ரியல் குலோப் ஜாமூன்

தேதி: February 8, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

ஸ்வீட் லெஸ் கோவா - 1/2 கிலோ
சமையல் சோடா - 2 பின்ச்
மைதா - 2 டேபிள்ஸ்பூன்
சர்க்கரை - 3/4 கிலோ
எண்ணெய் அல்லது நெய் - பொரிப்பதற்கு
பால் - 1 டேபிள்ஸ்பூன்


 

அகலமான பாத்திரத்தில் கோவாவை போட்டு, மைதா, பாலில் கரைத்த சமையல் சோடா கரைசலை தெளித்து சேர்த்து அழுத்தமாக தேய்த்து பிசையவும்.
கோவா மிருது தன்மை கிடைக்கும் வரை பிசையவும்.
இதனை 1 மணி நேரம் ஊற வைக்கவும்.
சிறிய உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
சர்க்கரையில் 2 கப் நீர் சேர்த்து பாகுகாய்ச்சவும்.
சிறு தீயில் எண்ணெய் அல்லது நெய்யில் ஜாமூன்களை பொரித்து சூடான பாகில் போடவும். நன்கு ஊறிய பிறகு பரிமாறவும். சுவையான குலோப்ஜாமூன் தயார்.


குலோப் ஜாமூன் என்றதும் ரெடிமிக்ஸ் வாங்கி நீரில் பிசைந்து சுலபமாக செய்து விடுவோம். சற்று மெனக்கெட்டால் அசத்தலான ஒரிஜினல் ஜாமூனை சுவைக்கலாம். எங்கள் ஊரில் குலாப்ஜாமூன் வீட்டில் செய்து விற்பவர்கள் இந்த முறையில் தான் செய்வார்கள்

மேலும் சில குறிப்புகள்


Comments

Hi Sister.கோவா என்றால் என்ன என்று சொல்வீர்களா?செய்து பார்க்க விருப்பம் என்றாலும் உங்கள் சொல்லின் விளக்கம் புரியவில்லை..I hope you will reply to my comment.Thank you and bye bye

பாலை நன்கு சுண்டக் காய்ச்சி, சீனி கலந்து (சிறிது நெய்யும் ஊற்றி) பால் கோவா செய்வார்கள். இதை அறிவீர்கள் என்று எண்ணுகின்றேன். இதில் சீனி, நெய் சேர்க்காமல், பாலை வெறுமனே சுண்டக் காய்ச்சினால் கிடைப்பதுதான் மேலே குறிப்பிட்டுள்ள கோவா. இதைக் கொண்டுதான் இனிப்பகங்களில் நிறைய மில்க் ஸ்வீட்ஸ் செய்கின்றார்கள். இது தனியே விற்பனைக்கு கிடைக்கின்றதா என்பது தெரியவில்லை. இதில் சீனி சேர்க்காததால், வெகு விரைவில் கெட்டுவிடும். எனவே, தயாரித்த உடனே இதை உபயோகப்படுத்துவதுதான் நல்லது.