வடை தட்டுவது எப்படி?

வணக்கம் தோழிகளே ,
வடை தட்டுவது எப்படி ? யாரaவது தெரிந்தால் சொல்லுங்களேன். உளுந்து வடை செய்ய வரவில்லை. ஓட்டை போட்டு அம்மா செய்வது போல் வர வேண்டும். மிருது வாகவும் முறுமுறுப்பாகவும் உளுந்து வடை செய்ய உதவுங்கள். மாவு எப்படி அரைப்பது ,எவ்வளவு நேரம் உளுந்து ஊர வேண்டும். நானும் பல முறை முயன்று இருக்கிரேன் வரவில்லை.

அன்புடன்
உமா , Riverside ,CA,USA.

உமா உழுந்துவடைக்கு மா அரைப்பதுமில்லை சேர்ப்பதுமில்லை.உழுந்து அரைக்கும்போது தண்ணீர் சேர்க்க வேண்டாம் தண்ணீர் சேர்த்தால் உங்களுக்கு ஓட்டை போட வராது.ஒவ்வொருமுறை வடையை கையில் எடுக்கும்போதும் கைக்கு தண்ணீர் பூசினால் கையில் ஒட்டாமல் வரும் .உழுந்து 1 மணித்தியாலங்கள் ஊறினாலே போதுமானது.
அறுசுவையில் வடை பஜ்ஜி என்று இருக்கிறதே பார்க்கவில்லையோ.அல்லது இந்தாங்கோ உழுந்து வடை லிங்
http://www.arusuvai.com/tamil/node/6496

சுரேஜினி

நான் குறிப்புகள் பார்த்து இருக்கிறேன். ஆனால் எனக்கு வடை தட்டவும் ஓட்டை போடவும் தான் வரவில்லை. நான் அதிக நீர் சேர்த்து விட்டேன் போல் தோன்றுகிறது. நாளையே முயன்று பார்க்கிரேன்.

மீண்டும் நன்றி பதில் கொடுத்தமைக்கு.
உமா.

வடைக்கு மாவு அரைக்கும் போது அதிகம் தண்ணீர் சேர்க்க கூடாது. தண்ணீர் அதிகமாக இருந்தாலும் ஓட்டை போட வராது, அதிகமாக எண்ணெயும் இழுத்து விடும். மாவில் அதிகம் தண்ணீர் சேர்ந்து விட்டால் சிறிது அரிசி மாவு சேர்த்துக் கொள்ளவும். வடை தட்டும் போது ஒரு சின்ன வாழை இலை அல்லது ஒரு கவரை எடுத்து, அதில் மாவை வைத்து தட்டி நடுவில் ஓட்டை போட்டு எண்ணெயில் பொரித்து எடுக்க சுலபமாக இருக்கும். கையில் மாவு ஒட்டாமல் இருக்க சிறிது தண்ணீரை தொட்டுக் கொள்ளவும்.

senbagababu

Thanx senbaga.......i'll try this method.

வடை அதிகம் எண்ணெய் இழுக்காம இருக்க என்ன செய்ய வேண்டும். கூறுங்கள் please........

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

மேலே பாப்பி குறிப்பிட்டுள்ள மாதிரி, தண்ணீர் குறைவாக சேர்த்தால் அதிகம் எண்ணெய் இழுப்பதை தவிர்க்கலாம். மாவு அரைத்தபின் அதிக நேரம் விடாமல் விரைவில் சுட்டெடுக்க வேண்டும். ஜஸ்ட் இன்கேஸ் மீதமாகுமளவு மாவிருந்தால் வெங்காயம், கருவேப்பிலை, மல்லி சேர்க்கும் முதல் அளவிற்கதிகம் உள்ள மாவை வேறொரு பாத்திரத்தில் எடுத்து ஃபிரிஜ்ஜில் வைத்து பிறகு உபயோகிக்கலாம். 2அல்லது 3 நாட்களுக்குள் பயன்படுத்திவிடவேண்டும், இல்லாவிட்டால் மேலும் எண்ணெய் அதிகம் இழுக்கும்.

உத்தமி.

உத்தமி எப்படி இருக்கிங்க நல்லா இருக்கிங்கலா. உங்க பெயர் நல்லா இருக்கு. நீங்க குடுத்த டிப்ஸ்க்கு நன்றிபா.....

