தினம் இரு திருக்குறள்

கடந்த ஒரு வாரமாய் நான் யோசித்தேன்,திருக்குறள் பிள்ளைகளுக்கு தெரிந்து இருக்க வேண்டும் நான் திருக்குறள் புத்தகம் வாங்கி அவ்வப்போது சொல்லி கொடுத்து கொண்டு இருந்தேன்.கொஞ்ச நாட்களாய் எப்படியோ விட்டு விட்டேன்,தினமும் காலை ஒரு குறள் மாலை ஒரு குறள் சொல்லி குடுங்கள்,நாம் இந்தியாவில் இருந்திருந்தால் பிள்ளைகள் பள்ளியில் கற்று கொள்வார்கள்,ஆனால் இங்கு நாம் தான் அனைத்தும் கற்று தர வேண்டும்,தினமும் தமிழ் படிக்க எழுத சொல்லி கொடுங்கள்,வெளிநாட்டில் இருக்கும் பிள்ளைகள் தமிழில் பேசவே கஷ்டபடுகிறார்கள்,அது தவறு நாம் தமிழ் தாய் மொழி கட்டாயம் தெரிந்து இருக்க வேண்டும் என்று புரிய வைத்து சொல்லி குடுங்கள்,அடுத்து தேசிய கீதம்,நம் பிள்ளைகளுக்கு இதுவும் கட்டாயம் தெரிய வேண்டும் என்று நினைக்கிறேன்,நாம் எப்படி பள்ளிகளில் மரியாதையுடன் தேசிய பாடலை பாடினோமோ அதே போல் பாடி பழக்குங்கள்,பிள்ளைகளுக்கு அவ்வப்போது நாட்டை பற்றி கதையோடு சேர்த்து சொல்லுங்கள்,அப்பொழுது தான் குழந்தைகள் நாட்டுபற்றை பற்றி உணர்ந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கும்,

எனக்கு தமிழ் சொல்லி கொடுக்க இலக்கணம் அதிகமா தெரியாது,இருந்தாலும் தினமும் 2 குறள்கள் தருகிறேன்,அன்றைய குறளை அன்றே பிள்ளைக்கு பழக்கிவிடுங்கள்,அது தான் அவர்களுக்கும் எளிது..

கடவுள் வாழ்த்து:

1.அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.

பொருள்:
அகரம் எழுத்துகளுக்கெல்லாம் தலைமை பெற்றது,அது போன்றே கடவுள் இவ்வுலகத்திற்க்கெல்லாம் தலைமையுடையவன் ஆவான்.
-------------------------
2.கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅ ரெனின்.

பொருள்:-
கடவுளின் நல்ல திருவடிகளை வணங்காதவன்,கற்றும் பயனில்லாதவனாவான்.

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

ரேணுகா எப்படி இருக்கிங்க. உங்க கிட்ட பேசுரது இதுதான் முதல் தடவை. ரேணுகா இதில் திருக்குறள் மட்டும் தான் இடம் பெர வேண்டுமா. நற்றினை , குறுந்தொகை,....... இப்படி பலவும் இடம் பெறலாமா. ( or) தமிழ் என வேறு திரெட்டை ஆரம்பிக்கலாமா....... கூறுங்கள்.

நாங்கல்லும் திருக்குறள் செல்லலாம் அல்லவா.

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்.

இந்த குறளின் விளக்கம் எல்லொருக்கும் தெரிந்ததே....

மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டன்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.

கணவனின் வருவாயிற்கேற்ப செலவு செய்து குடும்பத்தை சிறப்புற நடத்தி செல்பவளே சிறந்த வாழ்க்கைத்துணையாகும்.

3.மலர்மிசை ஏகினாள் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்

பொருள்:-
அன்பர்களின் மனத்தாமரையில் வீற்றிருக்கும் கடவுளின் திருவடிகளை தியானிப்பவர்கள்,வீட்டுலகில் நிலைபெற்று வாழ்வார்கள்

4.வேண்டுதல்வேண் டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.

பொருள்:-
விருப்பு வெறுப்பற்றகடவுளின் திருவடிகளை தியானிப்பவர்க்கு எக்காலத்தும் துன்பங்கள் உண்டாகமாட்டா.

