முள்ளங்கி பச்சடி

தேதி: February 16, 2009

பரிமாறும் அளவு: 3 நபர்கள்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

முள்ளங்கி - 200 கிராம்
சின்ன வெங்காயம் - 50 கிராம்
பச்சை மிளகாய் - பெரியது ஒன்று
தயிர் - ஒரு கப் (125கிராம்)
எலுமிச்சை பழம் - 1
உப்பு - 1 டேபிள்ஸ்பூன்


 

முள்ளங்கியை தோல் சீவவும். அதை துருவியில் துருவிக் கொள்ளவும்.
வெங்காயம் பச்சைமிளகாயை பொடியாக நறுக்கவும்.
முள்ளங்கியில் எலுமிச்சைப்பழத்தை பிழிந்து உப்பு போட்டு பத்து நிமிடம் ஊறவைக்கவும்.
பின் அதனுடன் வெங்காயம் பச்சை மிளகாய் தயிர் ஊற்றி கலக்கி சாப்பிடவும்.


இது பிரியாணியுடன் சாப்பிட மிக நன்றாக இருக்கும்

மேலும் சில குறிப்புகள்