பூந்தி

தேதி: February 15, 2009

பரிமாறும் அளவு: 4

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

Average: 3 (1 vote)

 

கடலை மாவு - 1 கப்
அரிசி மாவு - 1/4 கப்
உப்பு - 1 தேக்கரண்டி
ரெட் கலர் - 1/4 தேக்கரண்டி (விரும்பினால்)
எண்ணெய் - பொரிப்பதற்கு


 

முதலில் கடலை மாவு, அரிசி மாவு மற்றும் உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.
ரெட் கலரினை சிறிது தண்ணீருடன் கலக்கவும்.
பிறகு தேவையான அளவு தண்ணீருடன் மற்றும் ரெட் கலர் தண்ணீருடன் சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு நன்றாக கட்டி இல்லாமல் கலவையை கலந்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெயினை காயவைக்கவும்.
பிறகு பூந்தி கரண்டியால் அல்லது ஓட்டை கரண்டியால் எண்ணெயில் பூந்தியாக போடவும்.
பூந்தி நன்றாக உப்பி மேலே வரும் பொழுது சிறிது நேரம் விட்டு பொரித்து எடுக்கவும்.
இப்பொழுது சுவையான பூந்தி ரெடி.


பூந்தி மிகவும் பிரபலமான ஸ்நாக்.
பூந்தி நன்றாக குண்டு குண்டாக வரவில்லை என்றால் தண்ணீர் அதிகமாகி விட்டது. அதனால் சிறிது கடலை மாவு சேர்த்து கொள்ளவும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

Nice taste ur recipy, yesterday i tried it, very simple methoad, everyone can do this recipy Thanks a lot bye by Hema Prasanna at London.

வாழ், வாழ விடு