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

ஹாய் பிரபாதாமு,
வடைக்கு உளுந்து ஊறவைக்கும் போது பச்சரி்யும், ஜவ்வரிசியும் சேர்த்து ஊற வைத்தால் வடை மேலே மொறுமொறுப்பாகவும், உள்ளே மெத்தென்றும் இருக்கும்.
அரைக்கும் போது அதிகம் தண்ணீர் விடாமல் கெட்டியாக அரைக்க வேண்டும்.
முக்கால் பதம் அரைந்ததும் உப்பு சேர்த்து அரைக்கவும். உப்பு சேர்த்தால் மாவு தண்ணீர் விடும். முழுதும் அரைத்து உப்பு சேர்த்தால் மாவு தண்ணீர் விட்டு வடை எண்ணெய் குடிக்கும்.
வெங்காயம் ஓரளவில் இருக்க வேண்டும். அதிகம் தேவை இல்லை.
அப்படியும் மாவு தண்ணீர் அதிகமாக இருந்தால், சிறிது ரவை அல்லது பாசிப்பருப்பு கலந்து கால் மணி நேரம் வைக்க தண்ணீர் இழுத்து விடும். அரிசி மாவை அதிகம் கலந்தால் வடை இறுகலாக இருக்கும்.
மாவு ரொம்பவும் அரைக்கக் கூடாது. அரையாமலும் இருக்கக் கூடாது.
வெண்ணெய் போல் திரண்டு வரும் போது எடுத்து நறுக்கிய வெங்காயம் கலந்து வடை சுட வேண்டும்.
அரைத்து ரொம்ப நேரம் வைக்கக் கூடாது.
நான் மிக்ஸியில் தான் அதிகம் அரைத்து வடை செய்வேன். நன்றாகவே வரும்.
அரைக்கும் பதம் தான் முக்கியம்.
உள்ளங்கையில் லேசாக தண்ணீர் தடவிக் கொண்டு வலது கையை தண்ணீரில் நனைத்து தேவையான மாவை உருண்டையாக எடுத்து உள்ளங்கையில் தட்டி, ஆள்காட்டி விரலை ஒருமுறை தண்ணீரில் நனைத்து ஓட்டை போட்டு, கையை சாய்த்து மாவை எடுத்து எண்ணெயில் போடவும். கஷ்டம் போல் தோன்றினால், வாழை இலை அல்லது பிளாஸ்டிக் பேப்பரில் தட்டியும் போடலாம்.
எண்ணெயில் போடும் போது தள்ளி தள்ளி போட வேண்டும். இல்லையேல் ஒட்டிக் கொள்ளும்.
இதுதான் வடை சுடும் ரகசியம்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

செல்வியக்கா.. விளக்கோ விளக்கென்று நல்ல விளக்கமாக விளக்கி எழுதிவிட்டீங்கள். ஆனால் செல்வியக்கா... இந்த சவ்வரிசி சேர்க்கும்போது கொஞ்சம் எண்ணெய் குடிப்பதுபோல் இருந்ததே.. அல்லது வேறு காரணமோ தெரியவில்லை. எனக்கு எப்பவும் எண்ணெய் குடிப்பதில்லை. ஆனால் போனதடவை சவ்வரிசி சேர்த்தபோது கொஞ்சம் எண்ணெய் அதிகம் வடையில் ஒட்டியதுபோல ஒரு உணர்வு இருந்தது.

நான் எப்பவும் முதல் நாளே அரைத்து பிறிஜ்ஜில் வைத்து விடுவேன். சுடுவதற்கு அரை/ஒரு மணித்தியாலத்தின் முன்னர் எடுத்து உப்பு, வெங்காயம், ப.மிளகாய், பெரிய சீரகம், கறிவேப்பிலை சேர்ப்பேன். நல்ல மெது மெது வென்ற வடையாக இருக்கும்.

தண்ணித் தன்மை அதிகமானால் ஒரு மணிநேரம் பிறிஜ்ஜில் வைத்து எடுத்துச் சுட்டால் , ஓட்டையிடுவது சுலபம். துப்பரவுக்குத் தண்ணி விடாமல் அரைத்தால், வடையின் மென்மை குறைவாக இருக்கிறது... இது என் கண்டுபிடிப்பு.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

மீண்டும் நன்றி செல்வி மேடம்...
எனது சந்தேகங்கள் அனைத்தையும் தீர்த்து விட்டீர்கள். எனக்கு மாவு அரைப்பதிலும் , இருக்கமான வடையாக இருப்பதும்,எண்ணை குடிப்பதும் மிகவும் பெரிய சந்தேகங்களாக இருந்தது.
நான் அம்மாவிடம் எந்த சமையலும் கற்று கொள்ளவில்லை.இந்த அருசுவையில் தான் நிறைய கற்றுக்கொள்கிறேன்.திருமணம் முடிந்து என்னை போன்றோர் வெளிநாடு செல்வதால் உஙகளை போன்றொரின் குறிப்புகள் மிகவும் பயனுள்ளதாய் இருக்கிறது.

மீண்டும் நன்றி
உமா என்கிற pappy

மேலும் சில பதிவுகள்