நல்லது...

அம்மா

அப்பா

தங்கச்சி

அந்திம காலத்திலும் சமையல் செய்த அப்பாவின் அம்மா

முக்கு வீட்டு கால் உடைந்த தாத்தா

சக தோழி

அனைவர் கை வண்ண சமையலையும் ரசித்து ருசித்து உள்ளேன்....

இப்படி இருக்கும் நிலையில்....

என்னை நானே மெச்சி கொள்ளும் தருணங்கள் அரிது....

அறுசுவை தளம் மூலம் தகவல் அறிந்து நானே சமைத்து நானே உண்டு நானே மேற்கண்ட தருணத்தை ஏற்படுத்தி கொண்டேன்....

என் வரையில் நன்றி எனும் வார்த்தை வெறும் கடமைக்கு சொல்வது போலாகும்...

நல்லது....

யாருமே கருத்துத் தெரிவிக்கவில்லையா? அருண் பாவம் என்று ஒரு பதிவு. :-) இன்று என்ன சமையல்? :-)
இமா

‍- இமா க்றிஸ்

அருண் பாவமா??? ம்ம்ம் அப்படியா.... சொல்லவே இல்லை..... இமா நான் ஒரு முழு சோம்பேறி ஆகி விட்டேன்..இதுல சாப்பாடு எங்கே சமைக்க??? ஹோட்டல் தான்....அடுத்த வாரம் கண்டிப்பா சமையல் பண்ணனும்... பண்ணுவேன்... எப்படி உங்களை மாதிரி சுறுசுறுப்பா இருக்கிறது..... கொஞ்சம் சொல்லி கொடுங்க... ஆனா ஒண்ணு... எனக்கு சொல்லி கொடுத்து நீங்க முழு சோம்பேறி ஆகி விடுவீங்க... ஹி ஹி..... ம்ம்ம்ம்...

ஹாய் அருண்,
நலமா? அங்கங்கு சுறுசுறுப்பாகப் பதில் போட்டு எல்லோருக்கும் உதவுகிறீர்கள். அப்படியே கிடைக்கிற நேரத்தில் நாளுக்கு ஒரு குறிப்பு (சமையல்தான்) முயற்சித்துவிட்டு பின்னூட்டம் கொடுத்தால்... சமையலில் முன்னேறிய மாதிரியும் இருக்கும், பட்டம் வாங்கிய மாதிரியும் இருக்கும்.
உடம்புக்கும் நல்லது. அப்படியே ஊக்கமாகி சுறுசுறுப்பாகி விடுவீர்கள். அம்மாகூட சந்தோஷப்படுவாங்க. வீட்டில் அம்மா, அப்பா எல்லோரும் எப்படி இருக்கிறார்கள்?
அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

என்ன அருண் ..........உங்க வள வள .......செய்திகள் தினமும் .... ஏதோ இருக்கு நான் எல்லாத்தையும் படிக்கல. அப்புறம் எப்படி இருக்கீங்க? சமையல் எல்லாம் பண்ண வருமா? .......பொய் தானே ........ சும்மா இங்கே எல்லொரோடையும் கதையடிக்க மட்டும் தான் தெரியும்னு நான் நினைச்சேன். சரி ஒழுங்கா சமைச்சு சாப்பிடுங்க அது தான் உடலுக்கு நல்லது.என்னோட ஒரு பதிவு இருக்கு " தோழிகளின் கவனத்திற்கு...." என்று நீங்களும் ஒரு தோழர் என்ற முறையில் படித்து ஏதாவது கமண்ட்ஸ் கொடுங்க.

மீண்டும் அடுத்த பதிலில் சந்திக்கலாம்
உமா

அன்புடன் இருக்கும் இமா.... ம்ம்ம்ம்... நீங்கள் சொன்ன மாதிரி பண்ணிட்டா போச்சு....ஜலதோசம் ஒரு மாசத்துக்கு முன்னாடி வந்தது... அப்போ இருந்து கொஞ்சம் காலையில் கொஞ்சம் சோம்பேறி தனம் கூடி போச்சு.... ம்ம்ம்ம்.... எல்லாருக்கும் யாராவது சமையல் சொல்லி கொடுப்பாங்க......ஆனா நமக்கு இங்கு பார்த்து பண்ணியது தான் நெறைய... தேங்காய் சாதம்... தக்காளி சாதம்.... கொடை மிளகாய் சாம்பார்.... சிக்கன் பிரியாணி.... சரி போதும்... இது போக எல்லாம் ஒரு மாசத்துக்கு முந்தி பண்ணிய மெனு....

