ஸ்பெஷல் கொத்தமல்லி சட்னி

தேதி: February 13, 2009

பரிமாறும் அளவு: 4

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (2 votes)

 

தேங்காய் - 1/2 மூடி
கொத்தமல்லி - 1/4 கட்டு
பூண்டு - 2 பல்
இஞ்சி - சிறிய துண்டு
பச்சை மிளகாய் - 4
பொட்டுக்கடலை - 1/4 கப்
உப்பு - தேவையான அளவு
கடைசியில் தாளிக்க:
எண்ணெய் - 1 தேக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
கறிவேப்பில்லை - 5 இலை
பெருங்காயம் - 1/4 தேக்கரண்டி


 

முதலில் தேங்காயினை சிறிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.
கொத்தமல்லியை சுத்தம் செய்து வைக்கவும்.
மிக்ஸியில் தேங்காய், கொத்தமல்லி, பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய், பொட்டுக்கடலை மற்றும் உப்பு சேர்த்து சிறிது தண்ணீருடன் நன்றாக அரைத்து கொள்ளவும்.
ஒரு தாளிப்பு கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து சட்னியில் சேர்த்து கலக்கவும்.
இப்பொழுது சுவையான கொத்தமல்லி சட்னி ரெடி.
இதனை இட்லி, தோசை, பொங்கலுடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

ஹலோ கீதா ஆச்சல்,
இன்று இரவு தோசைக்கு இந்த சட்னி செய்தேன். சூப்பர் டேஸ்ட்! ரொம்ப நல்லா இருந்தது. நிஜமாவே இதன் பெயர் பொருத்தம்தான் - ஸ்பெஷல் கொத்தமல்லி சட்னி! நன்றி!

அன்புடன்
சுஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

இந்த சட்னி சூப்பர்

umarani

ஹாய் கீதா ஆச்சல், இந்த சட்னி நன்றாக இருந்தது. இட்லி, தோசை இரண்டுக்கும் மிகவும் பொருத்தமாக இருந்தது. நன்றி உங்களுக்கு.

மிகவும் நன்றி ஸ்ரீ ,வின்னி. உங்களின் உற்சாகம் என்னை மேலும் ஊகவிக்கின்றது. நன்றி.
அன்புடன்,
கீதா ஆச்சல்