இங்க வாங்க அரட்டை அடிக்க(48தான் இதுவும்)

எல்லோரும் ஓடி வாங்க அரட்டை அடிக்க,என்னால பழைய திரட் ஓபன் பண்ண ரொம்ப நேரம் ஆவதால் புதுசா ஓபன் பண்ணிட்டேன்,வந்து கலக்குங்க..

சுகன்யா நான் உங்கள அடிக்கடி இல்ல தினமும் நினைச்சுப்பேன், எப்படி தெரியுமா? நீங்க கொடுத்த world clock தான் தினமும் டைம் பார்க்கும் சைட் அத பார்க்கும் போதெல்லாம் நினைச்சுப்பேன்..நலமா?தேஜீ நலமா?நகைச்சுவை திரட்ல உங்கள விசாரிச்சு பதிவு போட்டு இருக்கேன்பா..

மேனு உங்க ஆஃப்லைன் மெசேஜ் பார்த்தேன்பா,ஆனால் பதில் போட முடியல, சாரி பா,மருமக என்ன பண்றாங்க?வரும் வாரத்துல கண்டிப்பா பேசலாம்பா..வீக் எண்ட் முடியாது இல்ல?உங்களுக்கும் தான்..

உமா எப்படி இருக்கீங்க?கொஞ்சம்(நிறைய) பயமா இருக்கோ?முதல்ல பயப்படுவதற்கு பயப்படாதீங்க,குழப்ப வேண்டாம் பாவம் நீங்க..பயத்த நல்லா வெளில காட்டுங்க,அப்போ தான் நிறைய பேர் ஆறுதல் சொல்லுவாங்க,பயம் போகும் இல்லன்னா கொஞ்சம் குறையும்..நான் எல்லாம் பயப்படுவதற்கு பயப்படுவதே இல்ல..சரி சரி கம்பெல்லாம் எடுக்க வேண்டாம்,அப்புறம் உங்க சம்பந்திகிட்ட சொல்லுவேன்,குழந்தை பிறந்ததும் தெரியபடுத்துங்க..நான் கால் பண்றேன்,உங்க ஃபோன் நம்பர் என்கிட்ட இருக்கு..ஹஸ் எப்போ வரார்? இல்ல வந்தாச்சா?

ஜெயா எப்படி இருக்கீங்க?பாப்பி கூட அரட்டை அடிச்சிட்டு இருக்கீங்க?கெட்-டுகதர் ஃப்ரண்டா? நடத்துங்க நடத்துங்க,,இப்போதான் அவங்களுக்கும் ஒரு பதிவு போட்டு வந்தேன்..சரி ராதை ஹரி எப்படி இருக்காங்க? என்ன ஆன்லைன்ல பார்த்தால் நீங்க ஃபிரியா இருந்தால் கூப்பிடுங்கபா,நைட்ல நான் டிஸ்டர்ப் பண்ணகூடாதுனு தான் நான் கூப்பிட மாட்டேன்..

உத்ரா எங்க ஆன்லைன்ல ஆளையே காணோம்? ஆனால் அரட்டைல வரியா எல்லோர் கூடவும் கலக்கிட்டு இருக்கீங்க?என் பேரு தாமரைபா யாபகம் எல்லாம் இருக்கும்னு நினைக்கிறேன், ஹா ஹா..குளிர் எப்படி இருக்கு?

இலா எப்படி இருக்கீங்க?யார் வின் பண்ணினாங்க.நடாலா? என்னப்பா ஆச்சு நானும் நெட்ல தேடிட்டு இருக்கேன் ஒரு நியூஸ்கூட இல்லயே?என் வீட்டுல டிவி தெரியலபா..ஐ லவ் நடால்,ஃபெடரர்..கொஞ்சம் சீக்கிரம் வந்து ரிசல்ட சொல்லுங்கபா..

நடுவர் சந்தோ அவர்களே,பட்டிமன்றத்தில் பங்கேற்க முடியாமல் போய்விட்டது,அதனால் இங்கே இப்படி சொல்லி பார்த்துக்கிட்டேன்,
எப்படிபா இருக்கீங்க?நகைச்சுவை பகுதியில் பார்த்தேன்பா.அதுக்கு பதில் போடலாம்னு பார்த்துட்டு இருந்தேன்,அதற்குள் புது இழை தொடங்கிட்டீங்கோ.ஓ நீங்க அதை தினமும் பார்ப்பீங்களா(world clock). நான் கொடுத்த அந்த லின்க் உங்களுக்கு உபயோகமா இருப்பது எண்ணி ரொம்ப சந்தோஷம்.

உண்மையில் ரொம்ப நெகிழ்ச்சியா தான்பா இருக்கு,நீங்க என்னை மறக்காமல் தினமும் நினைப்பதற்க்கு.தேஜல் தூங்கிட்டாப்பா.

உண்மையை சொல்லட்டுமா,உங்களுக்காக தான் நான் இவ்ளோ நேரம் முழித்திருந்து பதிவு போட வந்தேன்.எப்படியும் நீங்க இந்த டைமில் வருவீங்க,அப்ப உங்களை பிடிச்சிடலாம் என்று.

சந்தோஷ் என்ன செய்துட்டு இருக்கார்?

