சமைத்து அசத்தலாம் - 8, எல்லோரும் வாங்கோ பிளீஸ்!!

அன்புத் தோழிகளே....

சமைத்து அசத்தலாம் பகுதி 7, இனிதே நிறைவேறிவிட்டது. அதேபோல், இது பகுதி -8 உம் இனிதே நிறைவேற, எல்லோரும் கலந்துகொள்ளவேண்டும் எனத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

நாம் இங்கே நகைச்சுவை, பாட்டு, பட்டிமன்றம்,கவிதைகள், இன்னும் எத்தனையோ எத்தனையோ எல்லாம் கதைக்கிறோம், அதேபோல், இதற்கும் கொஞ்சம் நேரம் ஒதுக்குவோம். நான் என்ன சொல்லவருகிறேன் என்றால், இங்கே கூட்டாஞ்சோறில், அதிகம் குறிப்புக்களில் ஆரம்பித்து, அப்படியே இறங்குவரிசையில் ஒவ்வொருவரின் குறிப்புக்களிலும், ஏதோ எம்மால் முடிந்ததை வாரா வாரம் செய்து இங்கே போடுவோம்.

பின்னூட்டங்களை குறிப்புக்களின் கீழ் அனுப்பவேண்டும், ஆனால் என்ன என்ன செய்தீர்கள் என்பதை இங்கே தெரிவிக்க வேண்டும். உடனுக்குடன் தெரிவித்துவிடுங்கள், அப்போதான் கணக்கெடுக்கும்போது தவறாமல் இருக்கும். நாள் போனால் என்ன செய்தோம் என மறந்துவிடலாம், பின்னர் லிஸ்ட் வந்ததும்தான் நினைவுவரும். எனவே தயவு செய்து, செய்யச் செய்ய இங்கே தெரிவியுங்கள்.

குறைந்தது இரு குறிப்புக்களாவது செய்ய வேண்டும், நாளை திங்கட் கிழமை வனிதாவினுடையதையும்(175), சாந்தியினுடையதையும்(29) சேர்த்துச் செய்யப்போகிறோம். (இதற்கான விளக்கம் தேவையெனில், தயவுசெய்து (பகுதி-5)arusuvai.com/tamil/forum/no/10530?from=90&comments_per_page=30 இன் பதிவுகளைப் பாருங்கள்),முடிந்தவரை இருவரது குறிப்புக்களிலிருந்தும் தெரிவு செய்து, செய்யுங்கள். வரும் செவ்வாய்க்கிழமை (24/02) முடிவடையும். புதன்கிழமை(25/02), செய்தவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டு, அசத்தல் ராணி யார் என்பதும் தெரியவரும்.. இப்படிச் செய்வதால் எல்லோரது குறிப்பையும் செய்து பார்த்து அவர்களை ஊக்குவிக்க ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும் என நினைக்கிறேன்.

எல்லோரும் வாங்கோ, யார் யாரெல்லாம் இணைகிறீங்கள் என்பதை வந்து சொல்லுங்கள். இனி ஏதாவது சந்தேகங்கள் குறைபாடுகள் இருப்பின் கேளுங்கள்.. அப்பப்ப வருவேன்.

நன்றி,
"ஒரு கை தட்டினால் சத்தம் வராது, பல கைகள் இணைந்தால்

எம்மோடு இணைந்து குறிப்புக்கள் செய்பவர்களுக்கும், எம்மை ஊக்குவித்து வாழ்த்துபவர்களுக்கும் மிக்க நன்றி.

நேரத்திற்கு கணக்கெடுத்து, சரியான நேரத்துக்கு பட்டியலை வெளியிட்டு எல்லோரையும் அசத்தும் ரேணுகாவிற்கும் மிக்க நன்றி.

