abudhabi-mussafah

யாராவது முஸஃபா வில் இருக்கீங்களா?

Musafavil nega enge irukkinga

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

11nth sector. neenga?

vazhga valamudan

I am also 11th sector. where is your building. I am in UAE exchange opposite.

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

i am in aljazeera formacy opposite building

vazhga valamudan

தோழிகளே நான் இன்று சரவணா என்ற தோசை மாவு வாங்கி கொட்டிவிடேனெ என்னமோ ஒரு கெமிகல் வாடை வருது.நீங்க யாரும் வாங்கி ஏமாந்துடாதீங்க
எனக்கொரு முக்கிய சந்தேகம் ஹெல்ப் ப்லீஸ்...இப்பொழுது இங்கு கறிவேப்பிலை மார்க்கெட்டில் கிடைப்பதில்லை முனிசிபாலிடியின் என்னவோ ஒரு ப்ரச்சனையால் அது வருவதில்லை..எனக்கு பைத்தியம் பிடிக்கிறது..நம்ப குழம்பை கறிவேப்பிலை இல்லாமலா??தாளிப்பில்லாமல் குழம்பா?எப்படி சமாளிப்பது?
கறிவேப்பிலை இல்லாத சில குழம்பு வகைகளை சொல்லுங்களேன்

நான் இதற்கு முன்னாடி சரவணா வாங்கி இருக்கேன். ஆனால் அதில் சுவை இருப்பதில்லை. டேஸ்ட்டி என்று ஒரு ப்ராண்ட் (கவர் கீரீன் கலரில் இருக்கும்) வரும் அதை தவிர வேறு எதுவும் வாங்காதே. மற்ற ப்ராண்ட் எதுவும் நன்றாக இருக்காது.

கருவேப்பிலை எனக்கு இங்கே மில்லீனியத்தில் கிடைக்கிறது. நேத்து கூட வாங்கினேன். நான் கருவேப்பிலையை நல்ல காய வைத்துக் கொள்வேன். நல்ல சருகு போல் ஆனாலும் டப்பாவில் வைத்து ஓபன் ஸ்பேஸில் வைத்து உபயோகிப்பேன். வேறு என்ன செய்ய நிறைய மீந்து விடும். இங்கு வந்து கருவேப்பிலை ரொம்ப யூஸ் பண்ணுவதே குறைந்து விட்டது. ஊரில் எங்க வீட்டு தோட்டத்தில் கருவேப்பிலை உண்டு. எப்பவும் மணக்க மணக்க தாளிப்பேன். இப்போ எங்கே :-(

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

ஆமா தனிஷா நானும் அதான் வாங்கிட்டிருந்தேன் ஆனால் சில நாளா அந்த டேஸ்டீ கிடைக்கலை...மில்மா வும் நல்லா இல்லை மஞ்சளா இருக்கும் இட்லி.சரவணா சுத்த மோசம்.
கறிவேப்பிலை சருகு போல் ஆனால் தாளிப்பில் நல்ல வாசனை வருமா தனிஷா?காய்ந்த வாடை வராதா?எனக்கு இவ்வளவு நாளா கஷ்டம் தெரியல..வெஜிடபில் மார்கெட்டில் கட்டு கட்டா வாங்கி வருவேன்..இப்ப 2 நாளா கிடைப்பதில்லை..இங்க அக்கம் பக்கம் எல்லா இடமும் தேடியாச்சு எங்கயும் கறிவேப்பிலை இல்லை.
ஆமாம் தனிஷா ஊரில் எங்க வீட்டிலும் கறிவேப்பிலை செடி இருந்தது அது மரம் சைசுக்கு இருந்தது...அப்ப ஒரு தண்டை அப்படியே ஒடிச்சு அதிலும் இளைய இலைகளா பாத்து மட்டும் உருவி மிச்சத்தை தூக்கி போடுவோம்..அதும் குட்டி குட்டியான மணக்கும் கறிவேப்பிலை வகை..இப்ப இங்க காய்ஞ்சதாவது கெடைக்குமான்னு நிக்கிறேன்.
இன்னுமொரு சந்தேகம் தனிஷா...நேற்று லுலுவில் டேட்ஸ் ஃபெஸ்டிவலில் மரத்திலிருந்து பறித்த ஃப்ரெஷ் பேரீச்சம்பழங்கள் விற்பனையில் இருந்தது இவர் நிறிய வாங்கி வந்துவிட்டார் கெடாது என்று..எனக்கு என்னமோ அது கெடும் என்று தோன்றுகிறது..நல்ல சாஃப்டாக இருக்கிறது..அதை ஃப்ரீசரில் வைக்கலாமா?

ரூபி கருவேப்பிலை காய்ந்த வாசனை குழம்பில் வராது. ஆனால் நாம ப்ரெஷா போட்டு தாளிக்கும் போது வரும் அந்த கம கம வாசனை வராது. ஏதோ தாளிக்கும் போது இல்லையே என்ற கவலை நீங்க போட்டுக் கொள்வேன். ஆமா ரூபி ஊரில் அடுப்பில் சட்டியை வைத்துக் கொண்டு பின்னாடி கருவேப்பிலை பறித்துக் கொண்டு ஓடி வருவேன். ஏன் உனக்கு கிடைப்பதில்லை. இங்கே கிடைக்குதே

ரூபி டேட்ஸ ப்ரிசரில் வைக்கலாம் அல்லது சில்லரில் வைக்கலாம். வெளியே வைத்தால் அதன் தன்மை மாறி விடும். அந்த ரியல் டேஸ்ட்டும் போய் விடும். போன வாரம் இவரும் வாங்கி வந்தார். நல்ல டேஸ்டாக இருந்தது. 3 நாளா வெளியே வச்சுட்டேன். அது ஒரு மாதிரி வாடை வந்தது, பிறகு சாப்பிட்டு பார்த்தேன். டேஸ்ட் ஒரு மாதிரி இருந்தது கொட்டி விட்டேன். பிறகு இவர் ப்ரெண்ட் ஒருத்தர் அரபி வீட்டில் வேலை செய்கிறார். அவர் சொன்னார் அந்த நல்ல பழமாகத ஸ்டேஜில் இருக்கும் டேட்ஸ் எல்லாம் ப்ரிஜில் வைத்துதான் யூஸ் பண்ண வேண்டும் என்று. வெளியே வைத்தால் கெட்டு விடும். ஏனெனில் டேஸ்ட் பழுப்பதற்கு நல்ல உஷ்ணம் வேணுமாம். மரத்திலே இருந்து நல்ல பழுத்தால்தான் நம்ம நார்மல் ஸ்டேஜ்க்கு வருமாம்.

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

அப்படியா தனிஷா இதோ வைக்க போகிறேன் ஃப்ரீசரில்...எனக்கு ஃப்ரெஷ் டேட்ஸ் என்றால் கொள்ளை பிரியம் தனிஷா..
காக்காபழம் என்று ஒரு பழம் வருமே இங்கு அந்த சுவையில் இருக்கிறது..என்னமோ இங்கு எங்குமே கறிவேப்பிலை விற்பனையில் இல்லை இன்றும் கூட தேடி பார்த்தேன்.என்ன செய்ய போகிறேனோ தெரியலை.

நாளைக்கு கறிவேப்பிலை இல்லாத குழம்பு ஒன்று யாராவது சொல்லுங்களேன்

மேலும் சில பதிவுகள்