மாதவிடாய் வர உதவவும்

நான் அறுசுவைக்கு புதுசு.
நான் அருசுவையில் பல பகுதிகளைப் பார்த்து வியந்துள்ளேன்.
நமக்கு சமையல் பகுதி மட்டுமின்றி,நம் நோய்களுக்கான சிகிச்சை அனுபவங்கள்
நல்ல பகுதியாக உள்ளது.என் கேள்விக்கும் சிகிச்சை அனுபவங்கள்,அல்லது கைவைத்தியம்
தெறிந்தவர்கள் பதில் தாருங்கள்.
என் உறவினரின் பொண்ணுக்கு ஒருகுழந்தை உள்ளது.அவளுக்கு குழந்தை பெற்ற 5 வருடத்தில் 2சினைப்பையில் நீர்க்கட்டிகள் என அறுவைசிகிச்சை செய்து கட்டிகளை நீக்கி விட்டார்கள்.அதன் பிறகு 6மாதம் மாதவிடாய் வரக்கூடாது உள் புண்கள் ஆறட்டும் என்று டாக்டர் மாத்திரை கொடுத்துள்ளார்கள்.
அதன் பிறகு 1 வருடமாகியும் மாதவிடாய் வரவில்லை.திரும்ப டாக்டரிடம் காண்பித்து வகை வகையாய் மாத்திரை சாப்பிட்டும் சினைமுட்டை உருவாகவில்லை.மாதவிடாய் வருவதில்லை.இப்போது 4 வருடங்களும் ஆகிவிட்டது.என்ன செய்வதெண்ரு தெறிய்மல் கவலைப்படுகிறால்.
சினைநீர்க்கட்டிகள் இருக்கும்போதுகூட மாதவிடாய் தவறாமக்ல் மாதாமாதம் வருமாம்.
திரும்பவும் மாதவிடாய் வர,ஏதாவது தகவல் தெறிந்தால் சொல்லுங்கல் தோழிகளே.மிகவும் நன்றிய்யாய் இருக்கும்.

உங்கள் தோழியை முதலில் நல்ல டாக்டரை பார்க்க செல்லுங்கள். வகை வகையாய் மாத்திரை சாப்பிடுவதால் சைடு எfட்தான் அதனால் முதலில் டாக்டரை பார்க்க செல்லுங்கள்.

பீரியட்ஸ் ஆக எள்ளும், வெல்லம், சாப்பிட செல்லுங்கள்.
ஆனால் 4 வருங்கள் வராததால் முதல்லில் மருத்துவரை பார்க்க செல்லுங்கள்.
பீரியட்ஸ் வரவில்லை எனில் உடல் வெயிட் போடும் அதனால் ஊஷாராய் இருக்க செல்லுங்கள்.

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

பதில தந்ததற்கு ந்ன்றி ப்ரபாதாமு.
டாக்டரிடம் தான் காண்பித்துக் கொண்டிருக்கிறாள்.
ஆனால் சரியாகவில்லை.மருந்து மாத்திரைகள்
டாக்டரின் அட்விஸ் படிதான் சாப்பிடுகிறாள்.
வேறு தோழிகள் கைமருந்து தெறிந்தால் சொல்லவும்

கொள்ளு சாப்பிடுவதால் மாதவிடாய் வரும்..
உடல் எடையும் குறையும் ...
கொள்ளுவை வேக வைத்து அதன் தன்னீரை காலை எழுந்தவுடன் குடிக்கவும்..
மீதி கொல்லுவை மிக்ஸியில் சற்று கொர கொர என்று அரைத்து,
அதில் வெங்காயம்,பச்ச மிலகாய்,போட்டு Dal fry போல செய்து சாப்பிடவும்...

