பாக நீங்கள் டாக்டரிடம் செக்கப் போய் இது விஷயமாக பேசுங்கள். அவர்கள் வேறு டெஸ்டுக்கு (ஹார்மோன் மற்றும் கணவன் மனைவி இருவருக்கும்) எழுதித்தருவார்கள். என்ன பிரச்னை என்பது தெரிந்தால்தான் அதற்கு தகுந்த ட்ரீட்மென்ட் தருவார்கள்.டாக்டரிடம் சங்கோஜப்படாமல் எதனையும் வெளிப்படையாக பேசுங்கள். சந்தேகங்களினை தயங்காமல் கேளுங்கள். வெறும் ப்ள்ட் டெஸ்ட் மட்டும் போதாது

Thanks Sai Geethalakshmi, next week appointment வைத்துள்ளோம் Doctor இற்கு. Doctor என்ன சொல்லுகிறார் என வந்து சொல்லுகிறேன்.

ஹாய் தீப்தி,
உங்க பதிவு பார்த்து ரொம்ப சந்தோஷம். ஆனால் குண்டு கை,காலிற்கு பயிற்சி பற்றி கேட்டிருந்தது நீங்கள்தானா என்பது நினைவில்லை.
ஆனால், தற்சமயம் உடற்பயிற்சி என்பது வேண்டாமே? இது என் அபிப்ராயம். முதலில் குழந்தை பெற்றுக்கொள்ளுங்கள். வாக்கிங் தவிர கடுமையான உடற்பயிற்சிகள் எதையும் செய்யவேண்டாம்.
அன்புடன்,
கீதாலஷ்மி!

அது நானேதான். எனக்குத் தெரியாது Sai Geethalakshmi இதனை எனக்கு தெரியப் படுத்தியதற்கு பெரிய நன்றிகள். நான் இனிமேலும் walking தவிர எதுவும் try பண்ண மாட்டேன்.

நான் இன்னும் Dr இடம் போகவில்லை. எனது கணவர் சொன்னார் இந்த முறையும் பார்த்து விட்டு Dr இடம் போவோம் என. எனக்கு பீரியட் 26 நாட்களிற்கு ஒரு முறை வரும், ஆனால் போன தடவை 3 நாட்கள் பிந்தியும், கடைசியாக இன்று 2 நாட்கள் முந்தியும் வந்து விட்டது. இப்படி 2,3 நாட்கள் பிந்தி, முந்தி வருவது பிரச்சனையாக இருக்குமா? என்னால் சந்தோசமாக இருக்க முடியவில்லை. எந்த நேரமும் இதே நினைவுதான். போன கிழமை ஒரு ஐயரிடம் எமது கை பலன் பார்த்தோம், அவர் சொன்னார் எனக்கு இன்னும் 6 வருடங்களின் பின் தான் குழந்தை பலன் என. அதை கேட்ட நாளில் இருந்து இன்னும் கவலையாக உள்ளது. எனது உறவினர்களே வார்த்தைகளால் என்னை கொன்று விடுவார்கள். கணவரிற்கு அவர் சொன்னதில் நம்பிக்கை இல்லை. வரும் weekend Dr இடம் appointment வைத்துள்ளோம். என்னால் சந்தோசமாக எதுவும் செய்ய முடியவில்லை. இப்பொழுதெல்லாம் இரவுகளில் உறக்கம் இல்லாமல், அசதியில் தூங்கும் கணவரை எழுப்பவும் முடியாமல் மனதிற்குள் அழுது கொண்டு இருப்பேன். இந்த மன உளைச்சலில் இருந்து என்னால் மீள முடியவில்லை. என்னால் வரும் போது வரட்டும் என இருக்க முடியவில்லை. இப்பொழுது கூட அழுது கொண்டுதான் type பண்ணுகிறேன்.

மேலும் சில பதிவுகள்