தேங்காய்பால் சாதம்

தேதி: February 4, 2009

பரிமாறும் அளவு: 2 நபர்கள்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பாஸ்மதி அரிசி - 1கப்
தேங்காய்பால் - ஒன்றரை கப்
வெங்காயம் - 2 பெரியது
பச்சை மிளகாய் - 4
இஞ்சி - 1 தேக்கரண்டி
பூண்டு - 8 பல்
புதினா - 1/4 கப்
கறிவேப்பிலை - 2 கீற்று
சோம்பு - 1/2 தேக்கரண்டி
பட்டை - சிறிதளவு
கிராம்பு - 4
பிரியாணி இலை - 3
முந்திரி பருப்பு - 1 தேக்கரண்டி
டால்டா - 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு


 

முதலில் வெங்காயம் மற்றும் ப.மிளகாயயை நீளவாக்கில் அரிந்து கொள்ளவும்.இஞ்சி,பூண்டை தட்டி கொள்ளவும்.புதினாவை ஆய்ந்து சிறிதாக அரிந்து கொள்ளவும்.
பாஸ்மதி அரிசியை கழுவி 1/2 மணிநேரம் ஊற வைக்கவும்.ஒரு கப் அரிசிக்கு ஒன்றரை கப் அளவு தேங்காய் பால் எடுத்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் காய்ந்ததும்,டால்டா சேர்க்கவும்.பின் சோம்பு,பட்டை,பிரியாணி இலை,முந்திரி,பூண்டு போட்டு சிவந்ததும் கறிவேப்பிலை,வெங்காயம்,ப.மிளகாயை போட்டு வதக்கவும்.
அதன்பின் இஞ்சி சேர்த்து சிறுந்தீயில் வைத்து 8 நிமிடம் வதக்கவும்.தேங்காய் பாலை ஊற்றி,புதினா மற்றும் உப்பு சேர்க்கவும்.
தேங்காய்பால் கொதித்ததும் அரிசியை போடவும்.பாத்திரத்தின் மேல் மூடியை போட்டு மூடி விடவும்.
10 நிமிடத்திற்க்கு பிறகு மூடியை திறந்து சாதத்தை உடைக்காமல் லேசாக கிளர வேண்டும்.பின் சூடாக பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

எப்படிபா எனக்கு தேவையானதா உட்கார்ந்து யோசிச்சு கொடுக்கிறீங்க? இன்னைக்கு இல்லனா நாளைக்கு செய்து பார்க்கிறேன்,இதுக்கு சரியான சைட் டிஷ் என்னனு கொஞ்சம் சொல்லுங்க..அப்போதான் பண்ணமுடியும் இல்லனா ஹஸ்க்கு பிடிக்காது..

எப்படிபா கண்டுபிடிச்சீங்க?நான் உட்கார்ந்து தான் யோசிக்கிறேன்னு!!!இதுக்கு சைட் டிஷ் ரைதா(அதான்பா தயிர் பச்சடி) இல்லாட்டி புதினா துவையல் நல்லா இருக்கும்.

ரொம்ப ரொம்ப நல்லா இருக்குங்க,இன்னைக்கு செய்து பார்த்தேன்பா..சூப்பர்ர்ர்!!!!நல்லா வந்தது..அவரும் விரும்பி தான் சாப்பிட்டார்..என்ன சைட் டிஷ் பண்றதுனு தெரியாமல் நான் உருளை குருமா தான் செய்து இருந்தேன்,இன்னொரு தரம் பண்ணும் பொது நீங்க சொன்ன புதினா துவையல் ட்ரை பண்றேன்,ரைதா எனக்கு பிடிக்காது அதாவது எனக்கு தயிர் சுத்தமா பிடிக்காது..இதுவரை நான் தயிர் என் லைஃப்ல சாப்பிட்டதே இல்ல,இனியும் மாட்டேனு நினைக்கிறேன்..