என் மகனின்பள்ளிக்கு செல்வது பற்றி

என் மகனுக்கு 3.5 வயதுகுரை பிரவசதில் பிற்ந்தான் நல்லா சுறுசுறுப்பா இருப்பான் ஆனால் மிகவும் ஒல்லியாக இருப்பான்..பள்ளிகுட்தீற்கு இப்ப அனுப்பலமா? இல்லை இன்னும் 6மாதம் ஆகட்டுமா? வீட்ல சொல்லி தருகிறேன் நல்லா சொல்றான்.

தோழிகளே,
என் மகனுக்கு 31/2 வயது ஆகிறது.ஏற்கனவே டே கேர் 8 மாதங்கள் சென்றிருக்கிறான்.இப்போது தான் பள்ளியில் சேர்ந்திருக்கிறான்.ஆனால்,முதல் 3 நாட்கள் விரும்பி சென்று வந்தான்.மூன்றாவது நாளில் தூக்கத்தில் யூரின் செய்து விட்டு,நான் கொடுத்தனுப்பிய வேறு மாற்று உடையுடன் இருந்தான்.அடுத்த நாள் பள்ளிக்கு செல்ல ஒரே அழுகை.பள்ளிக்கும் செல்லவில்லை.அதற்கு அடுத்த நாள் பள்ளிக்கு சென்றவுடன் அழுது வாந்தி எடுத்ததால், எனக்கு ஃபோன் செய்து கூட்ட்டி செல்ல சொன்னார்கள்.அடுத்து 2 நாட்கள் பள்ளிக்கு செல்லவில்லை. இன்று திங்கள் கிழமை.அவனை பள்ளியில் விட்டு விட்டு வந்ததும் திரும்பவும்,வாந்தி எடுத்ததால் வந்து கூடி செல்ல சொன்னார்கள்.லேசாக காய்ச்சலும் இருந்தது.ஆனால்,வீட்டுக்கு வந்ததும் அவன் நார்மலாக விளையாடுகிறான்.டே கேருக்கு விரும்பி செல்வான்.ஆனால் பள்ளிக்கு செல்ல அழுகிறான். எனக்கு ஒரே கவலையாக உள்ளது. நான் என்ன செய்ய வேண்டும். வழி சொல்லுங்கள்.

கவிதா 4 வயதில் அனுப்புவது சிறந்தது.ஆனால் இப்படி நெனச்ச சமயத்தில் சேக்க முடியுமா..பாதியில் மட்டும் விடாதீர்கள்

ஹர்ஷா பள்ளியில் எதாவது குழந்தையை பாதிக்கும்படி அவர்கள் எதுவாவது சொல்லியிருக்கலாம்.
1)குழந்தையை கழுகி விடும் ஆயாம்மா கோபத்தில் எதுவாவது சொல்லியிருக்கலாம்
2)டீச்சர் கூட மற்ற பிள்ளைகள் முன்பு குழந்தையை ஷேமாக்கி விட்டிருக்கலாம்

பிள்ளை நல்லா பேசுவார் என்றால் என்ன நடந்தது என்று கேளுங்கள்..டீச்சர் எதுவும் சொன்னார்களா..ஆயம்மா எதுவும் சொன்னார்களா என்று கேளுங்கள்...எப்படி டாய்லெட் போக டீச்சரிடம் கேட்பது என்றும் சொல்லி கொடுங்க..தூக்கத்தில் நிறுநீர் கழிக்கும் பழக்கம் இருந்தால் ஸ்கூளில் சொல்லி தூங்க வைக்கும் முன் கூட்டி போக சொல்லுங்க.
குழந்தையிடம் ஆறுதலோடு அம்மா பள்ளியில் வந்து என்னவென்று கேட்கிறேன் என்று நல்ல மென்மையாக நல்ல சொல்களை சொல்லி கூட்டி போய் டீச்சரிடமே ப்ரச்சனையை விளக்குங்கள்...சில பள்ளிகளில் நம் வாயை அடக்க பார்ப்பார்கள்..உங்களால் பேச முடியாவிட்டால் கணவர் அல்லது தோழர்/தோழி நல்ல பேசுபவரை கூட்டி சென்று ப்ரச்சனையை மென்மையாக எடுத்து சொல்லுங்கள்..குழந்தையிடமும் நல்லபடியாக நண்பர்கள் பற்றியெல்லாம் சொல்லி நல்ல மூடில் தெவையான தூக்கம் ,உணவு கிடைக்க அணுப்புங்க.

சாதாரணமா பெரும்பாலான பிள்ளைகள் முதல் சில நாள் போக மாட்டேன் என்று சொல்லும் பிறகு சரியாகி விடும்.
என் மகள் கொஞ்ச நாள் போக மாட்டேன் என்றால் ஏனென்று ரொம்ப நாள் கழித்து தான் புரிந்தது டீச்சர் மற்றொரு பிள்ளையின் காதை திருகி அப்பிள்ளை அழுததாம். பார்த்து பயந்து விட்டது.பிள்ளைகள் கண்ணாடி போல ரொம்ப பார்த்து கைய்யாளனும்