அன்பின் sdha,
உங்கள் உறவினருக்கு உள்ள பிரச்சனை மிகுந்த வருத்தமளிக்கிறது.மாதவிடாயை வராமல் தடுத்த
மாத்திரைகள் சிலருக்கு எதிற்விளைவை ஏற்படித்தியிருக்கும்.உடம்புக்கு ஒத்துக் கொள்ளாமல்
மாதவிடாயை நிறுத்தியிருக்கும் என்று நினைக்கிறேன்.
எனக்கு தெரிந்த ஒருவருக்கும் இவ்வாறு ஏற்பட்டது.
menopause hormone ஏற்பட்டது.அவர்கள் எவ்வளவோ சிகிச்சை எடுத்தும் குணம் பெறவில்லை.
நீங்கள் ஹார்மோன் டெஸ்ட் பார்த்து மருத்துவரை மாற்றிப் பாருங்கள்.
நல்ல மருத்துவரைப் பற்றி மற்ற தோழிகள் சொல்லி உதவுவார்கள்.
சிறுவயதில் ஏற்படும் menopause hormone க்கு ஏதாவது சிகிச்சையிருந்தாலும் சொல்லுங்கள் தோழிகளே...

பசித்தவனுக்கு பகிர்ந்தளித்தால் நீ
புசிக்கும் உணவு பெருகிவிடும்

அவங்களுக்கு என்ன ஆபரேஷன் பண்ணினாங்க? அவங்க என்ன மாத்திரை சாப்பிடறாங்க?

தானா மாதவிடாய் வராமல் இருப்பதும், சினைமுட்டை உருவாகாமல் போவதும் சரி, அதுல ஆபரேஷன் எல்லாம் பண்ணிஇருக்காங்க, அதனால இருக்கலாம். ஆனா மாதவிடாய்க்கான மாத்திரை சாப்பிட்டும் மாதவிடாய் ஆகாம இருக்குன்னா அவங்க கர்ப்பபைல கோளாறு இருக்கலாம். அந்த டாக்டர் கிட்டயே விவரம் கேட்பது தான் நல்லது. அப்படி அவங்களால பதில் சொல்ல முடியலைன்னா வேற டாக்டர் கிட்ட காட்டுறது தான் நல்லது.

இப்படிக்கு,
சந்தனா

மாதவிடாய் வராமல் இருப்பதற்கு நிச்சயமாக உங்களுக்கு ஸ்கான் எடுத்து பார்த்திருப்பார்கள்.அப்படி பார்க்காமல் உங்களுக்கு மாத்திரைகளையே தந்து கொண்டிருக்கிறார்களானால் அது தப்பு.
ஸ்கானில் உங்களுக்கு கருமுட்டை வளரவில்லை என்றூ தெரிந்தால் பீரியட் வருவதற்காக தரப்படும் மா்த்திரைகள் வேலை செய்யாமல் போவது இயல்பு.காரணம் உங்களுக்கு பீரியட் வருவதற்கு தரப்படும் மாத்திரை கருமுட்டையை வளர்ச்சி செய்து அதை வெளியேற்றி பீரியட்டை வரவைக்கவேணும்.கருமுட்டை வளர்ச்சி மிகவும் அடிமட்டத்தில் இருக்கும் பட்சத்தில் இது தன் வேஅலியை செய்யமுடியாமல் போயிருக்கலாம்.நீங்கள் குழந்தைக்கு எதிபார்த்து காத்திருப்பவராக இருந்தால் உங்களுக்கு டாக்டர்கள் அதற்கு கருமுட்டை வளர்ச்சிக்கான டப்ளட்ஸ் தருவார்கள். இல்லை நான் விபரம் தெரியாமல் தொடர விரும்பவில்லை
1.உங்களூக்கு ஸ்கான் எடுத்தார்களா?
2.மாதவிடாய் வராமல் இருப்பதற்கான காரணத்தை சொன்னார்களா?
3.உங்களுக்கு தரப்படும் மாத்திரையின் தூண்டுதல் என்ன?
சொல்லுங்கோ எனக்குத்தெரிந்ததை சொல்வேன் அல்லது தெரிந்தவர்களிடம் நிச்சயம் விசாரித்து சொல்வேன்.

சுரேஜினி

சுரேஜினி,

நீங்க சொல்வது ஒரு வகையில சரி (ஸ்கேன் பண்ணனும்).

