தாமரைக்கு பிறந்த நாள் வாழ்த்தலாம் வாங்க

தாமரை இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Patience is the most beautiful prayer!!

Patience is the most beautiful prayer!!

தாமரை ‘’’தாமரைப்பூவுக்கும் தண்ணிக்கும் என்னிக்கும் சண்டையே வந்ததில்ல’’ என்று குடும்பத்தோடு என்றும் மகிழ்ச்சியில் திளைக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

சுரேஜினி

ஹாசினி
உங்கள் வாழ்த்துக்கு மிகவும் நன்றி..இப்ப்டி ஒரு திரட் ஆரம்பித்து மகிழ்ச்சியில் திக்குமுக்காட செய்துவிட்டீர்கள்..ரொம்ப ரொம்ப நன்றிங்க..ஆனால் இவ்வளவு தாமதமாக பார்க்கிறேன் என்ற சிறுவருத்தம்..

விஜிடிவிஎம்
தங்கள் சிறப்பான வாழ்த்துக்கு எனது மனமார்ந்த நன்றிகள்..

கிருத்திகா
ரொம்ப நன்றிங்க,இப்போ மட்டும் என்ன நீங்க கொடுத்த புத்தகங்கள் அனைத்தும் எனது கம்பூட்டரில் இருக்கிறது..சந்தோஷ் ஆட்டம் தாங்கல அம்மாக்கு பிறந்தநாள்னு அவங்க அப்பா சொன்னதுல இருந்து ஆயிரம் தடவ வாழ்த்து சொல்லிருப்பான்..மழலை குரல்ல அவன் சொல்றத கேட்க்கும் போது அந்த சந்தோசத்துக்கு அளவே இல்ல..

கீதாஆச்சல்
தங்கள் அன்பான வாழ்த்துக்கு எனது மனமார்ந்த நன்றிகள்..

இமா
நாங்கள் இங்கு மிகவும் நலம்,தாங்கள் அனைவரும் நலமா?தங்கள் இனிமையான வாழ்த்துக்கு நன்றிகள்..

சாதிகா ஆண்ட்டி
ரொம்ப ரொம்ப நன்றி மேடம்,தங்கள் வாழ்த்து எனக்கு மிகவும் மகிழ்ச்சியை தருகிறது..

சாய்கீதா
ஆஹா!!!கவிதையோட வாழ்த்திருக்கிக்கீங்க? உங்கள் வாழ்த்துக்கும் கவிதைக்கும் மிகவும் நன்றிங்க..

சுகன்யா
ரொம்ப நன்றிங்க,எனக்கு என்னமோ வயசு ஏறினா சந்தோசமா தான் இருக்கு..அது ஒரு பெரிய விஷயமாவே தெரியல..இன்னைக்கு சந்தோசமாகவும்,நாளைக்கு நிம்மதியாவும் இருக்கனும் அவ்வளவுதான்..வாழ்க்கை ரொம்ப சின்னது so அப்பப்போ நல்லா enjoy பண்ணிருவேன்..ஹா ஹா..

அண்ணி
எப்படி இருக்கீங்க?அண்ணன் நல்லா இருக்காங்களா? ரொம்ப நாளா பார்க்க முடியலனு நினைச்சிட்டு இருந்தேன், இப்போ நீங்க வாழ்த்தினத பார்த்ததும் ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கு..தேங்ஸ் அண்ணி..

உத்தமி
என்னொட பிறந்த நாள்ல உங்களோட பேசினது எனக்கும் ரொம்ப ரொம்ப சந்தோசம்..தங்கள் இனிமையான வாழ்த்துக்கும் மிகவும் நன்றிங்க..எல்லோரும் சொல்ற மாதிரி உங்க பேரு வித்தியாசமாவும் அழகாவும் இருக்கு..ஏற்கனவே உங்களோட பேசனும்னு 2,3 தடவ ட்ரை பண்ணி மிஸ் ஆகிடுச்சு..இப்போ மிகவும் சந்தோசம்..

