தேதி: April 3, 2006
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
பச்சைப்பயறு - கால் கிலோ
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
சமையல் சோடா - கால் தேக்கரண்டி
மஞ்சள்தூள் - கால் தேக்கரண்டி
மிளகாய்த் தூள் - அரைத் தேக்கரண்டி
கடுகு - கால் தேக்கரண்டி
பெருங்காயம் - கால் தேக்கரண்டி
தண்ணீர் - அரை கப்
உப்பு - தேவையான அளவு
பருப்பை எட்டு மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து எடுக்கவும்.
பின்பு நீரை வடித்து விட்டு ஒரு துணியில் இறுக்கமாய்க் கட்டி எட்டு மணி நேரம் வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்தவுடன் கடுகு தாளித்துப் பெருங்காயம், முளை விட்ட பயறு, அரை கப் தண்ணீர், உப்பு, சமையல் சோடா, மஞ்சள்தூள், மிளகாய்தூள் ஆகியவற்றைச் சேர்த்து அரை மணி நேரம் வேகவிட்டு இறக்கவும்.