hi deva mam or any one - pls help

தலை குளித்த அன்று முடி மிகவும் பறக்கிறது. அதற்கு எந்த ப்ராண்ட் ஹேர் ஸ்பிரே யூஸ் பண்ணலாம். ஹேர் பளபளவென இருக்க என்ன ப்ராடக்ட் யூஸ் பண்ணலாம்.

ஹேர் பளபளவென இருக்க கார்னியர் ப்ராடக்ட் டிரைப்பன்னி பாருங்க. என் தலைமுடிக்கு இதை தான் யூஸ் பன்றேன்.

என்றும் அன்புடன்
மைதிலிபாபு.

Mb

ஹாய் பிரபா, தலைக்கு குளித்து எண்ணெய் வைக்கும் பழக்கம் உள்ளவராக இருந்தால் லைட்டான டாபர் அல்லது Kio Karpin போன்ற எண்ணெய்கள் உபயோகிக்கலாம். அப்படி இல்லையென்றால் முடியை நன்கு காய வைத்து, ஹேர் க்ரீம் அப்ளை செய்ய வேண்டும். இப்படி செய்வதால் முடி வறண்டு கட்டுக்கடங்காமல் பறப்பதை தடுக்கலாம். இப்படி ஹேர் க்ரீம் அப்ளை செய்வதால் தலையில் நாம் இழந்த ஈரப்பதம் மீண்டும் லாக் செய்யப்படும். Delva Hair Moisturising Cream நன்றாக இருக்கும். அதே போன்று Schwarscorf, L'oreal போன்ற பிராண்டுகளிலும் கிடைக்கும்.

முடி பளபளப்பாக (ஷைன் லுக்) வர பாலிஷ் க்ரீம் (Polish Cream)லேசாக மேல் புறம் முடியில் மட்டும் தடவ வேண்டும். வேர்க்கால்களில் படக்கூடாது. Systems Professional போன்ற பிராண்டுகளில் இது கிடைக்கும். அடிக்கடி உபயோகிக்காமல் ஒரு முறைக்கு ஒரு Peanut (கடலை) அளவு கைகளில் எடுத்துக் கொண்டு அதனை தலையில் ( தலைக்கு எண்ணெய் தடவுவது போல மேல்புறமாக)) தடவ வேண்டும். இதைவிட ஹேர் ஸ்ட்ரெயிட்னிங் செய்யும்போது முடிக்கு எக்ஸ்ட்ராவாக ஒரு ஷைன் லுக் வரும். தரமான GHD போன்ற நல்ல ஸ்ட்ரெயிட்னரை உபயோகித்தால் சிறந்த பலன் கிடைக்கும்.

வீட்டில் அரைக்கும் சீயக்காயை உபயோகப்படுத்துபவராக இருந்தால் பூந்திக்கொட்டை சேர்த்து சீயக்காயை அரைத்து வைத்துக் கொண்டால் முடி பளபளப்பாக இருக்கும். என் பாட்டி எங்களுக்காக சீயக்காய், மல்லிகை பூ, செம்பருத்திப்பூ, செம்பருத்தி இலை, எலுமிச்சை தோல், மருக்கொழுந்து, பாசிப்பருப்பு, பூந்திக்கொட்டை, கரிசலாங்கண்ணி (அரப்பு கண் எரியும் என்று அதனை சேர்க்க மாட்டார்கள்) எல்லாம் காயவைத்தது, மிஷினில் கொடுத்து அரைத்து அதனை சாதம் வடித்த கஞ்சியில் குழைத்து தலைக்கு தேய்க்கத் தருவார்கள். அதன் மணமும், பலனும் எதற்கும் ஈடாகாது. இந்தியாவில் இருந்தால் தயாரிப்பது உங்களுக்கு எளிதாக இருக்கும்.

மிகவும் நன்றி தேவா மேம் நான் சென்னையில்தான் இருக்கிறேன்.

மேலும் சில பதிவுகள்