ஈஸி தட்டை

தேதி: February 5, 2009

பரிமாறும் அளவு: 4

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

அரிசி மாவு - 2 கப்
கறிவேப்பிலை - 6 இலை
காய்ந்த மிளகாய் - 3
பட்டர் - 2 மேசைக் கரண்டி
உப்பு - 1 தேக்கரண்டி
கடலைப் பருப்பு - 2 மேசைக்கரண்டி


 

முதலில் கடலைப் பருப்பினை 1 மணி நேரம் ஊறவைக்கவும்.
கறிவேப்பிலை மற்றும் காய்ந்த மிளகாயினை மிக்ஸியில் போட்டு பொடித்து கொள்ளவும்.
அரிசி மாவுடன் ஊறவைத்துள்ள கடலைப் பருப்பு, பொடித்து வைத்துள்ள கறிவேப்பில்லை மற்றும் காய்ந்த மிளகாய், பட்டர் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.
பிறகு சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து மாவினை நன்றாக பிசையவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காயவிடவும். மாவினை சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டி ப்ளாஸ்டிக் பேப்பரில் எண்ணெய் தடவி அதன் மீது இன்னொரு ப்ளாஸ்டிக் பேப்பர் வைத்து தட்டி கொள்ளவும்.
எண்ணெயில் தட்டி வைத்துள்ள தட்டைகளை போட்டு பொரிக்கவும்.
இப்பொழுது சுவையான தட்டை ரெடி.


மிகவும் எளிதாகவும் சீக்கிரத்தில் இந்த தட்டையினை செய்ய முடியும். மிகவும் அருமையாக இருக்கும்.
காய்ந்த மிளகாயிற்கு பதில் பச்சை மிளகாயினை சேர்த்து கொள்ளலாம்

மேலும் சில குறிப்புகள்


Comments

ஹெலோ கீதா

நியாபகம் இருக்கிறதா? உங்க கிட்ட பேச வேண்டும் என எண்ணினேன். ஆகையால் ஒர்குட் ல் அறிமுகம் ஆனேன். உங்க FRIENDS கிட்ட மட்டும் தான் பேசுவிங்களா? எங்க கிட்ட பேச மாட்டிங்களா? எனக்கு சமையல் தெரியது. உங்களுடைய குறிப்புகள் மூலமாக தான் சமையல் பண்ணுகிறேன். உங்களுடைய குறிப்புகள் SIMPLE ஆகவும், EASY ஆகவும் உள்ளது.