சமைத்து அசத்தலாம் - 7, எல்லோரும் வாங்கோ பிளீஸ்!!

அன்புத் தோழிகளே....

சமைத்து அசத்தலாம் பகுதி 6, இனிதே நிறைவேறிவிட்டது. அதேபோல், இது பகுதி -7 உம் இனிதே நிறைவேற, எல்லோரும் கலந்துகொள்ளவேண்டும் எனத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

நாம் இங்கே நகைச்சுவை, பாட்டு, பட்டிமன்றம்,கவிதைகள், இன்னும் எத்தனையோ எத்தனையோ எல்லாம் கதைக்கிறோம், அதேபோல், இதற்கும் கொஞ்சம் நேரம் ஒதுக்குவோம். நான் என்ன சொல்லவருகிறேன் என்றால், இங்கே கூட்டாஞ்சோறில், அதிகம் குறிப்புக்களில் ஆரம்பித்து, அப்படியே இறங்குவரிசையில் ஒவ்வொருவரின் குறிப்புக்களிலும், ஏதோ எம்மால் முடிந்ததை வாரா வாரம் செய்து இங்கே போடுவோம்.

பின்னூட்டங்களை குறிப்புக்களின் கீழ் அனுப்பவேண்டும், ஆனால் என்ன என்ன செய்தீர்கள் என்பதை இங்கே தெரிவிக்க வேண்டும். உடனுக்குடன் தெரிவித்துவிடுங்கள், அப்போதான் கணக்கெடுக்கும்போது தவறாமல் இருக்கும். நாள் போனால் என்ன செய்தோம் என மறந்துவிடலாம், பின்னர் லிஸ்ட் வந்ததும்தான் நினைவுவரும். எனவே தயவு செய்து, செய்யச் செய்ய இங்கே தெரிவியுங்கள்.

குறைந்தது இரு குறிப்புக்களாவது செய்ய வேண்டும், நாளை திங்கட் கிழமை ஜெயந்திமாமியினுடையதையும்(174), தயாபரன் வஜிதாவினுடையதையும்(26) சேர்த்துச் செய்யப்போகிறோம். (இதற்கான விளக்கம் தேவையெனில், தயவுசெய்து பகுதி-5 இன் கடைசிப் பதிவுகளைப் பாருங்கள்),முடிந்தவரை இருவரது குறிப்புக்களிலிருந்தும் தெரிவு செய்து, செய்யுங்கள். வரும் செவ்வாய்க்கிழமை (10/02) முடிவடையும். புதன்கிழமை(11/02), செய்தவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டு, அசத்தல் ராணி யார் என்பதும் தெரியவரும்.. இப்படிச் செய்வதால் எல்லோரது குறிப்பையும் செய்து பார்த்து அவர்களை ஊக்குவிக்க ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும் என நினைக்கிறேன்.

எல்லோரும் வாங்கோ, யார் யாரெல்லாம் இணைகிறீங்கள் என்பதை வந்து சொல்லுங்கள். இனி ஏதாவது சந்தேகங்கள் குறைபாடுகள் இருப்பின் கேளுங்கள்.. அப்பப்ப வருவேன்.

நன்றி,
"ஒரு கை தட்டினால் சத்தம் வராது, பல கைகள் இணைந்தால் எதையும் சாதிக்கலாம்"

எம்மோடு இணைந்து குறிப்புக்கள் செய்பவர்களுக்கும், எம்மை ஊக்குவித்து வாழ்த்துபவர்களுக்கும் மிக்க நன்றி.

நேரத்திற்கு கணக்கெடுத்து, சரியான நேரத்துக்கு பட்டியலை வெளியிட்டு, எல்லோரையும் அசத்தும் ரேணுகாவிற்கும் மிக்க நன்றி.

ஸ்ரீ, இமா, வின்னி, கிருத்திகா, வனிதா, ESMS செல்வி, இலா, ரேணுகா, திஷியந்தி, தனிஷா, வத்சலா, அரசி, இந்திரா, மாலி, ஜலீலாக்கா, சுரேஜினி, மனோகரி அக்கா, ஆஸியா, கவின், நர்மதா, சாய்கீதா, மேனகா, விஜிசத்யா, உத்தமி, கவிசிவா, பர்வீன்பானு, சீதாக்கா, ஜூலைகா, பிரியா, ஜஸி, மனோஅக்கா, காயத்ரி, ரஸியா, உத்ரா, கீதா ஆச்சல், ஸாதிகா அக்கா.... அனைவருக்கும் மிக்க நன்றி. கலந்துகொள்ள முடியாமல் போனவர்கள், இம்முறை கலந்துகொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்

மற்றும் , முடியுமானவர்கள் ஸ்டெப் பை ஸ்டெப் ஆகவோ அல்லது முடிவிலோ படமெடுத்து அட்மினுக்கு அனுப்பி வையுங்கள். ஸ்டெப் பை ஸ்டெப்பாக படமெடுக்க நினைப்பவர்கள், முன்கூட்டியே தெரிவித்துவிடுங்கள் எந்தக் குறிப்பிற்கு எடுக்கப் போகிறீங்கள் என்று.

நாளை திங்கட்கிழமை(02/02) சமைக்கத் தொடங்குவோம்.... எல்லோரும் வாங்கோ....

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

ஹாய் அதிரா,
உங்க ஆர்வம் எனக்கும் ஒட்டி கொண்டது. இந்த வார சமையல் யாருன்னு பாக்க ஓடி வந்தேன். ஜெயந்தி மாமி குறிப்புகள் பார்த்தேன். எல்லாமெ வெஜ் ஆனதால்
இன்னும் சந்தோசம். என்னால் முடிந்த வரை செய்யறேன்.

அன்புடன்
கிருத்திகா

அழைப்புக்கு நன்றி. கண்டிப்பா இந்த முறை நீங்க நிஜமாவே கஷ்டப்பட்டு எண்ணும் அளவிற்கு செய்து அசத்திட்றேன்.
அன்புடன்,
கீதாலஷ்மி!

அதிரா நீங்கள் கூப்பிட்டவுடன் சமத்துபுள்ளையா சமைத்துவிட்டு வந்துவிட்டேன்.
என்னுடைய இன்றைய சமயல் ஜெயந்தி மாமியின் சிம்பிள் சைட்டிஷ் பூரிக்கு, மைதாபூரி.

தயாபரன்வஜிதாவின் முட்டைசான்விச்.
செல்வி.

சவுதி செல்வி

இந்த முறை ஜெமாமியின் ரெஸிப்பி. அவ்ளோவும் வெஜ் சோ கண்டிப்பா நிறைய டிஷ் செய்ய நினைக்கிறேன். முடிந்தால் போட்டோ எடுத்து அனுப்புவேன். இலாவும் டயட் என்பதால் நிறைய செய்வாங்கணு நினைக்கிறேன்

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

ஆகா... ஓடிவந்து கைகொடுக்கும் அனைவருக்கும் எனது நன்றி. மீனா(கிருத்திகா) உங்களை மீனா என்றே அழைக்க விடுங்கள், அப்போதான் எனக்கு இலகுவாக இருக்கு. மிக்க நன்றி... ஆரம்பியுங்கள்... சுரேஜினி சொன்னதுபோல் "டுமீல்" வைத்தாயிற்று.

சாய்கீதா... ஓடிவந்தமைக்கு மிக்க நன்றி. அசத்துங்கோ.... ஒருகை பார்த்திடுவோம்.

செல்வி சமைத்துவிட்டீங்களா? சமத்துப் பிள்ளை. மிக்க நன்றி.

உடன்பிறப்பே தனிஷா.... இடையிடையே இப்படி சொன்னால்தான், நாங்களும் மறக்கமாட்டோம் இந்த உடன்பிறப்பு மற்ரரை.(சிவனே எனத் தன்பாட்டில் இருக்கும் இலாவை இப்படி மாட்டிவிடுறீங்களே:)... இலா!!! சூப்பர் மாட்டிதான்:) )

அதுதானே ஜெயந்திமாமி சைவக் குறிப்புக்களை அள்ளி வழங்கியிருக்கிறார்... அத்துடன் வஜிதாவின் குறிப்புக்களில் அசைவமும் இருக்கிறது அசத்திடுவோம். மிக்க நன்றி.

எல்லோரும் வாங்கோ.... பயப்படாமல் சமைக்கலாம் ஏனெனில் சைவக் குறிப்புக்கள்தான் இம்முறை அதிகம்... உடலுக்கும் நல்லது.. வாங்கோ அசத்துவோம்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

என்ன எப்பொழுதும் பிஸியா. வந்தால் சமைத்து அசத்தலாம் பகுதிக்கு மட்டுமே வருகிறீர்கள். இலா சைவத்து மாறிவிட்டார் என்று கூறியிருந்தார் அதான் கூப்பிட்டேன்.

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

அதிரா.... வந்துட்டேன். அதிரா கூப்பிட்டு வராமா இருப்பனா?! ;)

சைவம்'னா எனக்கு கொஞ்சம் கஷ்டம், இங்க நம்ம ஊர் காய்கறிகள் எல்லாம் கிடைக்காது, கிடைக்கிறதை வைத்து செய்து கண்டிப்பா சொல்றேன்.

வஜிதா குறிப்பு:

1. சிலோன் சிக்கன் ப்ரை
2. தேங்காய் பூ ஸ்வீட்

நம்ம மாமி குறிப்பு:

1. வெரி ஈசி திடீர் சாம்பார் சாதம்
2. வேர்க்கடலை பொடி

சேர்த்துக்கங்க கணக்கு... :)

அதிரா ஏன் 3 நாளா ஆளை காணோம்?! இன்னைக்கு கூட வற்றீங்களோ இல்லையோன்னு நினைசுகிட்டு இருந்தேன். நான் உங்களை எங்கலாம் தேடுறது?!

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா... வந்திட்டீங்கள் அதுவும் செய்து கரெக்ட்டா சொல்லிக்கொண்டு.. மிக்க நன்றி.

அதெப்படி எனக்கே தெரியாது, நீங்கள் கரெக்ட்டா 3 நாளெண்டு கணக்கெல்லாம் சொல்லுறீங்கள்:), நான் அறுசுவை பார்த்தால் ஒரு பதிவெண்டாலும் போடாமல் என்னால் போக முடியாது... அதாலதான் அதிகம் பிஸியென்றால் பார்க்க மாட்டேன். இங்கும் சனி ஞாயிறெல்லோ...

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அதிரா நலமா?குழந்தைகள் நலமா?நானும்நினைத்தேன் உங்களை கானாம் என்று,நீங்கள் களைப்பில் ஒய்வெடுத்து கொண்டு இருப்பீங்கன்னு விட்டுட்டேன்

இலங்கை முட்டை கோவா வறை இது வஜிதா குறிப்பில் செய்தேன்,நான் மிளகு பூண்டு சேர்த்தது இல்லை,நல்லா இருந்தது,

மாமி குறிப்பில் பேர்ல் டீ க்கு ஜவ்வரிசி வேகுது,

அப்பறம் வரேன் ,குறிப்பு தேடிகிட்டு இருக்கேன்

என்றும் அன்புடன்
ரேணுகா
Sacrifice anything for Love,But don't sacrifice Love for anything...

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

மேலும் சில பதிவுகள்