ஆனா பீரியட்ஸ் வர குடுக்கற மாத்திரை வேற, கரு உண்டாக கொடுக்கற மாத்திரை வேற. கரு உண்டாக கொடுக்கற மாத்திரைனால பீரியட்ஸ் வரலாம், ஆனா, பீரியட்ஸ் மாத்திரைனால கரு உண்டாகும்னு சொல்ல முடியாது. உதாரணத்துக்கு - கருத்தடை மாத்திரையும் பீரியட்ஸ் வரவழைக்கும். சில சமயம் irregular periods சரி செய்ய இதையும் தருவாங்க. இல்லன்ன வெறும் progesterone மாத்திரையும் கூட பீரியட்ஸ் சரி பண்ண கொடுப்பாங்க.

தம்பதியர் கருத்தரிப்பு விரும்பினா மட்டும்தான் சினை முட்டை வளர மாத்திரை தருவாங்க.

அவங்க ப்ராப்ளம் என்னன்னு தெரியாமையே நாம இங்க பேசிட்டு இருக்கோம்னு தோனுது - பெட்டெர் அவங்க டாக்டர் அவங்க பேசி பார்க்கறது தான் நல்லது.

இப்படிக்கு,
சந்தனா

//நீங்கள் குழந்தைக்கு எதிபார்த்து காத்திருப்பவராக இருந்தால் உங்களுக்கு டாக்டர்கள் அதற்கு கருமுட்டை வளர்ச்சிக்கான டப்ளட்ஸ் தருவார்கள். இல்லை நான் விபரம் தெரியாமல் தொடர விரும்பவில்லை.//

சேகர் அவர்களுக்கு இவர் முதல் குழந்தை கிடைத்து 4 வருடம் என்று சொல்லியிருக்கிறாரே சிலவேளை குழந்தைக்கு முயற்சிக்கத்தான் பீரியட்டை சரிசெய்கிறாரோ என்றுதான் நான் சொன்னேன்.

பீரியட் வர கொடுக்கப்படும் மாத்திரையால் கரு உண்டாகும் என்று நான் எங்காவது சொல்லியிருக்கிறேனா?
எதுவும் புரியாமல் பேசிக்கொண்டு இருக்கிறோம் என்பதை விபரம் தெரியாமல் தொடர விரும்பவில்லை என்று சொல்லி யிருக்கிறேனே?

சுரேஜினி

சுரேஜினி,

சில சமயம் நாம ஒன்னு சொல்ல நினைப்போம், ஆனா படிக்கறவங்க வேற மாதிரி புரிஞ்சுப்பாங்க - அப்படி தான் ஆயிடுச்சுன்னு நெனைக்கிறேன் :)

சரி பரவாயில்ல - நாம ரெண்டு பேரும் பேசினதுனால அவங்களுக்கு உபயோகமா இருந்தா சரி !!!

இப்படிக்கு,
சந்தனா

sdha சொல்வதுபோல தான் எனக்கு தெரிந்த ஒருவருக்கும் ப்ரச்சனை ஏற்பட்டது.ovarian cyst
இருந்தது என்று அறுவை சிகிச்சைக்கு பின் மாத்திரை எடுத்துக் கொண்டார்கள்.அதன் பிறகு பீரியட் வரவில்லை.scan பார்த்தார்கள் பிரச்சனையில்லை.
ஹார்மோன் டெஸ்டில் fsh hormone அளவு கூடிப்போயிருக்கிறதாம்.menopause hormone வந்துவிட்டதாக சொன்னாள்.ovaries function
ஆகவில்லையென்று டாக்டர் சொன்னார்களாம்.
முட்டை உருவாகும் மாத்திரைகள் கொடுத்தும்
பீரியட் வரவில்லையாம்.இதை சரிப்படுத்த ஏதாவது மருத்துவம் இருக்கிறதா...?
சிறுவயதில் ஏற்படும் menopause hormone க்கு ஏதாவது சிகிச்சையிருந்தாலும் சொல்லுங்கள் தோழிகளே...

பசித்தவனுக்கு பகிர்ந்தளித்தால் நீ
புசிக்கும் உணவு பெருகிவிடும்

மேலும் சில பதிவுகள்