ஆஸியாமேடம்
எப்படி இருக்கீங்க? தங்கள் இனிமையான வாழ்த்துக்கு மிகவும் நன்றிங்க..

தனீஷா
தங்கள் அன்பான வாழ்த்துக்கு மிகவும் நன்றிங்க..தங்கள் பிரார்த்தனைக்கும் மிகவும் நன்றிங்க..மிகவும் சந்தோசமாக இருக்கிறது..

துஷ்யந்தி
ஆஹா!!!நீங்களும் கவிதையோட வாழ்த்தி இருக்கீங்க?நான் சந்தோசத்துல ஆடிகிட்டு இருக்கேன்..தங்களுடைய இனிமையான வாழ்த்துக்கும்,கவிதைக்கும் மிகவும் நன்றி..

செல்வி ஆண்ட்டி
தங்களுடைய வாழ்த்துக்கள் எப்படி என் கண்ணில் படாமல் போகுமா? நேத்து அவசரத்துல பார்த்தேன் ஆண்ட்டி அதனால சரியான நேரத்தில் பதில் கொடுக்க முடியாமல் போய்விட்டது..sorry aunty...தங்கள் வாழ்த்துக்களுக்கு மிகவும் நன்றி..என் ஹஸ் கிட்ட காட்டினேன்,அவரு பொருமையா எல்லாருக்கும் பதில் சொல்லிட்டு வானு சொன்னார்..

கவிஎஸ்
தங்களுடைய இனிமையான வாழ்த்துக்களுக்கு மிகவும் நன்றி,,ஷாம் நல்லா இருக்காரா?

பிரதீபா
எப்படி இருக்கீங்க? தங்களுடைய அன்பான வாழ்த்துக்களுக்கு மிகவும் நன்றிங்க..

மஹா
தங்களுடைய இனிய வாழ்த்துக்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்..எப்படி இருக்கார் யுவன்? யுவன் குட்டிக்கும் ரொம்ப தேங்ஸ்..

மேனகா
ரொம்ப தேங்ஸ்பா,உங்களோட கார்டும் பார்த்தேன்,முதன் முதலில் விஷ் பண்ணி சந்தோச கொடுத்து இப்போ இங்க வாழ்த்தும் சொல்லிட்டீங்க..ரொம்ப ரொம்ப நன்றிபா..மருமக எப்படி இருக்காங்க?

வானதி
எப்படி இருக்கீங்க?ரொம்ப ரொம்ப சந்தோசம் பா தங்களுடைய இனிமையான வாழ்த்துக்களுக்கு..

அதிரா
தங்கள் வாழ்த்துக்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்..கண்டிப்பா சொல்றேன் எப்படி கொண்டாடினோம்னு..

உத்ரா
எப்படி இருக்கீங்க? தங்கள் வாழ்த்துக்கு மிகவும் நன்றிபா..

சுரேஜினி
தங்களுடைய மனம் நிறைந்த வாழ்த்துக்கு எனது மனமார்ந்த நன்றிகள்..சண்டைனு வந்ததில்ல பா,ஆனால் செல்ல சண்டை நிறைய போடுவேன்..