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

பிரதாமு நான் நலம்,நீங்கள் நலமா?பிரதாமு நீங்கள் நற்றினை , குறுந்தொகை என்று வரிசையாய் சொல்வதாக இருந்தால் தனியாகவே தொடங்கலாம்,தலைப்பு நற்றினை என்று கொடுத்து அதற்க்கு கீழ் ஆரம்பித்தால் நல்லா இருக்கும்,நாம் எல்லாவற்றையும் ஒன்றாக கலக்க வேண்டாமே,தனிதனியாக இருந்தால் குழப்பமும் இருக்காது கற்றுக்கொள்ளவும் எளிதாக இருக்கும் அல்லவா,நீங்கள் எப்படி யோசித்தீர்கள் என்றும் சொல்லுங்கள் அது படி செய்யலாம்,திருக்குறள் யார் வேண்டுமானாலும் இங்கு சொல்லலாம்,ஆனால் வரிசையாக வரவேண்டும்,நான் 3,4 குறள் கொடுத்தால் நீங்கள் 5,6 என்று பதிய வேண்டும்,இது போல இருந்தால் வரிசையாய் படித்தது போல் இருக்கும் எத்தனையாவது குறள் என்று எண்ணிக்கை கொள்ள இயலும்,

என்றும் அன்புடன்
ரேணுகா
Sacrifice anything for Love,But don't sacrifice Love for anything...

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

(5) இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.
(6)பொறிவாயில் ஜந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.

"முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்"

துஷ்யந்தி இந்த இரண்டு குறளுக்கும் பொருள் சொன்னா நல்லா இருக்கும்

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

(5) இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.

(5) பொருள்:
இறைவனின் மெய்யான புகழை விருப்பத்தோடு சொல்லிப் போற்றுபவரிடம்,அறியாமையால் விளையும் பெருந்துன்பங்களும் சேர்வதில்லை

English Translation
Kural 5

The men, who on the 'King's' true praised delight to dwell,
Affects not them the fruit of deeds done ill or well.

Explanation :
Kural 5
The two-fold deeds that spring from darkness shall not adhere to those who delight in the true praise of God.

(6)பொறிவாயில் ஜந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.

(6) பொருள்:
ஜம்பொறிகளின் வழியாக பிறக்கும் ஜவகை ஆசைகளையும் விட்ட இறைவனது பொய்யற்ற ஒழுக்க நெறியில் நின்றவர்,நெடுநாள் நிலைபெற்று வாழ்வர்.

English Translation :
Kural 6

Long live they blest, who 've stood in path from falsehood freed;
His, 'Who quenched lusts that from the sense-gates five proceed'

Explanation :
Kural 6

Those shall long proposer who abide in the faultless way of Him who has destroyed the five desires of the senses

(7)தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால் மனக்கவலை மாற்ற்ல் அரிது

(7) பொருள் :
தனக்கு நிகர் இல்லாத இறைவனின் அடிகளை இடைவிடாமல் நினைப்பவர்க்கு அல்லாமல் மற்றவர்க்கு மனக்கவலையை நீக்குதல் இயலாது.

English Translation :
Kural-7

Unless His foot, 'to Whom none can compare,' men gain,

Explanation :
Kural-7
Unless Hisfoot,'to Whom none can compare,'men gain,
'Tis hard for mind to find relief from anxious pain.
Anxiety of mind cannot be removed, except from those who are united to the feet of Him who is incomparable.

(8)அறஆழி அந்தணன் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்
பிற ஆழி நீந்தல் அரிது

(8) பொருள் :
அறக்கடலாகவும் அருளாளனாகவும் விளங்கும் இறைவனின் அடிகளை இடைவிடாமல் நினைப்பவர்க்கு அல்லாமல் மற்றவர்க்குப் பிறவிக் கடலைக் கடத்தல் இயலாது

English Translation :
Kural-8

Unless His feet 'the Sea of Good, the Fair and Bountiful,' men gain,
'Tis hard the further bank of being's changeful sea to attain.

Explanation :
Kural-8

None can swim the sea of vice, but those who are united to the feet of that gracious Being who is a sea of virtue.

"முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்"

குறள்-9 தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது
விளக்கம்-ஒப்பாரும் மிக்க எவருமில்லாதவனுடைய அடியொற்றி நடப்பவர்களைத் தவிர,மற்றவர்களின் மனக்கவலை தீர வழியேதுமில்லை.
Explanation:His feet,whose likeness none can find,
Alone can ease the anxious mind.

ஹாய் பா... என்னிடம் ஒரு புக் இருக்கு. லைப்பரரில இருந்து எடுத்துட்டு வந்தேன். ரொம்ப அழகா ஆத்திச்சூடி கொன்றைவேந்தன் கதையோடு கூடிய விளக்கமாக உள்ளது. முடிந்தால் தினம் ஒரு ஆத்திச்சூடி மற்றும் ஒரு கொன்றைவேந்தன் பதிவு செய்கிறேன்பா... ரேணு... நல்லதொரு இழை.

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

மேலும் சில பதிவுகள்