வயிற்று வலி

எனக்கு மிகவும் சூட்டு உடம்பு இதனால் அடிக்கடி வயிற்று வலி வருகிறது.என் உடலை குளிர்ச்சியாக வைத்து கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்.என்னவெல்லாம் சாப்பிட வேண்டும்.விளக்கம் கொடுங்கள் தோழிகளே.

"நல்லதே நடக்கும்"

படுக்கைக்கு போகும் முன் வயற்றிலும் உள்ளங்காலிலும் விளக்கெண்ணை தடவிக்கொண்டு படுங்க... உடல் சூடு மற்றும் அதனால் வரும் வயற்று வலி நல்ல குறையும்... மத்தபடி தண்ணீர் நல்ல குடியுங்க... வியர்வை வர மாதிரி தினமும் நடை பயிற்சி அல்லது வேறு உடற்பயிற்சி/விளையாட்டில் ஈடுபடுங்க... நீர் காய் மற்றும் பழங்கள் நிறைய சாப்பிடுங்க...

ஹாய் நலமா எப்படி இருக்கிறீர்கள் நீங்கள் அடிக்கடி தயிர் மோர் மற்றும் கடல்பாசி சாப்பிடுங்கள்

என்றும் அன்புடன்

நல்லா இருக்கிங்களா? உங்களோட tips ku ரொம்ப நன்றி பா.உங்க tips எல்லா ரொம்ப easy aa இருக்கு.நா இதையே follow பண்றேன்.ரொம்ப நன்றி my dear sisters.

"நல்ல்தே நடக்கும்"

"நல்லதே நடக்கும்"

அன்பு மனோ84,
சூட்டினால் வயிறு வலிக்கும் போது நல்ல சூடான தண்ணீரில் 2ஸ்பூன் சர்க்கரையை ஆற்றி காபி போல சூடா குடியுங்கள். உடனே வலி நிற்கும். அடிக்கடி இளநீர் சாப்பிடுங்கள்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

உச்சந்தலையில் நல்லெண்ணெய் தேய்த்து ஊற விட்டு குளியுங்கள். உடல் குளிர்ச்சியடையும்.

அன்புள்ள மனோ

உடல் சூடு தனிய வாரம் ஒரு முறை வெந்தயத்தை முதல் நாள் இரவு தண்ணிரில் உற வெய்து அந்த வெந்தயத்தை அரைத்து தலையில் தேய்த்து குளித்தல் உடல் சுடு குறையும். வயிற்று வலி வரும் பொழுது நீங்கள் வாயில் வெந்தயம் போட்டுகொண்டு தண்ணீர் அல்லது மோர் குடித்தாலும் உடனே வயிற்று வலி நின்றுவிடும் . மற்றும் தினமும் தயிர் மற்றும் சர்க்கரை இரண்டும் கலந்து சாபிட்டால் உடல் குளிர்ச்சியாக இருக்கும்.

பவித்ரா பாபு

Pavithra babu

தினமும் தலைக்கு குழிக்க வேண்டும். வாரம் இருமுறை எலுமிச்சம் பழம் தேய்த்து குழித்தாலும் சூடு இரங்கும். கோதுமை பச்ச அரிசி இதெல்லாம் கொஞ்ஜம் சாப்டாம இருந்தால் அந்த ப்ரச்சனை இருக்காது.

மேலும் சில பதிவுகள்