தேதி: February 3, 2009
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
1. கோழி (Boneless breast or Full leg pieces) - 1/2 கிலோ
2. பூண்டு விழுது - 1 மேஜைக்கரண்டி
3. மிளகு தூள் - 2 தேக்கரண்டி
4. உப்பு
கோழி சுத்தம் செய்து மேலே ஆழமான வெட்டுகள் போட்டு வைக்கவும்.
பூண்டு, மிளகு தூள், உப்பு அனைத்தையும் சிறிது எலுமிச்சை சாறு கலந்து கோழி மீது தடவவும்.
இதை மூடிய பாத்திரத்தில் 5 மணி நேரம் பிரிஜில் வைக்கவும்.
பின் மைக்ரோவேவில் வைத்து 20 நிமிடம் கிரில் செய்யவும், எண்ணெய் சேர்க்க தேவை இல்லை.
இதை எண்ணெய் சேர்த்து ஒவனிலும் சமைக்கலாம்.
இந்த உணவு ரொமாணியாவை சேர்ந்த தோழி ஒருவர் செய்து காட்டியது. அவர்கள் தோல் நீக்குவது இல்லை. கூடவே இத்துடன் சிறிது வைனும் சேர்த்தார்கள். பேக் செய்யும்போது கோழி உடன் ஆப்பிள், கேரட் துண்டுகளும் சேர்த்தார்கள். பிடித்தமானவர்கள் இது போலும் முயர்ச்சி செய்து பாருங்கள்.