தளிகா,
உங்கள் உடனடி பதிலுக்கு நன்றி.நீங்கள் சொல்வது உண்மை தான்.என் மகன் ரொம்ப சென்சிடிவ்.அவனது வகுப்பறையிலேயே டாய்லெட் உள்ளது. அவனே போய்ட்டு வந்துடுவான்.அன்று தூக்கத்தில் தான் யூரின் போய் இருக்கிறான்.க்ரிப் ஷீட் எல்லாம் நனைந்து இருந்தது.அன்று மாலை ஓப்பன் ஹவுஸில், அவன் டீச்சரைப் பார்த்ததும் அழ தொடங்கினான். பள்ளியில் என்ன நடந்தது என்று அவனுக்கு அந்த அளவு விவரமாக சொல்லத் தெரியாது.இரண்டு நாட்கள் வீட்டில் இருந்து,மைன்ட் ஃப்ரெஷ் ஆனதும் தான் இன்று பள்ளிக்கு கூட்டி சென்றோம்.அவன் நன்றாக தான் தூங்கி எழுந்தான்.பள்ளிக்கு செல்வதற்கு அரை மணி நேரம் முன்பே இட்லி ஊட்டி விட்டேன். நம் ஊரில் வாந்தி எடுத்தாலும் வீட்டுக்கு அனுப்ப மாட்டார்கள். ஆனால் இங்கே அனுப்பி விடுவதால்,இவன் அதையே செய்கிறானா என்றும் எனக்கு தெரியவில்லை.திரும்ப அவனை எப்படி பள்ளிக்கு அனுப்புவது?

டீச்சரை மீட் பன்னி பேசின பின் அனுப்புங்க..தனியா அனுப்ப வேண்டாம்.டீச்சர்ட பேசின பின் குழந்தையிடமும் அம்மா டீச்சரிடம் சொல்லி விட்டேன் என்று ஆறுதல் படுத்துங்கள்..சில ச்மயம் சின்ன சின்ன தன்னம்பிக்கை தரும் பேச்சுக்கள் கூட குழந்தைகளின் மனமாற்றத்திற்கு உதவும்..

தளிகா,
உங்க பதிலுக்கு ரொம்ப நன்றி.நீங்கள் சொல்வது போல் செய்கிறேன்.எனக்கும்,என்னவருக்கும் எங்கள் மகனின் பள்ளி பற்றி ஒரே கவலையாக உள்ளது.உங்க பதில் கொஞ்சம் நம்பிக்கை தருகிறது.முயற்சித்து விட்டு பதிவு போடுகிறேன்.நன்றி.

ஹர்ஷா (அன்பரசி......அதானே உங்க பெயர்???!!!)
குழந்தையிடம் முதலில் பள்ளியில் என்ன நடக்கிறது என்று பேசுங்கள். நீங்களாகவே பேச்சு கொடுங்கள். Daycare எதற்கும் என்ன வித்தியாசம் என்று கேளுங்கள். பள்ளியில் அவர்களின் ஆசிரியருடன் ஒரு நாள் appointment (conference) பிக்ஸ் பண்ணி இவனை பற்றி பேசுங்கள். தூக்கத்தில் பீ பண்ணுகிறாரா......பரவாயில்லை. நீங்கள் மாற்று துணியுடன் ஒரு புல் அப்சும் கொடுத்து விடுங்கள். இன்னொரு விஷயம் உங்கள் மகனிடம் சொல்லுங்கள் நீங்கள் அங்கேயே வெயிட் பண்ணி அவனை கூடி செல்லுகிறேன் என்று.....

லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

லாவண்யா,
உங்கள் பதிலுக்கு நன்றி. நாளைக்கு என் மகனின் மிஸ்ஸுடன் பேசுவதாக உள்ளோம்.நைட்டிலும் பீபீ போகப் பழக்கியதால்,கடந்த ஒரு மாதமாக புல் அப்ஸ் போடுவதில்லை.ஸ்கூல் என்று சொன்னாலே,அவனது முகம் வாடி விடுகிறது.ஸ்கூல் வரை அமைதியாக வருகிறான்.க்ளாஸ் ரூமில் விட்டதும் ஒரே அழுகை.நாங்கள் அங்கேயே இருந்தால் இன்னும் அழுவான் என்று,அவனது மிஸ் எங்களை அனுப்பி விடுகிறார்.

ஹர்ஷா, இந்த சூழ்நிலையில் மிகவும் குழப்பமாக இருக்கும். எல்லாம் போக போக சரியாகிடும் கவலை வேண்டாம். டே கேரில் கூடப்பழகிய நண்பர்களை மிஸ் பண்ணுவதால் கூட இவ்வாறு இருக்கலாம். ஆசிரியையிடம் பேசுங்கள் அல்லது அதிபரிடம் பேசுங்கள். சில ஆசிரியைகள் அப்படித்தான். என் மகன் ப்ரீ கின்டர்கார்டன் போன போது அந்த ஆசிரியை அவ்வளவு பொறுமைசாலி. ஒரு நாள் வகுப்பில் வாந்தி எடுத்த போது கூட எதுவுமே சொல்லாமல் சிரித்த முகத்துடனேயே சொன்னார். இதெல்லாம் மிகவும் சகஜமாக பிள்ளைகளுக்கு நிகழக்கூடியது தான். கவலை வேண்டாம்.
வாணி

வாணி,
உங்கள் பதில் ஆறுதலாக உள்ளது.என் மகனின் மிஸ்ஸூம் அன்பானவராகத் தான் தெரிகிறார்.ஆனால் என்ன பிரச்சனை என்று புரியவில்லை.எல்லா பிள்ளைகளும் வகுப்பில் அமைதியாக இருக்கும் போது இவன் மட்டும் அழுது கொண்டு இருக்கிறான்.பார்க்கவே மனசுக்கு கஷ்டமா இருக்குங்க.டே கேருக்கு செல்லும் போது ஒரு நாள் கூட அவன் அழுதது இல்லை.இது புது ஸ்கூல்.போக,போக செட் ஆயிடும்னு நினைக்கிறேன்.பார்க்கலாம்.

மேலும் சில பதிவுகள்