இரவு நேரம் பண்ணி வச்சு மறு நாள் கொண்டு போக பிடிக்கல... காலையில் சமைச்சு மத்தியானம் சாப்பிடுறது தான் நமக்கு பிடிச்சு இருக்கு.... பார்த்துக்கிறேன் இமா.... பட்டம் எல்லாம் வேண்டாம்.... ஒரு ஆர்வம் தான்.... சரி.... அம்மா அப்பா நல்லா இருக்காங்க.... என்ன... நமக்கு கொஞ்சம் இல்லை நெறைய கோவம் வரும்.... சோ நம்ம மேல அக்கறை இருக்கிறவங்க மேல எப்பவும் பாசம் மட்டும் வச்சா போதுமா??? கோவமும் படணும் என்று சொல்ற கட்சி நான்...அந்த கோவத்தில் அவங்க மேல இருக்கிற அக்கறை தான் தெரியணுமே தவிர... வெறுப்புணர்வு இருக்காம பார்த்துக்கணும்.... என்ன சரி தானே??? நம்ம மேல அக்கறை இருக்கிற நம்ம நண்பர்கள்... சுத்தி இருக்கிறவங்க....நம்ம மேல ப்ரியமா இருக்கிறவங்க எல்லாருகிட்டேயும் கோவப்படுங்க... இதான் இன்றைய அருண் மொழி..... சரி இமா... நீங்க எங்கேயோ கிளம்புற மாதிரி இருக்கு... நான் முடிச்சுக்கிறேன்... உங்கள் சுறுசுறுப்பில் கொஞ்சம் கொடுத்து இருக்கீங்க.... நல்ல முடிவா சீக்கிரம் சொல்றேன்.. சமைக்கிறேன் மீண்டும் சமைக்கிறேன் என்று சொல்றேன்... சரியா???

நீங்க உங்கள் வேலையை முடிச்சு விட்டு வந்து பதில் மொழி போடுங்க...ஆமாம்...

யாருங்க அங்க.... உமா-வா??? எந்த உமா நீங்க??? பெப்சி உமா-வா??? தென்றல் படத்துல நடிச்ச உமா-வா????... எந்த உமா என்று சொன்னா தானே தெரியும்....
(டேய் அருண்னு இது நம்ம உமா.... நல்லா பாரு... அட ஆமாம்... அருண் பிரசங்கியை அதிக பிரசங்கியா மாற்ற நினைக்கும்... நம்ம உமா.... அது சரி....)...

அப்புறம் மேடம் (சப்பாணி மாதிரி இருக்கிற என்னை அழகா மாற்ற ஐடியா கொடுப்பீங்க... என்ற நம்பிக்கையில் மேடம் என்று சொல்றேன்....ஹி ஹி...... டேய் உமா அதை எல்லாம் எதிர்பார்க்க மாட்டாங்க... நீ வேற...).... சரிங்க உமா.... அது என்ன முழுவதும் படிச்சு பாக்காம வள வள...ஏதோ இருக்கு என்று.... இருக்கட்டும் இருக்கட்டும்... இதுக்கு எல்லாம் சேர்த்து நீங்க சொன்ன பதிப்பில் கமெண்ட் போடுறேன்... இருக்கட்டும் இருக்கட்டும்...நம்ம இங்க மட்டும் இல்லை உமா.... சொந்த வீடு..... பக்கத்து வீடு.... தெரிஞ்ச வீடு... நம்ம பசங்க வீடு.... நம்ம பொண்ணுங்க வீடு.... நம்ம சித்தி வீடு.... அப்புறம் அத்தை வீடு... போதுமா??? இருங்க இன்னும் கொஞ்சம்....எங்க ஆபீஸ்... பக்கத்து ஆபீஸ்... தெரிஞ்ச ஆபீஸ்.... இப்படி போற இடம் எல்லாம் கதை அடிப்பேன்.... (என்ன கேக்குறதுக்கு ஒரு பய வர மாட்டான்... ஹி ஹி...) ஆனா.... இங்க அப்படி இல்லை... நம்ம சொன்னதை எல்லாரும் படிச்சு தான் ஆகணும்... ஹி... ஹி... இப்படி தான்.. இந்த சிரிப்பு சிரிக்குறதுக்கு.... சரி சரி... சரி.... ஒண்ணும் சொல்லல...

