இர்ரெகியுலர் பீரியட்ஸ்

அன்பின் தோழிகளே என் சகோதரியின் மகளுக்கு (வயது 19 ) பீரியட்ஸ் வருவது ரொம்ப தாமதமாகுது. 5, 6 மாதம் தாமதமாவே வருகிறது. அதுவும் மருந்து குடித்தால்தான் வருகிறது. அவரின் எடை 70kg ஏற்கெனவே போன டாக்டரிடம் போகாமல் வேரொரு டாக்டரிடம் போயிருக்கிறா. அந்த டாக்டர் பிளட் டெஸ்டும், ஸ்கேனிங்கும் பண்ணச் சொன்னாராம். இவ ரொம்ப பயப்படுகிறா. என்ன செய்யலாம் தோழிகளே. நல்ல ஆலோசனை தாருங்களேன்.

அன்புடன் ரிகா.

அன்பு ரிஹா முதலில் உங்க சகோதரியின் மகளை ஒரு நல்ல மருத்துவரிடம் காண்பித்து தைராய்ட் டெஸ்ட் செய்ய சொல்லுங்க. இப்ப டாக்டர் எழுதி தந்து இருக்கும் டெஸ்ட் எடுங்க அவரும் இந்த டெஸ்ட் தான் எழுதி கொடுத்து இருப்பார். முடிந்தால் எடை குறைக்க சொல்லுங்க. அரிசி சாப்பாடு இரவில் சாப்பிடாமல் காய்கறி மட்டும் வேக வைத்து இல்லை பொரியலாக சாப்பிட சொல்லுங்க. கொழுப்பு அதிகமுள்ள பதார்த்தங்களை கொஞ்சம் நிறுத்தி பாருங்க. எனக்கு ரெண்டு பிரச்சனை தான் தோனுது. ஒன்று தைராய்ட் இல்லைன்னா பாலி சிஸ்டிக் ஓவேரியன் டிசீஸ். ரெண்டுமே மாத்திரை மருந்து முறையான உணவு பழக்கம்/உடல்பயிற்சி மூலம் சரியாக்கலாம்.

"We judge ourselves by what we feel capable of doing, while others judge us by what we have already done."

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

ரிஹா

முதலில் அவங்களை டெஸ்ட் எடுக்க சொல்லுங்கள்.
இதுமாதிரி இர்ரெகுலர் பீரியல்ட்ஸ் பாலிஸிஸ்டிக் ஓவரிஸால் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.டாக்டரே சொல்கிரார் இப்போ 100க்கு 80 சதவீதம் பெண்களுக்கு இதுமாதிரி சிஸ்ட் வருகிறது என.பயப்பட ஒன்றுமில்லை என நீங்க அவங்கலுக்கு சொல்லி அவங்க்லை ட்ரீட்மென்ட் எடுக்க சொல்லுங்க.

19 வயதில் 70 கிலோ அதிகம் குறைக்கச்சொல்லுங்கோ.அதிக எடையும் இரெகுலர் பீரியட்டுக்கு ஒரு காரணம்.
அடுத்து பிளட் டெஸ்ட் ,ஸ்கான் செய்யாமல் இருக்கிறதை விட செய்றதுதான் பாதுகாப்பு.

சுரேஜினி

பதிலளித்த உங்கள் மூவருக்கும் நன்றி. டெஸ்டிங் எல்லாம் செய்தாவாம் இனும் ஒரு டெஸ்டிங் செய்ய வேணுமாம். அதன் பிறகுதான் டாக்டர் என்னவென்று சொல்வாராம்.

அன்புடன் ரிகா.

Vanakam sis mariage aagi 3 years aagutu baby illa doctor scan testla PCOD iruku nu sonnaga .follicular study test pannaga egg form aagala nu sonnaga ithu vara karanam enna ? Sister ennaku kulanta piraka chance iruka ? Pls help me sis my wh ap 9786554874.

மேலும் சில பதிவுகள்