இலை ஜவ்வரிசி கூழ் வடகம்

தேதி: February 5, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

Average: 5 (1 vote)

 

புழுங்கல் அரிசி(இட்லி அரிசி) - 250 கிராம்
சிறிய ஜவ்வரிசி - 25 கிராம்
பச்சை மிளகாய் - 5 அல்லது 6
பெருங்காயத் தூள் - 1/2 ஸ்பூன்
கல் உப்பு - 1 ஸ்பூன்


 

புழுங்கல் அரிசியை 2 மணி நேரம் ஊற வைக்கவும். நன்கு களைந்து, பின் கிரைண்டரில் மையாக அரைத்துக் கொள்ளவும்.
மறு நாள் காலையில், அடிகனமான பாத்திரத்தில் 9 - 10 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
ஜவ்வரிசியை அதில் சேர்த்து வேக விடவும். பச்சை மிளகாய், உப்பு, பெருங்காயத்தூள் மூன்றையும் மிக்ஸியில் மையாக அரைத்துக் கொள்ளவும்.
இந்தக் கலவையை அரைத்த மாவுடன் சேர்த்து நன்கு கரைத்து வைத்துக் கொள்ளவும்.
அடுப்பில் தண்ணீர் நன்றாகக் கொதித்ததும், மாவை ஊற்றி,ஒரு மரக் கரண்டியால், கை விடாமல், கட்டி தட்டாமல், நன்கு கிளறவும்.
தீயைத் தணித்து வைத்து, ஒரு அகலமான தட்டால், கொதிக்கும் வடக மாவை மூடி வைக்கவும்.
அவ்வப்போது திறந்து, கிளறவும். மாவு நிறம் மாறி, கரண்டியால் சிறிது ஊற்றிப் பார்த்தால், கண்ணாடி போல இருக்கும்.
பிறகு, மாடியில், பிளாஸ்டிக் ஷீட்டை விரித்து, ஒரு கரண்டியால் சின்ன சின்ன வட்டமாக ஊற்றவும்.
மாலை வரை நன்கு காய விடவும். பிறகு அதை உரித்து எடுக்கவும்.
மேலும் இரண்டு - மூன்று நாட்களுக்கு வெயிலில் காய வைத்து எடுக்கவும்.
சுத்தமான டப்பாவில் பத்திரப் படுத்தவும்.
தேவைப் படும்போது, ரீஃபைண்ட் ஆயிலை, வாணலியில் ஊற்றி, எண்ணெய் காய்ந்த பின்னர், வடகத்தைப் பொரிக்கவும்.
சாதத்துக்குத் தொட்டுக் கொள்ள சுவையான இலை ஜவ்வரிசி கூழ் வடகம் தயார்.


பிழிந்த வடகம், கிள்ளு வடகம், இலை வடகம் மூன்றுக்கும் வித்தியாசம் அரிசியின் அளவு, தண்ணீரின் அளவு இவைதான். இலை வடக மாவு ரொம்பவும் கெட்டியாக வந்தால் அடுத்த முறை செய்யும் போது ஜவ்வர்சியின் அளவைக் குறைத்துக் கொள்ளவும். பிழியும் வடக மாவை, மாவு சூடாக இருக்கும்போதே பிழிந்தால், சிரமமில்லாமல் பிழியலாம். ஆனால் காய்ந்ததும், மெலிதாக ஆகி விடும். மாவு ஆறிய பின் பிழிந்தால், பிழியும்போது சிரமமாக இருக்கும். ஆனால் வறுக்கும்போது திக்காக இருக்கும். வெயில் காலம் வந்து விட்டது. வடக ஸீசன் தொடங்கி விட்டது. இது புழுங்கல் அரிசியை அரைத்து செய்யும் முறையாகும். வெயில் காலத்தில் செய்து எடுத்து வைத்துக் கொண்டால் ஒரு வருடம் முழுவதற்கும் பாதுகாத்து வைக்கலாம். தேவைப் படும்போது எண்ணெயில் வறுத்து சாதத்துக்குத் தொட்டு கொள்ளலாம். அதிலும் கலந்த சாத வகைகளுக்கு சூப்பர் காம்பினேஷன்.

மேலும் சில குறிப்புகள்


Comments

நான் தனி ஜவ்வரிசி வடகம் தான் பண்ணிருக்கேன்!

இதை பண்ணி பாத்துடரேன்!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...