தக்காளி வெங்காய சட்னி

தேதி: February 5, 2009

பரிமாறும் அளவு: 2-4 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

பெரிய தக்காளி - 1
பெரிய வெங்காயம் - 1
மிளகாய் வற்றல்(பட்டை) - 2
இஞ்சி - சிறிய துண்டு
புதினா இலை - 8 என்னம்
மல்லி இலை - சிறிது
உப்பு - தேவைக்கு.
தாளிக்க:
எண்ணெய் - 2 டீஸ்பூன்
கடுகு, உளுத்தம்பருப்பு - அரை ஸ்பூன்
வற்றல் - 1
கருவேப்பிலை - 1 இணுக்கு


 

ஒரு ஸ்பூன் எண்ணெய் கடாயில் விட்டு, கட் செய்த வெங்காயம், தக்காளி, இஞ்சி, புதினா, மல்லி, வற்றல், உப்பு போட்டு மசியும் படி வதக்கவும்.
வதக்கியவை ஆறியவுடன் மிக்ஸியில் அரைத்தெடுக்கவும்.
பின்பு தாளிப்பு கரண்டியில் எண்ணெய், கடுகு, உளுத்தம்பருப்பு, வற்றல், கறிவேப்பிலை தாளித்து அரைத்ததில் கொட்டவும்.
சுவையான தக்காளி, வெங்காய சட்னி ரெடி. சூடான இட்லி, தோசையுடன் பரிமாறலாம்.


இது சௌராஸ்டிரா தோழி சொல்லி தந்தது. இளஞ்சிவப்பு நிறத்தில் பார்க்கவும், சுவையும் அருமையாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

ஆசியா அக்கா நலமாக இருக்கீங்களா? உங்களுடைய இந்த தக்காளி வெங்காய சட்னி செய்திருந்தேன்.மிகவும் நன்றாக வந்திருந்தது.நன்றி.அன்புடன் அம்முலு

அசத்தப்போவதில் நிறைய சமைக்கிறீங்க.மகிழ்ச்சி.நீங்க இதையும் செய்து பார்த்து பின்னூட்டம் கொடுத்தது மிக்க மகிழ்ச்சி.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

திருமதி. அம்முலு அவர்கள் இந்த குறிப்பினைப் பார்த்து தயாரித்த சட்னியின் படம்

<img src="files/pictures/aa96.jpg" alt="picture" />

மிக்க நன்றி அம்முலு.நான் செய்வது போல் இருக்கு.நீங்க கெட்டியாக அருமையாக செய்து இருக்கீங்க.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

ஆசியா அவர்களுக்கு, இந்த குறிப்பை செய்து பார்த்தேன். எப்போதும் புளி சேர்த்து அரைப்பேன். ஆனால் நேற்று உங்கள் முறைப்படியே செய்தேன். ஹோட்டல் சட்னி போல் சூப்பராக இருந்தது. தோசைக்கு மிகவும் பொருத்தமாக இருந்தது. நன்றி உங்களுக்கு.

மிக்க மகிழ்ச்சி.பின்னூட்டத்திற்கு நன்றி.எல்லோருடனும் பேசுவதே ரொம்ப சந்தோஷமாக இருக்குபா.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

புளி சேர்க்காமல் மிகவும் நன்றாக இருந்தது இந்த சட்னி.இட்லிக்கு ஜோராயிருந்தது.

ஆசியா, சட்னி சூப்பரா நீங்க சொன்னமாதிரியே இளஞ்சிவப்பாகவும், அருமையான சுவையோடும் இருந்துச்சுப்பா. பூண்டு, புளியும் சேர்த்துத்தான் செய்துள்ளேன், அதில்லாமல், புதினா சேர்த்துச் செய்தது வித்யாசமான சுவையோடு நன்றாகயிருந்தது. நன்றி.

அன்புடன் :-).......
உத்தமி :-)

நானும் உங்க டிப்ஸ் எடுத்துக்கறேன்.நீங்க வெஜ் ரெசிப்பி கொடுத்தால் என்னப்பா?நன்றி.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

இன்று தோசைக்கு தொட்டு கொள்ள இந்த சட்னியை தான் செய்தேன்.நல்ல காரசாரமான சுவையுடன் சாப்பிட ருசியா இருந்தது மேடம்.நான் கூட புளி,பூண்டு சேர்த்து தான் செய்வேன்.அது இல்லாமல் செய்தாலும் சுவையாக இருக்கும் என்பதை இந்த குறிப்பின் மூலம் அறிந்து கொண்டேன்.தங்களின் குறிப்புக்கு மிக்க நன்றி.

குறிப்புக்கள் செய்து பின்னூட்டம் கொடுப்பது மிக்க மகிழ்வைத்தருகிறது.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.