வெப்கேமிரா - படிச்சதுல தெரிஞ்ச விஷயம் தான் இது...

வெப்கேமிரா உஷார்.... அவசியம் இல்லாத கட்டுரை என நினைக்க வேண்டாம்... எச்சரிக்கையாக இருப்பது நல்லது அல்லவா.....

வெப்கேமிரா வசதியுடன் இணையத் தொடர்பு உள்ள கணிப்பொறி உங்களிடம் இருக்கின்றதா?

எச்சரிக்கையாக இருங்கள் உலகின் எந்த மூலையிலிருந்தோ நீங்கள் கவனிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றீர்கள்.

தன்னுடைய அறையில் தான் உடைமாற்றிய காட்சி எந்த ஆபாச இணையதளத்திலோ விற்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது என்பதைக் கேட்ட அவள் அதிர்ந்துதான் போனாள்.

யாரும் அத்து மீறி அந்த அறைக்குள் நுழையவில்லை?

எவருக்கும் மின்னஞ்சல் வழியாகவும், எந்த புகைப்படமோ வீடியோக் காட்சிகளோ அனுப்பவில்லை?

பின் தன்னுடைய படுக்கை அறைக்காட்சியை படம்பிடித்தது யார்?

அது எப்படி சாத்தியமாயிற்று?

புனேயில் உள்ள Asian School of Cyber Law வில் புகார் அளித்தாள். அவர்கள் சொன்ன காரணம் அவளை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது
ஆம் அவளது அறையில் உள்ள வெப்கேமிராதான் அவளை படம்பிடித்திருக்கின்றது.

செய்வதையெல்லாம் செய்துவிட்டு ஒரு ஓரத்தில் அப்பாவியாய் அமர்ந்திருந்திருக்கிறது அந்த வெப்கேமிரா.

ஆம் நம்புங்கள்; அவள் அறையில் உடைமாற்றுவதையும் அவளின் அந்தரங்கங்களையும் படம்பிடித்தது அந்த வெப்கேமிராதான்.

மீடியாத்துறையில் பணிபுரிகின்ற அந்தப் பெண்ணின் பெயர் அனி ஜோலகர் ( பெயர் மாற்றப்பட்டுள்ளது). தனது ப்ராஜக்ட்டுக்காக சில படங்களை இணையத்திலிருந்து டவுன்லோடு செய்திருக்கின்றாள்.

ஆனால் அவளுக்குத் தெரியாமலையே கணிப்பொறியில் ட்ரோஜன் என்கிற வைரஸ் / புரோகிராம் வந்து அமர்ந்து கொண்டது

அந்த ட்ரோஜன் என்கிற புரொகிராமின் மூலம் அவளது கணிப்பொறியில் இணைக்கப்பட்டுள்ள வெப்கேமிராவை ரிமொட் முறையில் இயக்கி அவளது அந்தரங்களை படம்பிடித்து அவற்றை ஆபாச இணையதளத்திற்கு விற்றுக் கொண்டிருந்திருக்கின்றான் எவனோ ஒருவன்.

உலகத்தின் இன்னொரு மூலையில் தனது நிர்வாணப்படங்களும் அந்தரங்கங்களும் திரைப்படமாக்கப்படுகின்றதை அறிந்து அதிர்ச்சியானாள் அனி ஜோலகர்.

இணையத் தொடர்புடன் உள்ள அந்த கணிப்பொறியின் வெப்கேமிராவை பெரும்பாலும் அவள் ஆன் செய்தே வைத்திருக்கின்றாள்.

இணையத்தில் உலவிவிட்டு அணைக்காமல் அப்படியே இருந்துவிட்டதுதான்; அவள் செய்த தவறு. கணிப்பொறி இடப்பெயர்ச்சி இல்லாமல்தானே அமர்ந்திருக்கின்றது அதுவென்ன செய்திட முடியும் என்று நீங்கள் சாதாரணமாய் இருந்துவிடமுடியாது. புரிந்து கொள்ளுங்கள் அது நம்மை நோட்டமிட்டுக்கொண்டிருக்கின்றது வெப்கேமிரா மூலம்.

