தேதி: February 12, 2009
எளிமையான முறையில் செய்யக்கூடிய தோடுகளின் செய்முறைகள் இன்னும் சிலவற்றை திருமதி. நர்மதா அவர்கள் அறுசுவை நேயர்களுக்காக இங்கே செய்து காட்டியுள்ளார். சமையல், கைவினைப் பொருட்கள் என்று எது செய்தாலும் அதை நல்ல பாங்குடன் செய்வது இவரது தனிச்சிறப்பு. இவரின் பங்களிப்புகள் அனைத்தும் மிகவும் பயனுள்ளவை. அனைவராலும் பாராட்டப்பட்டவை.
பெரிய, சிறிய, நடுத்தர அளவிலான மணிகள்
தோடு செய்யும் குண்டூசிகள்
குரடு
கொக்கிகள் (காதில் மாட்டுவதற்கு)
செய்முறை 1: ஒரு குண்டூசியில் ஒரு பெரிய மற்றும் நடுத்தர அளவிலான மணிகளை கோர்த்து இரண்டு புறமும் குண்டூசியை லூப் போல வளைத்து விடவும்.

மூன்று சிறிய மணிகளில் குண்டூசியை தனித்தனியே கோர்த்து ஒரு முனையில் லூப் போல வளைத்து விடவும்.

பின்னர் இந்த சிறிய மணிகளை பெரிய மணியின் அடியிலுள்ள லூப்பில் மாட்டி விடவும்.

மறு முனையிலுள்ள லூப்பில் காதில் மாட்டும் கொக்கியை மாட்டி விடவும். இவ்வாறு இரண்டு தோடுகள் செய்யவும். அழகான தோடு தயார்

இதேப் போல கழுத்துக்கும் செய்துக் கொண்டால் பொருத்தமாகவும் அணிய அழகாகவும் இருக்கும்.

செய்முறை 2: ஆறு சிறிய மணிகளில் குண்டூசியை தனித்தனியே கோர்த்து ஒரு முனையில் லூப் போல வளைத்து விடவும்.

ஒரு குண்டூசியில் ஒரு நடுத்தர மணியை கோர்த்து இரண்டு புறமும் குண்டூசியை லூப் போல வளைத்து விடவும். இவ்வாறு நான்கு செய்யவும்.

பின்னர் இந்த சிறிய மணிகளை இரண்டு பெரிய மணிகளின் அடியிலுள்ள லூப்பில் மூன்று மூன்றாக மாட்டி விடவும்.

பின்னர் எஞ்சிய இரு பெரிய மணிகளின் அடியில் இவற்றை மாட்டி விடவும்

மறுமுனையிலுள்ள லூப்பில் காதில் மாட்டும் கொக்கியை மாட்டி விடவும். மற்றொரு முறையில் செய்யக்கூடிய அழகிய தோடுகள் தயார்.

