மைக்ரோவேவ் குக்கீஸ்

தேதி: February 12, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.3 (4 votes)

 

1. மைதா - 1 1/2 கப்
2. பால் - 1/4 கப்
3. பட்டர் - 1 கப்
4. பவுடர்டு சுகர் - 1/2 கப் - 3/4 கப்
5. வெண்ணிலா (அ) கொகொனட் எஸென்ஸ் - 1 தேக்கரண்டி
6. வினிகர் - 1 தேக்கரண்டி


 

அனைத்தையும் சேர்த்து சப்பாத்தி மாவு போல் பிசையவும்.
இவற்றை சின்ன உருண்டை ஆக்கி லேசாக மேலே அழுத்து (பிஸ்கட் போல்) மைக்ரோவேவ் தட்டில் வைத்து பேக் செய்யவும்.
HI'ல் 1 1/2 நிமிடம் முதல் 2 1/2 நிமிடம் வரை எடுக்கும். உங்கள் மைக்ரோவேவ்'கு தகுந்த மாதிரி நேரம் மாற்றி வைக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

வினிகர் கண்டிப்பாக சேர்க்க வேண்டுமா?
8 மாத குழந்தைக்கு செய்யலாம் என்று நினைத்தேன்

மைக்ரோவேவ் சமையல்கள், குறிப்பை மாற்றினால் நல்ல ரிசல்ட் கிடைக்கும் என்று சொல்ல முடியாது. வினிகர் - குக்கி பேக் ஆகி முடியும் சமயம் வினிகராக இராது. ஒட்டுமொத்த குக்கீஸுக்கும் சேர்த்து 1 தேக்கரண்டி தானே? ஒரு குக்கிக்கு சில துளிகள்தான் வரும். பயப்படத் தேவையில்லை.

‍- இமா க்றிஸ்