கால்/மூட்டு வலி பிரச்சனை

கால்/மூட்டு வலி பிரச்சனை!

எனக்கு ஒரு 4, 5 நாளா முதுகு பிடிச்சிட்டு, மிக்கியமா இடது பக்கம் முதுகுக்கு கொஞ்சம் கீழே, சரியான வலி. நானும் நம்ம ஊரு Moove, இந்த ஊரு Bengay எல்லாம் தேச்சி, Advil (Pain reliever) எல்லாம் போட்டு இப்ப ஒரு மாதிரியா இருக்கு. இப்பெல்லாம் பேசாம தரையிலதான் படுத்துக்கறேன். வேற என்ன பண்ணனும்?! (ஒரு ஃப்ரண்ட் ஷூவை மாத்தி பாக்க சொல்றாங்க!).
எனி டிப்ஸ்?!!

சரி, இது இப்படி இருக்க, இப்ப என்னடான்னா, திடீர்னு வலது கால், முட்டிகிட்ட ரொம்ப வலிக்குது. வலின்னா எப்போதும் வலிச்சிட்டு இருக்கிற மாதிரி இல்லாம, திடீர் திடீர்னு வலிக்குது.
உள்ளே ஏதோ Bone-ல திருகி விட்ட மாதிரி... சுர்ருனு.
அப்புறம், காலை இப்படி அப்படினு ஆட்டி கொஞ்சம் ரெஸ்ட் எடுத்ததும் கொஞ்ச நேரத்தில சரியாயிட்ட மாதிரி இருக்கு. அப்புறம் மறுபடியும் வலி வருது. : (

என்ன பண்ணலாம்? - எதனால இப்படி வலிக்குது. யாருக்காவது இது பத்தி ஐடியா இருக்கா?! கொஞ்சம் சொல்லுங்கள் ப்ளீஸ்.

(இந்த வயசிலேயே முட்டி ப்ராஃபெளம் வந்தால் நான் போகப்போக என்னதான் செய்யரதுன்னு எனக்கே தெரியலை. கவலையா இருக்கு. : ( )

Good

மேலும் சில பதிவுகள்