என்னப்ப இப்ப்டி கேட்டுட்டீங்க??:-(( நல்லா பாருங்க.நான் இன்னைக்கு தான் அரட்டையில் கலந்திருக்கேன்.உங்களை தானே online-ல் காணவே இல்லை

Patience is the most beautiful prayer!!

Patience is the most beautiful prayer!!

தனீ எப்படி இருக்கீங்க?குட்டி பொண்ணு நல்லா இருக்காங்களா?பார்க் போய்ட்டு வந்த கதைய நானும் படிச்சேன்..

கவி எப்படி இருக்கீங்க?ஷாம் எப்படி இருக்காங்க? இங்க சந்தோஷ் தொல்ல தாங்கல.அங்க எப்படி? விண்டர்ல மேனேஜ் பண்ண ரொம்ப கஷ்டமா இருக்கு..வெளிலயும் போக முடியல,வீட்டிலயும் இருக்க முடியலபா..ஊரெல்லாம் எப்படி இருக்கு?

வனிதா எப்படி இருக்கீங்க?குட்டி சௌக்கியமா?இருமல் எல்லாம் சரியாகிடுச்சா?

சுஹைனா எப்படி இருக்கீங்க?உங்க பயண கட்டுரை ரொம்ப நல்லா இருக்குங்க,நான் முழுவதும் படிச்சிட்டேன்,ஆனால் பதிவு போட நேரமில்லை,மன்னிக்கவும் அதான் இங்க இப்போ சொல்றேன்ங்க..லாஃரா,லாமின் நல்லா இருக்காங்களா?உங்கள ரொம்ப மிஸ் பண்ணிருப்பாங்க தானே?நீங்களும் தான்,இருந்தாலும் நீங்க நல்ல படியா போய்ட்டு திரும்பி வந்து இங்க இப்படி கலந்துக்கிறதும் ரொம்ப சந்தோசமா இருக்குங்க..உங்கள அடிக்கடி ஆன்லைன பார்க்கிறேன்,ஆனால் ஜெயாகிட்ட சொன்ன மாதிரி தான் எனக்கு காலைலனா உங்களுக்கு நைட் ஆகிடுது,அதனால கூப்பிட கஷ்டா இருக்கு,டிஸ்டர்ப் பண்ணகூடாதுனு..உங்களுக்கு டைம் இருக்கும் போது கூப்பிடுங்க பேசலாம்..நீங்க அங்க ஃபோட்டோ எடுக்கலயா? இருந்தால் எங்களோட share பண்ணுவீங்களா? தப்புன்னா மன்னிச்சிருங்க எனக்கு இத பத்தி எதும் தெரியாது

ரொம்ப சந்தோசமா இருக்கு நீங்க என்ன பார்க்க இவ்ளோ நேரம் முழிச்சிருந்த்தற்கு,நான் இந்த டைம்க்கு வருவேனு கூட யாபகம் இருக்கா?இப்போ எனக்கு தான் ரொம்ப நெகிழ்ச்சியா இருக்கு பா,இப்படி ஃபிரண்டி கிடைச்சதுக்கு,இவ்ளோ நாள் மிஸ் பண்ற மாதிரி இருந்ததுபா..இப்போ ரொம்ப சந்தோசம்

எப்படிபா இருக்கீங்க?மனதில் மறக்காத தோழி தான்பா நீங்க!உங்க பாப்பா பெயர் என்ன? குழந்தைக்கு என்ன வயது?

அததான் நானும் சொன்னேன் அரட்டைல எல்லர் கூடவும் கலக்கிட்டி இருக்கீங்கனு,சரி சாப்டாச்சாபா? என்ன பண்றீங்க? இப்போ ஆன்லைன் வரமுடியாதுபா,கொஞ்சம் பிஸியாக போறேன்,ஹா ஹா வீட்டில ஃபிரிட்ஜ் கிளீன் பண்றேன்,ரொம்ப ஐஸ் ஆகிடுச்சு,அதான் அது கரைஞ்சு போறதுக்குள்ள பதிவு எல்லோருக்கும் போடலாமேனு ஓடி வந்தேன்

சுகன் டூ மச் உங்க world clock la தான் டைம் பார்த்தேன்,மணி 2மிட்நைட் உங்களுக்கே கொஞ்சம் ஓவரா இல்ல?

உங்க பதிவு 4 மணிநேரத்திற்க்கு முன் பிரசவத்தின் அனுபவங்கள் என்ற இழையில் பார்த்தேன்.அப்ப நீங்க அரட்டையில் பதிவு போடுவீங்கன்னு பார்த்தேன்.சரி அப்புறம் எனக்கு அறுசுவை ஓபன் ஆகலை.இப்ப கொஞ்ச நேரத்திற்க்கு பின் நகைச்சுவை பகுதியில் பார்த்தேன்.

இதுக்கு பதில் நாம அரட்டையில் போடலாம்னு டைப் பண்ணிட்டு பார்த்தால்,புது இழை ஆரம்பிச்சிருக்கீங்க.சரி இதிலேயும் விசாரிச்சிட்டீங்களா,அதான் இன்னும் கொஞ்சம் டைப் பண்ணி பதிவு போட்டேன்.ஆமாம்பா மணி 2:15 ஆகிடுச்சு.நான் தூங்க போறேன்.அப்புறமா பேசலாம்.ஒகே பை..

மேலும் சில பதிவுகள்