தேதி: February 15, 2009
பரிமாறும் அளவு: 4
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
கடலைப் பருப்பு - 1 கப்
காய்ந்த மிளகாய் - 2
உப்பு - 3/4 தேக்கரண்டி
வெங்காயம் - 1
தக்காளி - 1
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
கறிவேப்பில்லை - 5 இலை
கொத்தமல்லி - சிறிதளவு
பச்சை மிளகாய் - 2
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
தனியா தூள் - 1/2 தேக்கரண்டி
தேங்காய் பால் - 1 கப்
உப்பு - தேவையான அளவு
முதலில் தாளிக்க:
எண்ணெய் - 2 தேக்கரண்டி
பட்டை - 2
கிராம்பு - 2
ஏலக்காய் - 1
முதலில் கடலைப்பருப்பு மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து 3 மணி நேரம் ஊறவைத்து பின் மிக்ஸியில் போட்டு தண்ணீர் இல்லாமல் வடைக்கு அரைப்பது போல அரைத்து கொள்ளவும்.
அரைத்த வைத்துள்ள கடலைப் பருப்புடன் சிறிது உப்பு சேர்த்து பிசைந்து சிறிய சிறிய உருண்டைகளாக பிடித்து இட்லி தட்டில் இட்லி வேகவைப்பது போல வேகவைத்து கொள்ளவும்.
வேகவைத்த கடலைப் பருப்பு உருண்டைகள் சிறிது நேரம் ஆறிய பிறகு ஒன்றும் பாதியுமாக உதிர்த்து கொள்ளவும்.
-------------------------------------------------
வெங்காயம் மற்றும் தக்காளியை நீளமாக வெட்டி கொள்ளவும். பச்சை மிளகாயினை இரண்டாக கீறி கொள்ளவும். கொத்தமல்லியை பொடிதாக நறுக்கி வைக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளிக்கவும்.
அதன் பின் வெங்காயம், கறிவேப்பில்லை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் சிறிது வதங்கியவுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
அதன் பிறகு தக்காளி சேர்த்து மேலும் சிறிது வதக்கி மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள் மற்றும் உப்பு சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
பிறகு தேவையான அளவு தண்ணீருடன் தேங்காய் பாலினை சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும்.
கடைசியில் உதிரித்து வைத்துள்ள கடலைபருப்பினை போட்டு 5 நிமிடம் வேகவைத்து கடைசியில் கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
இப்பொழுது சுவையான வடைகறி ரெடி.
இதனை இட்லி, தோசை, சாப்பத்தி மற்றும் பூரியுடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
Comments
vadaicuury
Hai
today we prepare vadaicurry............It is siple and very tasty
anbudan
Kavitha Murukesan
Arumanai
kavitha murukesan...arumanai
vadagari seyumpothu
vadagari seyumpothu pudina serthal nanraga irukum
இந்த இணயதளம் மிகவும் உபயோகமாக
இந்த இணயதளம் மிகவும் உபயோகமாக உள்ளது.. எனக்கு மிகவும் பிடித்து உள்ளது...
very nice and thanks
very nice and thanks
kavitha murukesan...arumanai
வடைகறி,
ஹாய் கீதா,
இன்று உங்கள் குறிப்பிலிருந்து வடைகறி செய்தேன். நான் வடைகறி செய்வேன் ஆனால் தேங்காய் பால் சேர்க்க மாட்டேன். இது மிகவும் சுவையாக இருந்தது..இட்லிக்கு சூப்பர்..காம்பினேஷன்.
என்றும் அன்புடன்,
மைதிலி.
Mb
வடைகறி
மிகவும் நன்றி மைதிலி..இந்த வாரம் உங்கள் வாரம்…அனைவரும் கலக்கிடுவேம் இல்லை…
அன்புடன்,
கீதா ஆச்சல்