கொஞ்ச நேரம் கழித்து உபயோகிக்கத்தானே போகின்றோம் அதற்குள் எதற்கு இணையத்தொடர்பை துண்டிக்கவேண்டும் என்று அலட்சியப்படுத்தினால் நம் அந்தரங்கங்கள் உலகத்தின் பார்வைக்கு வந்துவிடும்.

'தங்களது அறையினில் வெப்கேமிராவை வைத்திருப்பவர்கள் மிகவும் கவனமாய் இருக்கவேண்டும். அந்தரங்க விசயங்களின் பொழுது இணையத் தொடர்பு அவசியம் இல்லையெனில் அதன் இணைப்பையும் வெப்கேமிராவின் இணைப்பையும் துண்டித்துவிடுங்கள். இந்த விழிப்புணர்வினை தங்களுக்கு தெரிந்தவரையிலும் மக்களுக்கு தெரியப்படுத்தினால்தான் அவர்கள் விழிப்புணர்வு அடைவார்கள்'
- ரோகஸ் நாக்பால், ப்ரசிடண்ட் ஆப் ஆசியன் ஸ்கூல் ஆப் சைபர் லா

'தேவையில்லாமல் வெப்கேமிராவை ஆன் செய்து வைத்திருப்பது அல்லது அதன் தேவைகள் இல்லாவிட்டாலும் அதனை கணிப்பொறியுடன் இணைத்து வைத்திருப்பது மிகவும் ஆபத்தானது. நிறைய பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். பாதிக்கப்பட்ட பெண்கள் நிறையபேர் சமூக சூழலுக்குப் பயந்து அதனை புகார் தெரிவிக்காமல் இருப்பது மிகவும் பரிதாபத்திற்குரியது.'
- விஜய் முகி – கணிணித்துறை வல்லுனர்

இணையத்தில் இருந்து படங்களோ அல்லது வேறு சில பைல்களோ டவுண்லோடு செய்யும்பொழுது ட்ரேஜன் ஹார்ஸ் (Trojan Horse ) என்கிற வைரஸ் அல்லது வேறு ஏதேனும் வைரஸ் நுழையாமல் பார்த்துக்கொள்ளுங்கள். அதற்குத் தேவையான ஆன்டி வைரஸ் புரொகிராம்களை இன்ஸ்டால் செய்துகொள்ளுங்கள்.

அது மட்டுமல்ல தேவையில்லாத அல்லது கவர்ச்சியான விளம்பரங்களுடன் வருகின்ற மின்னஞ்சல்களையும் தவிர்த்து விடுங்கள்.

ஆகவே நண்பர்களே கணிப்பொறி உபயோகிக்காத நேரங்களில் அதனை அணைத்துவிடுங்கள். தங்களது அந்தரங்க விசயங்களின் பொழுது இணையத்தொடர்பும் வெப்கேமிரா தொடர்பும் துண்டிக்கப்பட்டிருகின்றதா என்று தயவுசெய்து ஒன்றுக்கு இரண்டுமுறை சரிபார்த்துக்கொள்ளுங்கள்.

இணையத்தில் உலவும்பொழுது மட்டும் இணையத்தொடர்பினை இணைத்துவிட்டு மற்றநேரங்களில் அந்த தொடர்பினை கணிப்பொறியிலிருந்து எடுத்துவிடுங்கள். அதுபோலவே வெப்கேமிராவும். யாருடனும் அவசியம் என்றால் மட்டும் அதனை இணைத்துக் கொள்ளுங்கள். மற்ற நேரங்களில் அவற்றை கணிப்பொறியுடன் இணைக்காமலேயே வைத்திருங்கள்.

