கர்ப்பகால மருத்துவ சந்தேகங்கள்

சகோதரிகளே,
உங்களில் யாராவது கர்ப்பகாலத்தில் கீழ் உள்ள மருந்துகளைப் பாவித்திருக்கின்றீர்களா? இந்த மருந்துகளால் என்ன பயன்? பிரச்சனை ஒன்றும் வராதா? தயவு செய்து தெரிந்தால் கொஞ்சம் கூறுங்கள்.

நான் கருத்தரித்தால் Aspirin 75mgs தினமும் எடுத்துக் கொள்ளத் தருவார்களாம். இது 10% placental complications குறைக்குமாம்.
மற்றும் கருத்தரித்த 16 - 18 வாரத்தில் Progesterone suppositories தருவார்களாம். அது pre-term birth நடக்காமல் இருக்க உதவுமாம்.

இதனைப் பற்றி உங்களில் யாருக்காவது சரியான விளக்கம் தெரிந்தாலோ அல்லது நீங்கள் யாராவது பாவித்து நல்ல பலன் கண்டாலோ தயவு செய்து விளக்கம் தரவும்.

அன்புடன்
பிருந்தா

பிருந்தா எனக்கு இதுவரை இரண்டு மிஸ்கேரேஜ் ஆகி இருக்கு, என் டாக்டரிடம் அடுத்த முறை கருத்தரித்தால் எப்படி என்னை சேஃபாக இருக்க வைப்பீர்கள் என்று கேட்டேன். போன முறையே எனக்கு ப்ரோஜெஸ்ட்ரான் சப்பாஸாட்டரீஸ் கொடுத்தார். இது நமது ஹார்மோன் லெவலை சமன்செய்யும். இந்த ஹார்மோன் லெவல் குறைந்டால் நமது மூளை இது வேறு என்னவோ என்று எண்ணிக்கொள்ளும். எனக்கு முதல் 3 மாதத்திற்க்கு கொடுத்தார். பேபி ஆஸ்பிரின் நமது கருப்பையில் பிளட்கிளாட் எதுவும் வராமல் பாதுகாகும். எனக்கு எனது மருத்துவர் சொன்னது இது தான்

"We judge ourselves by what we feel capable of doing, while others judge us by what we have already done."

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

i am sri from singapore, from the begining of the month, i used the ASA Tablet.just like Aspirin...i had taken the tab end of the 9 th month..after 9 th month.. i stopped that... and also i used the same tab Progesterone suppositories ....now i have one naughty male baby age of 18 months.....so dont worry....it is very normal and pls trust ur doctor....and pray god..and we also pray for u Brindha....

take care..

from
sri

மிக்க நன்றி சகோதரிகளே,
உங்கள் பதில் எனக்கு மிகவும் உதவிகரமாக உள்ளது.
உடனடி பதில் தந்தற்கு நன்றி சகோதரிகளே.

Progesterone suppositories எப்படி பாதுகாப்பது
in refrigerate or dry place? please tell me.
என்ன டைம் யூஸ் பண்ணணும்? night or day?ஒவ்வொரு நாளும் sametime or anytime?
வேறு ஒருத்தரை அனுப்பி வாங்கியதில் எதுவும் தெரியவில்லை.please

அனி இந்த ப்ரோஜெஸ்ட்ரான் சப்பாஸட்டரீஸ் தனியா பிரிட்ஜ்ல வைக்க வேணாம். ஆனா ரொம்ப சூடா இருக்கும் இடத்தில நீங்க இருந்தா fridge la போடுங்க. உங்க டாக்டரிடம் கேளுங்க. நைட் போடலாம். சிலநேரம் அது நீர்கடுப்பு மாதிரி இருக்கும். ஆனா போட்டா ஒரு 10 நிமிஷம் அப்ப்டியே படுத்து இருங்க. ஆனா ஒரே நேரத்தில போடுங்க தினமும் ஒரு நாளும் மறக்காமல். இப்ப உங்க பதிவு பார்த்ததும் பதில் போட்டேன்.

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

ரொம்ப நன்றி இலா.
இது எடுத்திட்டிருக்கிரப்போ தலைக்கு குளிக்கலாமா?just 1 month pregnant
எனக்கு பீரியட் லேட்பண்ணி 11 நாட்கள்தான் ஆவுது.நான் வாரத்தில் எத்தனை தடவை தலைக்கு குளிக்கலாம்.தலைக்கு குளிப்பதால் ஏதும் பிரச்னை இல்லையே?

அனி தலைக்கு குளிப்பதுக்கும் இந்த ஹார்மோன் தெரபிக்கும் எதுவும் சம்பந்தம் இல்லை. இது டாக்டர் சொல்லி தான எடுக்கரீங்க . அவங்க சொல்லி இருக்கனும் எத்தனை நாளுக்கு போடனும்ன்னு. எனக்கு தினமும் எடுக்க சொல்லி இருந்தாங்க. முதலில் நைட் போட்டேன் அது சரிவரவில்லை. அப்புறம் காலையில் குளித்து போட்டேன். நீங்க வழக்கமா செய்யறதை செய்யுங்க. நான் தினமும் தலைக்கு குளிப்பேன் .ஷார்ட் ஹேர் என்பதால் சீக்கிரம் காய்ந்தும் விடும்

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

ஐயையோ நானும் நைட்தானே எடுக்கறேன்.நல்லதில்லையா?எனக்கு தினமும் தொடர்ந்து 4வாரத்துக்கு எடுக்க சொன்னாங்க.

அனி நைட் தான் என்னை எடுக்க சொன்னாங்க. அப்புறம் எனக்கு அது பிடிக்கலை அதனால் காலையில் எடுக்க சொன்னார்கள். எப்படி விளங்க வைப்பது. இந்த கிரீம் எனக்கு நீர்கடுப்பு மாதிரி இருந்து அதனால் மருத்துவரின் ஆலோசனைபடி செய்தேன். நீங்க சொன்னபடி நைட் போடுங்க. அடிக்கடி பாத்ரூம் போகவேண்டியும் இருந்தது

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

progesterone suppositories கரு உறுதிப்படுத்தப்பட்டதில் இருந்து ஆகக்கூடியது எத்தனை வாரங்களுக்கு உபயோகிக்கலாம்?
28 வாரங்கள் வரை உபயோகிப்பது கேள்விப்பட்டு இருக்கிறீர்களா?

மேலும் சில பதிவுகள்