கைமா பட்டாணி குருமா

தேதி: February 1, 2009

பரிமாறும் அளவு: 2 நபர்களுக்கு.

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கொத்திய ஆட்டுக்கறி - 200 கிராம்,
பச்சை பட்டாணி - கால் கிலோ,
சின்ன வெங்காயம் - 5,
தக்காளி - 2,
இஞ்சி - சிறிது,
பச்சை மிளகாய் - 8,
தேங்காய் - 1 மூடி,
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி,
பொட்டுக்கடலை - 1 கைப்பிடி,
சோம்பு - 1 தேக்கரண்டி,
கசகசா - 1 தேக்கரண்டி,
பட்டை - சிறிது,
கிராம்பு - 3,
கறிவேப்பிலை - சிறிது,
நெய் - 2 தேக்கரண்டி,
உப்பு - தேவையான அளவு.


 

கறியை கழுவி தண்ணீரை பிழிந்து வைக்கவும்.
தக்காளியையும் வெங்காயத்தையும் பொடியாக நறுக்கி வைக்கவும்.
பச்சை மிளகாய் லேசாக எண்ணெயில் வதக்கி வைக்கவும்.
அத்துடன் தேங்காய், இஞ்சி, கசகசா, சோம்பு, பொட்டுக்கடலை சேர்த்து நைசாக அரைக்கவும்.
கொத்தின கறியை சிறிது தண்ணீர் சேர்த்து வேக விடவும்.
கறி பாதி வெந்ததும் பட்டாணியை சேர்த்து வேக விடவும்.
கறி நன்றாக வெந்ததும், அரைத்த விழுது, தக்காளி, உப்பு, சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
எல்லாம் வெந்து ஒன்றாக கலந்ததும் இறக்கி வைக்கவும்.
வாணலியில் நெய் விட்டு, பட்டை, கிராம்பு, கறிவேப்பிலை தாளித்து நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும்.
வெங்காயம் நன்கு வதங்கியதும் குருமாவில் கொட்டி கலக்கவும்.


சாதத்திற்கும் சப்பாத்திக்கும் நன்றாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்