சுறா மீன் குழம்பு

தேதி: February 1, 2009

பரிமாறும் அளவு: 4

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (1 vote)

 

சுறா மீன் - 1/2 கிலோ
சின்ன வெங்காயம் - 100 கிராம்
தக்காளி - 1
கறிவேப்பில்லை - 5 இலை
கடுகு - தாளிக்க
வெந்தயம் - 1/2 தேக்கரண்டி
பூண்டு - 4 பல் + 1 பல்
இஞ்சி - சிறிய துண்டு
பச்சை மிளகாய் - 2
கொத்தமல்லி - சிறிதளவு
எண்ணெய் - 2 தேக்கரண்டி
கரைத்து கொள்ள வேண்டியவை:
புளி - நெல்லிக்காய் அளவு
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
தனியா தூள் - 1 தேக்கரண்டி
உப்பு - 2 தேக்கரண்டி
வறுத்து அரைக்க வேண்டியவை:
மிளகு - 10
சீரகம் - 1 தேக்கரண்டி


 

முதலில் மீனினை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.
வெங்காயம், தக்காளி , 4 பல் பூண்டினை பொடிதாக வெட்டி வைக்கவும்.
புளியினை 4 கப் தண்ணீரில் கரைக்கவும். கரைத்து வைத்துள்ள புளியுடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள் , தனியா தூள் மற்றும் உப்பு சேர்த்து கரைக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் காயவைத்து அதில் கடுகு போட்டு தாளித்து பின் வெந்தயம் சேர்த்து பின் பூண்டினை போட்டு வதக்கவும்.
அதன் பிறகு வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கிய பிறகு தக்காளி மற்றும் கரைத்து வைத்துள்ள புளியினை ஊற்றி 15 நிமிடம் கொதிக்க விடவும்.
இப்பொழுது மிளகு மற்றும் சீரகத்தினை வாணலியில் வறுத்து எடுத்து மிக்ஸியில் பொடித்து கொள்ளவும்.
இஞ்சியினை பொடியாக அரிந்து கொள்ளவும். 1 பல் பூண்டினை நசுக்கி வைக்கவும். பச்சை மிளகாயினை இரண்டாக கீறி கொள்ளவும்.
குழம்பு நன்றாக கொதி வந்தவுடன் மீன் , அரைத்த பொடி, பூண்டு, இஞ்சி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து மீனை வேக விடவும்.
கடைசியில் கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
இப்பொழுது சுவையான சுறா மீன் குழம்பு ரெடி.


குளிர் காலத்தில் சாப்பிட மிகவும் அருமையாக இருக்கும். சளி, காய்ச்சல் உள்ளவர்கள் இதனை சாப்பிட சீக்கிரம் குணமடையும். குழந்தை பெற்ற பெண்கள் சாப்பிட பால் நன்றாக சுரக்கும்.
சுறா மீனை மற்ற மீன் குழப்பு வைப்பது போல் வைத்தால் சுவையாக இருக்காது.

மேலும் சில குறிப்புகள்


Comments

சுறா மீன் குழம்பில் தேங்காய் அரைத்து சேர்கலாமா?

கீதா இன்று மதியம் இந்த குழம்பு செய்தேன்.சூப்பரா இருந்துச்சு.நன்றி
செல்வி

சவுதி செல்வி

மிகவும் சந்தோசம் பா…இப்படி சமைத்தால் மிகவும் ருசியாக இருக்கும்..அதிலும் 3 -4 மணி நேரம் கழித்து சாப்பிட்டால் இன்னும் சுவை கூடும்..
செய்த பின்னுட்டம் தந்த்திற்கு மிகவும் நன்றி.
அன்புடன்,
கீதா ஆச்சல்

சுறாக் குழம்பு வைத்தேன் நன்றாக இருந்தது.மிளகு சீரகம் வறுத்து அரைத்துப் போட்டதால் சுவை வித்தியாசமாக நன்றாக இருந்து.

நன்றி,
"அன்பான சொல் மருந்தாக இருப்பதோடு வாழ்த்தவும் செய்கிறது"

மிகவும் நன்றி வத்சலா மேம்.
அன்புடன்,
கீதா ஆச்சல்

வணக்கம் மேடம்
சுறா மீனிற்கு ஹிந்தியில் பெயர் என்ன? உதவி செய்யுங்கள். நன்றி