அவரைக்காய் வேர்க்கடலை பொரியல்

தேதி: February 16, 2009

பரிமாறும் அளவு: 4

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (2 votes)

 

அவரைக்காய் - 1/4 கிலோ
கறிவேப்பில்லை - 3 இலை
கடுகு - தாளிக்க
எண்ணெய் - 1/2 தேக்கரண்டி
உப்பு - 1 தேக்கரண்டி
வறுத்து பொடிக்க:
வேர்க்கடலை - 2 மேசைக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 2


 

முதலில் அவரைக்காயினை நுனி மற்றும் கடைசி பகுதியை நீக்கிவிட்டு பொடிதாக நறுக்கி கொள்ளவும்.
வேர்க்கடலை மற்றும் காய்ந்த மிளகாயினை சேர்த்து வறுத்து கொண்டு சிறிது நேரம் ஆறவைத்து பின் வேர்க்கடலையின் தோலினை நீக்கிவிட்டு மிக்ஸியில் பொடித்து கொள்ளவும். (தண்ணீர் ஊற்ற கூடாது).
கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து பின் அவரைக்காய் மற்றும் கறிவேப்பில்லை சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.
பிறகு உப்புடன் சிறிது தண்ணீர் சேர்த்து தட்டு போட்டு மூடி வேகவிடவும்.
கடைசியில் இறக்குவதற்கு முன் வேர்க்கடலை பொடியினை சேர்த்து கிளறிவிடவும்.
மிகவும் சுவையான அவரைக்காய் வேர்க்கடலை பொரியல் ரெடி.


மேலும் சில குறிப்புகள்


Comments

hi i tried your recipe,it came out so well.it was so tasty.thanku for giving such simple n tasty recipe.i have just started cooking and your simple recipe was easy for me to cook.thanku once again

அவரைக்காய் வேர்கடலை பொரியல் நன்றாக இருந்தது

Hello. I have tried this dish today. It came out very well. Thanks a lot.

இதுவும் கடந்து போகும்.

அவரைக்காய் வேர்க்கடலை பொரியல். சுப்பர்.
"Eliminate the time between the idea and the act."

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

மிகவும் நன்றி இலா.
எப்படி இருக்கிங்க. என்னுடைய தங்கை MD MMCயில் சேர்ந்து இருக்கா. உங்களுக்கு அப்புறம் போன் பேசிறேன்.
அன்புடன்,
கீதா ஆச்சல்

ஹாய் கீதா அச்சல்,

இன்று உங்கள் அவரைக்காய் வேர்க்கடலை பொரியல் ரொம்ப நல்லா இருந்தது. மிக்க நன்றி.

என்றும் அன்புடன்,
மைதிலி,

Mb

மிகவும் நன்றி மைதிலி.
அன்புடன்,
கீதா ஆச்சல்