சந்தவை

தேதி: February 3, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

Average: 3 (1 vote)

 

புழுங்கல் அரிசி - 2 கப்
உப்பு - தேவையான அளவு


 

அரிசியை 2 மணிநேரம் ஊற வைத்து கிரைண்டரில் போட்டு அரைக்கவும்,
தண்ணீர் அதிகம் சேர்க்காமல் நல்ல மை போல் அரைக்க வேண்டும், கடைசியில் உப்பு போட்டு மாவை எடுத்து வைக்கவும்,
நல்ல கனமான பாத்திரத்தில் மாவை ஊற்றி அடுப்பை சிம்மில் வைத்து விடாமல் கிளறவும், கட்டிகட்டவோ அடிபிடிக்கவோ விட கூடாது,
மாவு சற்று நீர்த்து மீண்டும் கெட்டியாக தொடங்கும், ரொம்ப கெட்டியாக விடாமல் இறக்கிவிடவும், சிறிதளவு மாவை உருட்டினால் உருட்ட வர வேண்டும், கொஞ்சம் இளக்கமாக இருந்தால் பிழிய எளிது, இடியாப்பம் அச்சில், அல்லது மிக்ஸ்ர் பிழியும் அச்சில் மாவை போட்டு இட்லி தட்டில் ஒரு துணி போட்டு பிழிந்து ஆவியில் வேகவைத்து எடுக்கவும்,
இதற்கு தேங்காய் பால், சப்பாத்திக்கு வைக்கும் எந்த குருமாவும் மேட்ச் ஆகும், இல்லாவிடில் அப்படியே தாளித்து விடலாம்.


இந்த உணவும் இடியாப்பம் போல்தான். ஆனால் ருசி வேறு மாதிரியாக இருக்கும், எவ்வளவு சாப்பிட்டாலும் திகட்டாது.
சிலர் மாவை இட்லியாக ஊற்றி அச்சில் போட்டு பிழிவார்கள். இட்லி ஆறினால் நம்மால் அழுத்த முடியாது. அத்தனை கஷ்டமாக இருக்கும், இந்த முறை ஈஸியாக இருக்கும், ஆரம்பத்தில் கொஞ்சம் கை வலிக்க கிளறினால் மட்டும் போதும், ஈஸியாக செய்து விடலாம்,

மேலும் சில குறிப்புகள்


Comments

புழுங்கலரிசியில் செய்யும்பொழுது ஆறினவுடன் கடினமாக இருக்காதா? ஏனென்றால் நான் இதை செய்துபார்க்கவேண்டும்.என் கணவருக்கு பச்சரிசி ஒத்துவராது. அதனால்தான் கேட்கிறேன்.

செல்வி.

சவுதி செல்வி

அப்படி இருக்காது செல்வி,இது தொண்டையையும் அடைக்காது,சாப்டா இருக்கும்,நான் அடிக்கடி இது செய்வேன்,என் வீட்டில் இடியாப்பமே கிடையாது,இது தான்,அவருக்கு மிகவும் பிடித்தது,

என்றும் அன்புடன்
ரேணுகா
Sacrifice anything for Love,But don't sacrifice Love for anything...

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

நான் செய்துபார்த்துவிட்டு சொல்கிறேன்.

சவுதி செல்வி