சரி... சமையல் தெரியும் என்று சொன்னா... செவென் ஸ்டார் ஹோட்டலில் வேலை வாங்கி கொடுப்பீங்களா??? (போதும்டா அருண்... உமா கோவப்பட்டு திட்டி விட போறாங்க.... பரவா இல்லை நம்ம உமா... திட்ட மாட்டாங்க...)... உமா சமைச்சு சாப்பிட சொல்லி விட்டால் மறு பேச்சு ஏது??? அப்படியே ஆகட்டும்...

சரி உமா.... நீங்க உங்க வேலையை பாருங்க... ம்ம்ம்ம்.. நல்லது... நேரம் இருக்கும் போது பதில் மொழி போடுங்க...

மீண்டும் பாக்கலாம்....

என்றும் உங்கள் அருண் பிரசங்கி

உமா... தோழிகள் கவனத்திற்கு என்று தலைப்பு இருக்கு... நான் அதில் போகல... தலைப்பு அப்படி என்பதால்.... நீங்க சொன்ன பிறகு இப்போ பார்த்தேன்... அதில் பெண்கள் சமாச்சாரங்கள் வேற இருக்கு..... நான் அதில் பதில் மொழி போட்டா நல்லா இருக்காது.... அப்புறம் யாரும் அங்க கேள்வியும் கேக்க மாட்டாங்க... இருக்கட்டும்... ஆனா நல்லா சொல்லி இருக்கீங்க....நல்லது.... தண்ணி... நான் காலையில் எழுந்த உடன் வாய் கொப்பளித்து விட்டு ஆறு கிளாஸ் தண்ணி குடிப்பேன்... (காலை எழுந்த உடன் மட்டும்)... அப்புறம் டே டைம்-ல நெறைய... சரி... உடனே அங்கே கமெண்ட் போடல என்று கோவப்பட வேண்டாம்....நான் இதில் சொல்லி விட்டேன்-ல.... ரொம்ப நல்லா இருக்கு உமா....Cosmetologist & Fitness Trainer and Nutrition Specialist அப்படி என்றால்???? என்ன என்னமோ சொல்றீங்க... கொஞ்சம் நமக்கும் சொல்லி கொடுங்க உமா.... நல்லது... மீண்டும் பாக்கலாம்...

அது பெண்களுக்கு மட்டுமே உரியதல்ல இந்த காலத்தில் உடல் பருமன் அதனால் படும் கஷ்டங்கள்,உணவு கட்டுப்பாடு,எக்ஸ்ர்சைஸ் எல்லாம் எல்லோருக்கும் தேவையானது தான்.
அதனால் தான் உங்களை பார்க்க சொன்னேன்.நான் தற்போது வெளியே செல்வதால் மீண்டும் சந்திப்போம்.
நான் வெளியே போகல உங்களுக்கு விளக்கம் கொடுத்து விட்டு போகிறேன். அழகுக்கலை,உடற்பயிற்சி பயிற்சியாளர் மற்றும் உணவு நிபுணர் என்பது தான் சரியான தமிழ் அர்த்தம் என்று நினைகிறேன். இப்போது புரிகிறதா இது அனைவருக்கும் தேவையான, இந்த அவசர காலத்தில் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று என்று.
அதனால் தான் உங்களை வீட்டில் சமைச்சே சாப்பிடுங்க வெளியில் சாப்பிடாதீங்க என்று சொன்னேன்.

நன்றி
உமா

ம்ம்ம்ம்.. உமா நீங்க கிளம்புங்க... அப்புறம் பாக்கலாம்... சரியா???

நான் வெளியே போகல உங்களுக்கு விளக்கம் கொடுத்து விட்டு போகிறேன். அழகுக்கலை,உடற்பயிற்சி பயிற்சியாளர் மற்றும் உணவு நிபுணர் என்பது தான் சரியான தமிழ் அர்த்தம் என்று நினைகிறேன். இப்போது புரிகிறதா இது அனைவருக்கும் தேவையான, இந்த அவசர காலத்தில் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று என்று.
அதனால் தான் உங்களை வீட்டில் சமைச்சே சாப்பிடுங்க வெளியில் சாப்பிடாதீங்க என்று சொன்னேன்.

நன்றி
உமா

சரிங்க அம்மணி... நீங்க சொன்னா சரியா தான் இருக்கும்.... என்ன வெளியே போறேன் என்று சொல்லி விட்டு???? ம்ம்ம்ம்...சரி அப்போ அழகு, உடற்பயிற்சி & உணவு எது குறித்தும் உங்ககிட்ட கேட்டுக்கலாம்...பெரிய ஆளு தான் நம்ம உமா... ம்ம்ம்ம்...

மேலும் சில பதிவுகள்