ஸ்ரீ, இமா, வானதி, கிருத்திகா, வனிதா, ESMSசெல்வி, இலா, மனோகரிஅக்கா,ரேணுகா, துஷ்யந்தி, தனிஷா, வத்சலா, அரசி, இந்திரா, மாலி, ஜலீலாக்கா, சுரேஜினி, ஆசியா, சாய் கீதாலஷ்மி, மேனகா, விஜி, உத்தமி, சீதாக்கா, பிரியா, மனோ அக்கா, காயத்ரி, கீதா ஆச்சல், சாதிகா அக்கா, மாலதியக்கா, கவி எஸ், அம்முலு, சுகன்யா பிரகாஷ் .. அனைவருக்கும் மிக்க நன்றி. கலந்துகொள்ள முடியாமல் போனவர்கள், இம்முறை கலந்துகொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

மற்றும் , முடியுமானவர்கள் ஸ்டெப் பை ஸ்டெப் ஆகவோ அல்லது முடிவிலோ படமெடுத்து அட்மினுக்கு அனுப்பி வையுங்கள். ஸ்டெப் பை ஸ்டெப்பாக படமெடுக்க நினைப்பவர்கள், முன்கூட்டியே தெரிவித்துவிடுங்கள் எந்தக் குறிப்பிற்கு எடுக்கப் போகிறீங்கள் என்று.

நாளை திங்கட்கிழமை(16/02) சமைக்கத் தொடங்குவோம், புது வருடத்தில் நிறைய சமைத்து அறுசுவையில் ஒரு புதுப் புரட்சியைக் கொண்டுவருவோம்..... எல்லோரும் வாங்கோ......

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அதிரா & ரேணுகா, இருவரும் நலமாப்பா?
பிள்ளையார் சுழி போட்டுவிட்டேனப்பா. சாந்தியின் குறிப்பிலிருந்து கோதுமை தோசை & வெஜ் பிரியாணி என் லிஸ்ட்டில் சேர்த்துக்கோங்கப்பா.

காலை உணவு கோதுமைதோசையும், மதியத்திற்கு வெஜ் பிரியாணியும் செய்து ஹஸ்ஸுக்கும், மகனுக்கும் பேக் செய்து கொடுத்தாச்சுப்பா. அரிசிமாவு கலந்ததால் தோசை நன்றாக இருந்தது. நான் வழக்கமாக கோதுமை மாவோடு ரவை மட்டும் கலப்பேன், இன்று அரிசிமாவு, ரவை இரண்டும் சேர்த்தேன் நன்றாக வந்தது.

அன்புடன்:-)................
உத்தமி:-)

குழாய்புட்டு பட்டம் அளித்த அதிராவுக்கு நன்றி!! நான் இந்த முறை சீக்கிரமே வண்டியில் ஏறியாச்சி வனிதாவின் முட்டை தொக்கு செய்தேன் இன்று இன்னும் சாப்பிடலை. சாப்பிட்டு பின்னூட்டம் அளிக்கிறேன்

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

நான் வனிதாவுடைய கீரைசாதம், முட்டை மசாலா அப்புறம் மசாலா டீ பொடி. பின்னூட்டம் கொடுத்து விட்டேன்

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

இன்று நான் செய்தது வனிதாவின் -கீரை சாதம், உருளைபொரியல்.

சவுதி செல்வி

அதிரா & ரேணுகா, டின்னருக்கு வனிதாவின் குறிப்பிலிருந்து மின்ட் ரொட்டி செய்தேன், என் லிஸ்ட்டில் சேர்த்துக்கோங்கப்பா.

அன்புடன்:-)..........
உத்தமி:-)

ஹாய் அதிரா,
என்னையும் இதிலே சேர்த்துக்கோங்க!

நான் ப்ரட் அல்வா செய்தேன் (சாந்தியின் ). எக்சலன்ட்...
நான் நாளை பார்க்கவில்லை.. அதனால் போன சனிக்கிழமை செய்தேன்.. இனி கண்டிப்பாக ப்ளான் பண்ணியே செய்கிறேன்...
போட்டோவை அட்மினுக்கா அனுப்பனும்??

எனது குறிப்புகளா இந்த வாரம்?! இப்பவே பயம் பிடிச்சுகிச்சு. ஆண்டவா எல்லாருக்கும் எல்லாம் நல்லா வரணும்.

