புழுங்கல் அரிசி கொழுகட்டை

தேதி: February 9, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

புழுங்கல் அரிசி - 500 கிராம்,
உப்பு - தேவையான அளவு,
நல்லெண்ணெய் - 1 மேசைக்கரண்டி.
பூரணத்திற்கு:-
------------------
தேங்காய் - 1,
வெல்லம் - 200 கிராம்,
பொட்டுக்கடலை - 100 கிராம்,
எள் - 1 மேசைக்கரண்டி,
ஏலக்காய் - 4.


 

அரிசியை இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும்.
ஊறிய அரிசியை கிரைண்டரில் போட்டு கெட்டியாக, நைசாக உப்பு சேர்த்து அரைக்கவும்.
வெல்லத்தை நன்கு தூள் செய்து வைக்கவும்.
தேங்காயை துருவி வெறும் வாணலியில் சிவக்க வறுத்து வைக்கவும்.
பொட்டுக்கடலையை கரகரப்பாக பொடித்து அத்துடன் சேர்க்கவும்.
எள்ளை கல் அரித்து, கழுவி வாணலியில் போட்டு வறுத்து தேங்காயுடன் சேர்க்கவும்.
ஏலக்காயை தூளாக்கி, வெல்லம் சேர்த்து தேங்காயுடன் நன்கு கலக்கவும். பூரணம் தயார்.
அரைத்த மாவை வாணலியில் நல்லெண்ணெய் விட்டு கட்டி பிடிக்காமல் நன்கு வதக்கி இறக்கவும்.
மாவில் எலுமிச்சை அளவு உருணடை எடுத்து உள்ளங்கையில் வைத்து லேசாக தட்டி, இரண்டு கையின் நுனி விரல்காளாலும் சொப்பு போல் செய்து கொள்ளவும்.
அதற்குள் செய்து வைத்த பூரணத்தை நிரப்பி, மூடி ஓரங்களை பூரணம் வெளியே வராமல் ஒட்டவும்.
இதே போல் 15 அல்லது 20 செய்ததும் இட்லி பானையில் வைத்து வேக வைக்கவும்.
தொட்டு பார்த்தால் ஒட்டாமல், பளபளப்பாக வெந்ததும் எடுக்கவும்.


15 அல்லது 20 செய்ததும் வேக வைக்க வேண்டும். ரொம்ப நேரம் ஆனால் ஒட்டிய இடம் வெடித்து, பூரணம் வெளி வரும்.

மேலும் சில குறிப்புகள்