அரட்டை அடிக்க வாங்க(பாகம்50)

எல்லோரும் இங்க தொடங்குங்கபா,என்னால அரட்டைய ஓபன் பண்ணமுடியல,மேலும் 100க்கு மேல போய்டிச்சுபா..ஓடி வாங்க என் அன்பு தோழிகளே!!!!

எல்லோரும் எப்படி இருக்கீங்க? அந்த பழைய திரட் முழுவதும் படிக்க முடியல,என்ன நிறைய பேர் விசாரிச்சு இருக்கீங்க..ரொம்ப நன்றிபா..விசாரிக்காதவங்களுக்கு இதோ வரேன் கம்போட அடிக்க தான்..சும்மா விளையாட்டுக்கு தான்..கோபிக்காதிங்க..மறதி எல்லோருக்கும் வரும்,ஹி ஹி எனக்கும் தான்,,யாரையாவது பேர் சொல்லி விசாரிக்கலனா தப்பா எடுக்காதீங்க,சுகன் நீங்க நல்ல பிள்ளைபா..தேங்ஸ்..

எப்படி இருக்கீங்க. நலமா? அரட்டைய தொடங்குகனு சொல்லிட்டு என்ன ஆளை காணோம்

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

இருக்கேன்பா சுத்தி சுத்தி இந்த டைம்ல இங்க தான் இருப்பேன்,,ஹா ஹா எப்படி இருக்கீங்க?அப்ரா குட்டி சுகமா?

சாதிகா பையன் நாளைக்கு எக்ஸாம் போறானு ரொம்ப டென்ஷனா. ஒன்னும் கவலை படாதீங்க சூப்பரா முடிச்சிட்டு வந்திடுவார் உங்க பையன். அப்புறம் ரொம்ப பிஸி போல நீங்க

ஆசியாஅக்கா உங்களும் ஷாகித்தோட எக்ஸாம் பயமா எல்லாம் நல்ல பண்ணுவாங்க டோண்ட் ஒர்ரி. அம்மாங்க எல்லாம் பிள்ளைகளுக்கு நல்ல தைரியம் கொடுங்க

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

எப்படி இருக்கீங்க?வீட்டுல எல்லோரும் நலமா? ஆமாங்க பட்டிமன்றத்தில பேசினதுதான் அப்புறம் சரியா பார்க்க முடியல..நீங்க அண்ணியோட திரட்ல என்ன விசாரிச்சு இருந்தீங்க,ஆனால் அங்க பதிவு போட வேண்டாம்னு தான் இங்க விசாரிக்கிறேன்..ரொம்ப நன்றிங்க விசாரிச்சதுக்கு..

என்னப்பா சந்தோ,நான் ரொம்ப நல்ல பிள்ளையா!!கேட்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கே!சந்தோஷ் வால் தனம் எப்படி போய்க்கிட்டு இருக்கு?

ஹாய் தனிஷா,தேஜுக்கு 3 வயசு பா..என்ன அப்ரா குட்டி நல்லா பேசுவாளா?கேள்வி கேட்கிற வயசு வந்துடுச்சா?

ரொம்ப நல்லா இருக்கேன் பா, வாலு கொஞ்சம் நீளமா தான் இருக்கு, அது குறையாதுபோல, வளர வளர அதிகம் தான் ஆகுது,முடி வெட்ட பார்பர் ஷாப் வர மாட்டானாம்.நான் தான் வெட்டனும்மாம் அதும் சிஸ்சர்,சீப்பு எடுக்க கூடாதாம்..

சுகன் இப்போ நல்ல பேச ஆரம்பிச்சாச்சு அப்ரா. வாய் ஓயாம ஏதோ பேச்சு. அப்புறம் வீட்டை க்ளீன் பண்ணி 5 நிமிஷம்தான் எல்லாம் இடம் மாறிடும். இப்போதான் அறுசுவை ப்ரீயா ஒபன் ஆகுது. தேஜூ தூங்கியாச்சா. குட்டிய நல்ல பார்த்துக்கோங்க இங்க குளிர்காத்து படுத்துது சுகன். ராக்கில் எப்படி குளிர்? படுக்க போறேன் சுகன். குட்நைட்

தாமரை உங்களுக்கு இப்போதான் காலையா? சந்தோஷ் என்ன பண்ணுகிறான். இங்க மணி 11 ஆகப்போவுது. இப்பவும் பொண்ணு ஆட்டம்தான் தூங்க வைக்கனும். வேலையெல்லாம் முடிந்ததா? ரிப்ளே நாளைக்கு பார்க்கிறேன். பை தாமரை.

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

இப்படிலாம் யோசிக்கிறாங்க பசங்க!!!எப்படி டெக்னிக்கா பேசி உங்களை மடக்குறார் சந்தோஷ்...இதுக்கு நீங்க அட்வான்ஸ்டா தான் யோசிக்கனும்.நாம் கத்தியில் காய்கறி வெட்டுவோம்,அதுவே அதுக்குன்னு இப்ப டெலிஷாப்பிங்ல வகைவகையா ஸ்லைசர் வந்திருப்பது போல்,தலை முடி வெட்டுவதற்க்கும் ஏதாவது ஒன்று கண்டுபிடிச்சிருப்பாங்க..அதுமாதிரி ஏதாவது ட்ரை பண்ணி பார்க்க வேண்டியது தான்..

அரட்டையின் 50 வது மன்ற இழை. நானும் யாருக்கு அந்த யோகம் என்று நினத்தேன் சந்தோ நீங்க தான் :))

"We judge ourselves by what we feel capable of doing, while others judge us by what we have already done."

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

மேலும் சில பதிவுகள்