முதல்ல தாமதமா வந்ததுக்கு மன்னிக்கணும். நேற்று வீட்டில் ஒரு விருந்து, இன்னைக்கு நல்லா தூங்கிட்டேன். ;)

அதிரா, ரேணுகா.... மிக்க நன்றி, பல நாள் குறிப்பு குடுத்து விட்டு என்னடா இதை யாரும் பார்க்கவே இல்லை என்று நினைத்தது உண்டு. உங்களால் இன்று அவை அனைத்தையும் நம் தோழிகள் பார்த்து, சமைத்து என்னை உர்சாக படுத்துகிறார்கள். ஸ்பெஷல் நன்றிகள்.

இதில் பங்கு கொண்டு சமைத்து எனக்கு பின்னூட்டம் தந்து என்னை சந்தோஷ படுத்தி கொண்டிருக்கும் அனைவருக்கும் மிக்க நன்றி.... தொடர்ந்து செய்து என்னை சந்தோஷத்தில் தினர வைக்க வேணும். ;) எந்த சந்தேகமா இருந்தாலும் சொல்ல காத்திருக்கேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

உத்தமி வாங்கோ முதலாவதாக வந்திருக்கிறீங்கள் அதனால் நிறைய செய்யவேண்டும்:) மிக்க நன்றி. தொடர்ந்து செய்யுங்கள்

இலா வாங்கோ மிக்க நன்றி. பட்டமளித்ததால்தான் வந்திருக்கிறீங்கள் வேளைக்கே. பறவாயில்லை பட்டம் வேலை செய்கிறது:) தொடர்ந்து செய்யுங்கள் இலா.

தனிஷா, ESMSசெல்வி, வாங்கோ மிக்க நன்றி. தொடர்ந்து செய்யுங்கள்.

சுபா வாங்கோ. மன்னிக்கவும், திங்கள் கிழமையிலிருந்து செய்தவற்றையே கணக்கில் சேர்ப்போம். பறவாயில்லை.. தொடர்ந்து செய்யுங்கள் மிக்க நன்றி. படம் எடுத்தால் அட்மினுக்கே அனுப்புங்கள்.

வனிதா வாங்கோ, ஆரம்பத்திலேயே வந்து எல்லோரையும் ஊக்குவிப்பதற்கு மிக்க நன்றி. நான் நலம் இல்லை, அதனால் இன்று என்னால் எதுவும் செய்ய முடியுமோ தெரியாது. முடிந்தால் ஒன்றாவது செய்வேன். உண்மைதான், நான்கூட இப்படி ஒரு தலைப்பு போட்டபின்னரே, கூட்டாஞ்சோறு திறந்து பார்க்கிறேன். முழுவதும் செய்யமுடியாது போனாலும், ஒவ்வொருவரின் குறிப்புக்களில் என்னவெல்லாம் இருக்கிறது என்பதெல்லாம் அறிந்து வைக்கக்கூடியதாகவிருக்கு, பின்னாளில் ஒரு தேவைக்கு உடனே செய்யலாம்.

ஆரம்பமாகிவிட்டதே எல்லோரும் வாங்கோ....

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

இன்று மதியம் வனிதாவின் தக்காளி சாதமும், பீன்ஸ் பிரட்டலும் செய்தேன். பின்னூட்டம் இன்னும் ஜெயந்தி மாமி, வஜிதாவின் குறிப்பிற்கே கொடுத்து முடிக்கலை.
நேரம் கிடைக்கும்போது கொடுக்கிறேன்.
அதுவுமில்லாமல், அறுசுவைக்கு என்மேல் என்ன கோபமோ தெரியலை, ரொம்ப லேட்டா ஓப்பன் ஆகுது. அப்பப்ப கொடுக்க முடியாட்டி சேர்த்து வைத்து பதிவு போட்றேன். தப்பா நினைக்க வேண்டாம்.
நன்றீ!

மேலும் சில பதிவுகள்