இல்லையென்றால் உங்களுக்குத் தெரியாமலேயே நீங்கள் படம் எடுக்கப்பட்டுக் கொண்டிருப்பீர்கள். அந்த நபர் உங்களுக்கு பக்கத்து அறையில் அல்லது பக்கத்து கண்டத்தில் கூட இருக்கலாம்.

arunprasangi123 உண்மையிலே நல்ல கருத்து தந்ததுக்கு நன்றி. இதுபோல் ஒருசில இடங்கள்லிள் நடப்பதாக நானும் படித்து இருக்கிரேன். ஆனால் இவ்வளவு விளக்கம்மாக இல்லை. இதை அனைவரும் உணர வேண்டும்.

"பெண்களே இது உண்மையிலே பயன் உள்ள தகவல்" உஷாராக இருங்கள்.
உங்கல்லுக்கு என் மனமார்ந்த நன்றிபா.

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

அய்யோ கேட்க கொஞ்சம் பயமா தான் இருக்கு, என்ன எல்லாம் நடக்குது இந்த உலகத்துல?நல்ல தகவல் நன்றி அருண்பிரசங்கி(பெயர் சரியா? தவறு என்றால் மன்னிக்கவும்), எல்லோரும் இனி தூங்கும் போது கூட விழித்திருக்க வேண்டும்..

that was a very valuable information!!

இப்படிக்கு,
சந்தனா

பதில் கருத்துக்கள் பதித்த பிரபாதாமு, தாமரை செல்வி, mrs. சேகர் - எல்லாருக்கும் ஒரு warm wish. ஆமாம் நீங்க சொல்வது போல அளவுக்கு மீறிய உஷாரா இருக்கிறது தான் நல்லது-னு தோணுது... அறிவியல் ஒரு கத்தி போல..... பயன்படுத்தும் நபரை பொருத்தது....

ஒகே எல்லாரும் கவனமா இருங்க... எனக்கும் சேர்த்து தான் சொல்லிக்கிறேன்... ஆமாம் அதிக பிரசங்கி இல்லை... அருண் பிரசங்கி தான்....ம்ம்ம்ம்...

shaptila enemal than neega innum thoogalaya?
neega velietta news padithen romba usefull use thank u

நான் சாப்பிட்டேன்... இட்லி சாம்பார்... சரி.... நன்றி எல்லாம் எதுக்கு? ம்ம்ம்... அப்புறம்???

ArchuGiri
Very useful information thanks a lot

Archana

வணக்கம் அர்ச்சனா.... நல்லா இருக்கீங்களா???? நலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன்... அந்த வெப் கேமரா மேட்டர் எங்கோ படிச்சது தான்.. அதுக்கு எதுக்கு ரொம்ப நன்றி எல்லாம்???.. எனி வே... கத்தார் எப்படி இருக்கு??? அங்கும் குளிர் தானா??? சரி.... அர்ச்சனா... பாக்கலாம்...

வணக்கம் , உஙக பெயர் எனனு தெரியல சாரி , இஙக இப்பொ குளிர் இல்லை. நீங்க
அஎஙக இருக்குகீங்க?

ArchuGiri

Archana

ம்ம்ம்ம்... சொல்லுங்க அர்ச்சனா... என்னது என்னோட பேரு தெரியலையா??? போச்சுடா...என்னுரை படித்து பதில் போடவும்-னு சொல்லி ஒரு மொக்கை பதிவை போட்டு இருக்கேனே... நீங்க இன்னும் பாக்கலையா?? பாருங்க.... பக்கத்துல ஒரு பாட்டில் தண்ணி வச்சுக்குங்க... சரி... என்னோட சீனியர் ஒருத்தர் கத்தார்-ல இருக்கார்... ம்ம்ம்ம்.. சரி அர்ச்சனா... நீங்க வேலைய பாருங்க... நல்லது....

மேலும் சில பதிவுகள்