மில்க் மெய்ட் கேக் 1

தேதி: February 10, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.9 (7 votes)

 

மாஜரீன் - 250 கிராம்
மில்க் மெயிட் - 1 ரின்
மைதாமா - 400 கிராம்
ரவை - 100 கிராம்
சீனி - 250 கிராம்
முந்திரிப் பருப்பு - 100 கிராம்
உலர்ந்ததிராட்சை - 100 கிராம்
தண்ணீர் - 1 டம்ளர்
பேக்கிங்பவுடர் - 2 மேசைக்கரண்டி
பனானா எசன்ஸ் - 1/2 தேக்கரண்டி


 

ரவையை வறுத்து வைக்கவும்.
மைதாவுடன் பேக்கிங்பவுடரை சேர்த்து 5 அல்லது 6 முறை சலித்து வைக்கவும்.
மாஜரீனையும் சீனியையும் சேர்த்து க்ரீமாகும் வரை அடிக்கவும்.
பின்பு மில்க் மெயிட்டை சேர்த்து ஒரு முறை அடிக்கவும்.
மைதாவை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கலக்கவும்.
கலவை இறுக்கமாக இருந்தால் தண்ணீரை அளவாக விட்டுக் கலக்கவும்.
முந்திரி, திராட்சை, எசன்ஸ்சையும் சேர்த்துக் கலந்து கொள்ளவும்.
அவனை முன்கூட்டியே சூடாக வைக்கவும்.
கேக் ட்ரேயில் கலவையை ஊற்றி 45 நிமிடம் பேக் செய்யவும்.
ஆறிய பின் சிறிய துண்டுகளாக வெட்டிப் பரிமாறவும்.


பனானா எசன்ஸ் இல்லாவிட்டால் வெனிலா எசன்ஸ் பாவிக்கலாம். மாவை சேர்த்து அடிக்கக்கூடாது. மரக்கரண்டியால் கலக்க வேண்டும். அப்பொழுதுதான் கேக் மென்மையாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

சீனி ,மில்க் மெய்ட் சேர்த்தால் இனிப்பு ஓவரா இருக்காதா?

ஹாய் வத்சலா நலமாக இருக்கிறீங்களா?. உங்களுடைய இந்த கேக் மிகவும் நன்றாக வந்திருந்தது. நன்றி. பொதுவாக வெஜ் கேக் சரியாக வருவதில்லை. இது சரியாக வந்திருந்தது. அன்புடன் அம்முலு

அம்முலு, நான் நலமாக இருக்கிறேன். நீங்கள் நலமா?
கேக் செய்து பின்னூட்டம் அனுப்பியமைக்கு மிக்க நன்றி.

நன்றி,
"அன்பான சொல் மருந்தாக இருப்பதோடு வாழ்த்தவும் செய்கிறது"

திருமதி. அம்முலு அவர்கள் இந்த குறிப்பினைப் பார்த்து தயாரித்த கேக்கின் படம்

<img src="files/pictures/aa97.jpg" alt="picture" />

இந்தக் கேக் செய்து படமெடுத்து அனுப்பியமைக்கு மிக்க நன்றி. கேக் சூப்பராக இருக்கிறது.
அட்மினுக்கும் நன்றி.

நன்றி,
"அன்பான சொல் மருந்தாக இருப்பதோடு வாழ்த்தவும் செய்கிறது"

கேக் செய்ய மார்ஜரினுகு பதிலாக butter யூஸ் பண்ணலாமா. யூஸ் பண்ணலாம் என்றால் இதே அளவுதான் use பண்ண்ணுமா? வேறு யாருக்காவது பதில் தெரிந்து இருந்தாலும் சொல்லுங்க pls

நீங்கள் butter பாவிக்கலாம். அதே அளவுதான் எடுக்க வேண்டும்.

நன்றி,
"அன்பான சொல் மருந்தாக இருப்பதோடு வாழ்த்தவும் செய்கிறது"