Comments
வாவ் நர்மதா
எவ்ளோ அற்புதமா இருக்கு. உங்களை புகழ வார்த்தை இல்லை. உங்களுக்கு நிகர் நீங்கள்தான். என்ன அழகழகான கம்மல்கள். உண்மையில் நீங்கள் நல்ல திறமைசாலி நர்மதா. வாழ்த்துக்கள். எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள் பல.
கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!
நர்மதா
வாவ் கலக்கறிங்க. பேசாமா நான் அங்கு வந்து கற்று கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.
எனக்கு இதெல்லாம் பிடிக்கும் தினம் தினம் வேற வேற மாற்றி போடுவதற்க்கு நல்லது. மேலும் நிறய்ய குடுங்க.
நர்மதா
நர்மதா அய்யோ......அழகா இருக்கே.......இன்னும் நிரைய மாடல்கல்ல செய்துகாமிங்க.
அருமை
மிக மிக அருமையாக உள்ளது. இதற்கு தேவையான பொருட்கள் US 'ல் எங்கு கிடைகிறது.
தெரிந்தால் செய்து பார்கலாம் என்று தோன்றுகிறது.நன்றி
You can never know how much good a simple smile can do :)
You can never know how much good a simple smile can do :)
பாப்பு
பாப்பு உங்க ஃஸிப் கோடு கொடுங்க கூகிள் மேப்ல வந்ததும் பீட் என்று தேடுங்க .
Give zip code in google maps - Click on earch near by - Type bead
"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..
pappuu
Michels, ACMoore, Walmart க்ராப்ட் செக்ஷனில் கிடைக்கும். மேலும் தெரிய நர்மதா வருவாங்க.
like a black pearl
நர்மதா ரொம்ப நல்ல இருக்கு,யார் பார்த்தாலும் நிச்சயம் பாராட்டுவார்கள்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.
நன்றி
நன்றி இலா,விஜி.
You can never know how much good a simple smile can do :)
You can never know how much good a simple smile can do :)
வாழ்த்துக்கள் நர்மதா
வாழ்த்துக்கள் நர்மதா, பார்க்கவே ரொம்ப...... அழகா வர்ணிக்க வார்த்தையேயில்லாத அளவிற்கு அழகாயிருக்குப்பா.
அன்புடன்:-).....
உத்தமி:-)
நன்றி.
பாராட்டிய அனைவருக்கும் நன்றி. எல்லாரும் செய்து போட்டு படம் அனுப்புங்கோ:)
-நர்மதா :)
நர்மதா
நர்மதா, நலமா? தோடு மாதிரியே பதிவும் நல்லா இருக்கு.
//எல்லாரும் செய்து போட்டு படம் அனுப்புங்கோ:)//
கட்டாயம் அனுப்புங்கோ.:-)
இமா
- இமா க்றிஸ்
எங்க கிடைக்கும் இந்த பொருட்கள்
நர்மதா ரெம்ப அழகா இருக்கு,எனக்கு இது மாதிரி தோடுகள் ரெம்ப பிடிக்கும்,இது மாதிரி ஒரு முறையாவது செய்யனும் என்று ஆசை,ஆனால் பொருள்கள் கிடைக்கல பிள்ளைகளுக்கு டிரைஸ்க்கு மேட்சா டெய்லி போட்டு விடலாம்,
துபாயில்,அபுதாபியில் எங்க கிடைக்கும் என்று யாராவது சொல்லுங்க,இல்லைன்னா இந்தியாவில் திருச்சியில் எங்க கிடைக்கும் என்று யாராவது சொல்லுங்க,ஒரு முறையாவது இது செய்ய ஆசை,
என்றும் அன்புடன்
ரேணுகா
Sacrifice anything for Love,But don't sacrifice Love for anything...
(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா
என்னன்னு சொல்லி பராட்டுவதுன்னே
நர்மதா உங்கள் கைவண்ணத்தை என்னன்னு சொல்லி பராட்டுவதுன்னே தெரியல.
எனக்கு இதோ மேட்சா போட பிடிக்கும் செய்ய கொஞ்சம் சோம்பேறி தனம்
ஜலீலா
Jaleelakamal
ரேணுகா லூ லூ பின்னாடி
ரேணுகா லூ லூ பின்னாடி ஒரு ஹோல்சேல் மார்க்கெட் இருக்கு பாருங்கள்.
அங்கு போய் பாருங்கள் ஒரு பத்து வருடம் முன் அங்கு சேலையில் கல் வைக்க மல்டி கலர் கல்லும், சுடி மற்றும் சேலையில் தைக்க மணியும் வாங்கினேன். இப்ப கூட இருக்கும் என்று தான் நினைக்கிறேன்.
அங்கு சுடிதார் மெட்டீரியல், ஸ்கிரீன் மெட்டீரியல், பெட்சீட், தலையன உறை எல்லாம் ரொம்ப சீப்பா கிடைக்கும் ஹோல்சேலில் அங்கு வந்து வாங்குபவர்கள் ரோல் ரோலாக தான் கிழிப்பார்கள், சூடானீஸ், அரபிஸ், ஈரானிஸ் எல்லோரும்.
புர்க கடை இருக்கும், அங்கேயே தையல் மெட்டீரியல் எல்லாம் கிடைக்கும், புர்கா வாச்சே அங்கு நுழையாமல் போய் விடாதீர்கல் அங்கு போய் விசாரிங்க கிடைக்கும்.
துபாய் என்றால் கேமல் பஜார் இப்ப அது எரிந்து விட்டது அதற்கு எதிரில் அல் மனால் கிட்ட பட்டன் ஹவுஸ் என்று இருக்கும் அங்கு போய் பாருஙக்ள்.
ஜலீலா
Jaleelakamal
ஜலிலாக்கா
நீங்க எந்த லூலூவில் சொல்றீங்க. அபுதாபியில் நிறைய லூலூ இருக்கே அதான் கேக்குறேன். எனக்கும் யூஸ்புல்லா இருக்கும். கொஞ்சம் விபரம் சொல்லுங்க அக்கா.
கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!
Hello நர்மதா
Hello நர்மதா ,
உங்கள் கைவினை பொருட்கள் அனைத்தும் மிகவும் நன்றாக உள்ளது.எனக்கு ஒரு சந்தேகம் இதில் சிறு மணிகள் கோர்க்க இருக்கும் குண்டூசி ,அதாவது சிறு மணிகளுக்கு ஏற்றவாறு சிறியதாக கிடைக்குமா? எனக்கு ஒரே அளவில் சற்று பெரிய ஊசி தான் கிடைத்தது நன்றாக தான் உள்ளது. சிறு ஊசிகள் இருக்கா? கிடைக்குமா? என்று சொல்லுங்களேன்.
Thank u
உமா
உமா...
நர்மதா எப்பவும் போல இதுவும் ரொம்ப அழகா இருக்கு!!
உமா சின்ன ஊசியும் கிடைக்கும் அதில் சைஸ் போட்டு இருக்கும் பாத்து வாங்குங்க
அன்புடன்
ஹாஷினி
அன்புடன்
ஹர்ஷினி அம்மா :-).
ஊசிகள்
பாராட்டிய அனைவருக்கும் நன்றி.
ஊசிகள் சிறிய அளவிலும் கிடைக்கும். அப்படி கிடைக்காத போது பெரிய ஊசியையே கட் பண்ணி செய்யலாம். கட் பண்ணி மீதமான துண்டை இரு பக்கமும் லூப் தேவைப்படும் மணிகளுக்கு பாவிக்கலாம். அல்லது வளையங்கள் செய்ய பாவிக்கலாம்.
நீட்டாகவும் அழகாகவும் லூப் போடுவதற்கு முதலில் கம்பியில் மணியை கோர்த்துவிட்டு பின்னர் கம்பியை செங்குத்தாக மடித்து (90 பாகையில்) பின்னர் தேவையான அளவிற்கு கட் செய்துவிட்டு முனையில் பிடித்து குரடால் வளைக்க அழகான லூப் கிடைக்கும்.
-நர்மதா :)
Narmatha and Haasini,
நன்றி நர்மதா , ஹாசினி.
நான் தேடி பர்க்கிறேன். மிகவும் நன்றி உடன் பதில் தந்தமைக்கு.
ஹாசினி , நீங்கள் செய்து பார்தீர்களா? எங்கே இருக்கிரீர்கள்?
நான் செய்த மாடல் நன்றாக வந்தது.
மீண்டும் நன்றி நர்மதா
உமா
romba supra irukku
romba supra irukku
hi nurmath
super wonderful pls say more
ஹலோ செல்லம் Hello Dear
ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta