கறி குழம்பு

தேதி: February 2, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.3 (3 votes)

 

மட்டன் - 1/2 கிலோ
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 1 பெரியது
இஞ்சி, பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
மட்டன் மசாலா - 2 டீஸ்பூன்
எண்ணெய் இல்லாமல் வறுத்து அரைக்க:-
மல்லி விதை - 3 டேபுள்ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
மிளகு - 1 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 5
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 4 ஸ்பூன்


 

வறுக்க கொடுத்துள்ளவைகளை லேசாக வறுக்கவும், அடுப்பை மிதமாக வைத்து 5 நிமிடம் கருகாமல் வதக்கி ஆறவைத்து நைஸாக மிக்ஸியில் அரைக்கவும்,
வெங்காயத்தை நீளமாகவும், தக்காளியை பொடியாகவும் நறுக்கி வைக்கவும்,
அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கவும், தக்காளி சேர்த்து கரையும் வரை வதக்கவும்.
மட்டன், மட்டன் மசால் இரண்டும் சேர்த்து நன்றாக வதக்கி அரைத்த விழுதை சேர்க்கவும்,
எல்லாவற்றையும் நன்றாக வதக்கி உப்பு போட்டு 3 கப் தண்ணீர் சேர்த்து வேகவிடவும், தேவையெனில் இன்னும் சேர்த்து கொள்ளவும், மட்டன் வெந்ததும் இறக்கி பரிமாறலாம்.
இதே போல் சிக்கனில் செய்யலாம்.


எங்கள் வீட்டில் இப்படி தான் மட்டன், சிக்கன் குழம்பு வைப்பார்கள், மசாலா ஆட்டுக்கல்லில் அரைத்து வைத்தால் அத்தனை சுவையாக இருக்கும்.
இந்த குழம்பு இட்லி, தோசை, சப்பாத்தி, பரோட்டா, சாதம் என அனைத்துக்கும் சூப்பராக இருக்கும், குழம்பு ரொம்ப திக்காக இல்லாமல் லேசாக தண்ணீயாக வைத்து சாதத்தில் ரசம் போல் ஊற்றி சாப்பிடலாம், அத்தனை ருசியாக இருக்கும் மல்லியை வதக்கும் போது ரொம்ப வறுத்தால் குழம்பு கலர் மாறிவிடும். அரைக்கும் போது முதலில் தண்ணீர் இல்லாமல் அரைத்துவிட்டு, பிறகு கொஞ்சம் நேரம் தண்ணீர்விட்டு அரைத்தால் நன்றாக மசியும்.

மேலும் சில குறிப்புகள்