சாதாரணமா நான் பிறந்த நாள அம்மா வீட்டுல இருக்கும் போது(திருமணத்திற்கு முன்) நல்லா கொண்டாடினேன்,ஆனால் மேரேனஜ் அப்புறம் சரியா கொண்டாடல..இந்த வருசம் ஞாயிறு அன்னைக்கு வந்ததோட இல்லாமல்,திங்களும் இங்க லீவு அதனால கொஞ்சம் கொண்டாட முடிஞ்சது..12மணி வரை எல்லோரும் முழிச்சிருந்தோம்,என் பையன் கூட..12.01க்கு சரியா மெழுகுவர்த்தி ஏத்திவச்சு சாக்லேட் வெட்டி(ஹா ஹா கேக் வெட்டல)..3பேரும் நல்லா சாப்பிட்டோம்..அவரு ஒரு கிரீட்டிங் கார்டு மட்டும் கொடுத்தார்,நிஜமாவே ரொம்ப அழகா இருந்தது,அதும் எப்போ வாங்கினார்னு தெரியாது சர்ப்ரைசா கொடுத்தார்..அப்புறமும் யாருக்கும் தூக்கம் வரல,என் பையன் ஆட அவரு பாடனு ஒரே கச்சேரிதான்..ஃபோட்டோ எடுத்தேன்,அவர் எங்கள எடுத்தார்..ஆனால் 3பேரும் மொத்தமா எடுக்க ஆள் இல்லாம நாங்களே ஆட்டோமேடிக் போட்டு எடுத்து,4 ஃபோட்டோக்கு ஒன்னு கூட சரியா வரல..இவ்ளோ நேரம் முழிச்சிருந்ததுக்கு காலைல யாராலயும் தூக்கி எழ மனசில்ல,அப்படியே 11 வரை தூங்கி காலைல எதும் செய்யல,நூடுல்ஸ் மட்டும் சாப்பிடோம்,எங்காவது வெளில போகலாம்னு தான் பிளான் ஆனால் குளிர்னால எங்கயும் போகமுடியல,சரினு நியூயார்க் மட்டும் போய்ட்டு சரவணபவன்ல சாப்பிட்டு வந்தோம்..அவ்வளவுதான் பா..இவ்வளவு சந்தோசமா இருந்தாலும் இப்படி குடும்பத்தோட மகிழ்ச்சியா இருக்கிறத பார்க்காமல் அம்மா அப்பா எங்கயோ ஒரு மூலைல ஃபோன்ல வாழ்த்து சொல்றாங்கனு நினைக்கும் போது என்னயும் அறியாமல் கண்ணுல தண்ணி வருது..ஆனால் இவ்வளவு அன்பா எல்லோரும் வாழ்த்துனத பார்க்கும் போது மனசுக்கு ரெக்கை கட்டி பறக்குது,என் குடும்பத்தோட இருக்கிற மாதிரி ஒரு சந்தோசம்..வாழ்த்து தெரிவிச்ச என் அன்பு தோழிகள் அனைவருக்கும் மீண்டும் என் மனம் நிறைந்த நன்றிகள்..

தாமரை நானும் என்னப்பா இன்னும் ஆளையே கானுமேனு பாத்துட்டு இருந்தேன்....எப்படியே சந்தோசம இருந்தீங்களா அதுதானே வேணும்.சரி சரி எங்களுக்கு எல்லாம் எங்கே சாக்லெட்!!!!

அன்புடன்
ஹாஷினி

அன்புடன்
ஹர்ஷினி அம்மா :-).

ரொம்ப ரொம்ப சந்தோசம்..ஆமாம்பா கொஞ்சம் பிஸி ஆகிட்டேன்னு நினைக்கிறேன்,,,அதான் வர முடியல பா..உங்களுக்கு வெறும் சாக்லேட் மட்டும் போதுமா?என்னப்பா இது சின்ன புள்ளதனமால இருக்கு,உங்களுக்கு நல்ல ஸ்டார் ஹோட்டல்ல பார்ட்டில கொடுக்கலாம்னு இருந்தேன்,,நீங்க என்னடானா சாக்லேட் கேட்க்கிறீங்க,,,சரி சரி முதல்ல இந்தாங்க சாக்லேட், எப்போ பார்த்தாலும் கண்டிப்பா பார்ட்டி வைக்கிறேன்,,நீங்க மற்றும் நம்ம ஃப்ரண்ட்ஸ் எல்லோரும் குடும்பத்தோட வரனும்..

மேலும் சில பதிவுகள்