கறிவேப்பிலை சாதம்

தேதி: February 2, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (1 vote)

 

உதிரியாக வடித்த சாதம் - 1 கப்
தாளிக்க:-
எண்ணெய் - 2 ஸ்பூன்
கடுகு, உளுத்தம்பருப்பு - 1/2 ஸ்பூன்
கடலைப் பருப்பு - 1/2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
வறுத்து அரைக்க:- (பொடியை போல் அரைக்கவும் )தண்ணீர் சேர்க்க கூடாது
கறிவேப்பிலை - 1 கைபிடி
உளுந்தம் பருப்பு - 1 ஸ்பூன்
மிளகு - 1/2 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்


 

கறிவேப்பிலையை முதலில் வறுக்கவும், மொறு மொறுப்பானவுடன் இறக்கி விட்டு மற்ற பொருட்களை வறுத்து ஆற வைக்கவும்.
ஆறியதும் மிக்ஸியில் போட்டு நைஸாக தூளாக்கி கொள்ளவும்
தாளிக்க கொடுத்துள்ளவையை தாளித்து இறக்கி சாதம், கறிவேப்பிலை பொடி, உப்பு சேர்த்து நன்றாக கிளறி பரிமாறவும்.


நல்ல மணமாக இருக்கும்

மேலும் சில குறிப்புகள்


Comments

ஹாய் ரேணுகா! இன்று உங்கள் கருவேப்பிலை சாதம் செய்தேன்.
சுவை வித்தியாசமாக இருந்தது.
எனக்கு பிடித்திருந்தது.
அதற்கு உங்கள் பகுதியில் உள்ள கறி வறுவல் செய்துள்ளேன். நல்ல கொம்பினேசன். அன்புடன் ராணி

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

ரேணுகா கறுவேப்பிலை சாதம் மிகவும் அருமை எனக்கு மிகவும் பிடித்து இருந்தது நன்றி
நன்றிகளுடன்,
லக்ஷ்மிஷங்கர்

அனாமிகா உங்க்ளுக்கு இது பிடித்ததில் மகிழ்ச்சி,ரெம்ப நல்லா இருக்கும்,மிக்க நன்றி

அன்புடன்
ரேணுகா

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

ராணி இது ரெம்ப ஈசி,கொஞ்சம் காரமா இருக்கும்,உங்களுக்கு பிடித்ததில் மகிழ்ச்சி.நன்றி ராணி

அன்புடன்
ரேணுகா

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா